Published:Updated:

``2024-ல் என்னை சார்ந்திருக்க வேண்டாம்!” - எம்.பி-க்களுக்கு மோடி சொன்ன அட்வைஸ்

``நீங்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்களிடம் இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது. உங்களில் தொகுதிகளுக்குத் தேவையானவற்றை செய்து முடிக்க வேண்டும்.”

மோடி
மோடி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. கடந்த முறை பெற்ற வெற்றியைவிட இந்த முறை பெரும் வெற்றியைப் பெற்றது. பா.ஜ.க-வில் பல தொகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குத் தேர்வான கன்னி உறுப்பினர்களை மோடி சந்தித்துப் பேசினார். மேலும், உறுப்பினர்களுக்குத் தன்கையால் விருந்து பரிமாறியுள்ளார்.

``2024-ல் என்னை சார்ந்திருக்க வேண்டாம்!” - எம்.பி-க்களுக்கு மோடி சொன்ன அட்வைஸ்

இந்தக் கூட்டத்தில், தான் இந்திய அணிக்கு அறிமுகம் ஆகும்போது இருந்த அதே உணர்வுடன் இருந்ததாகக் கூறிகிறார் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் கிழக்கு டெல்லியின் எம்.பி-யுமான கம்பீர்.

பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடர்பாக கம்பீர், ``நான் எனது டெஸ்ட் அறிமுகப் போட்டியின்போது டிரெஸ்ஸிங் ரூமில் மிகவும் பதற்றமான உணர்வில் இருந்தேன். அது வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டி. ஆனால், 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தின்போது அதே டிரெஸ்ஸிங் ரூமில் உற்சாகமான நிலையில் இருந்தோம்.

கம்பீர்
கம்பீர்

பா.ஜ.க எம்.பி-க்களின் கூட்டம், எனக்கு இந்திய அணியுடனான சில வரலாற்று தருணங்களை நினைவூட்டுவதாக இருந்தது. ஆனால், இந்த முறை தேசிய அரசியல் தொடர்பானதாக இருந்தது. நாங்கள் உணவு உண்ணும்போது மோடி, எங்களுக்கு உணவுகளை பரிமாறியபோது நாங்கள் அனைவரும் அதிர்ச்சியாகப் பார்த்தோம்.

`கோபப்பட்டார்; உடனே திரும்பிவிட்டார்!'- மோடியின் ஷூட்டிங் சர்ச்சைக்கு அதிகாரியின் விளக்கம்

அவர் கூட்டத்தில் எங்களிடம் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொன்னார். அவர் எங்களை பாசிட்டிவ் மனநிலையிடன் பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர், ``நீங்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்களுக்கு இன்னும் நான்கரை ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது. உங்களில் தொகுதிகளுக்குத் தேவையானவற்றை செய்து முடிக்க வேண்டும். 5 ஆண்டுகளில் உங்கள் தொகுதியில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவாருங்கள். அப்படிச் செய்துவிட்டீர்கள் என்றால் வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் நீக்கள் மீண்டும் வெற்றிபெற எனது பெயரோ, வேறு நற்சான்றிதழோ, எதுவும் தேவைப்படாது” என்றார்.

கம்பீர்
கம்பீர்

பிரதமர் மேடையில் இருந்து கீழே வந்து எங்களுடனே அமர்ந்து பேசினார். இது எங்களுக்கும் அவருக்குமான இடைவெளியை குறைத்ததாக உணர்கிறேன். அவரின் நிர்வாக உணர்வு என்னை மிகவும் கவர்ந்தது. அவரது பேச்சில் மீண்டும் மீண்டும் அவர் சொன்னத்து களத்தில் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதுதான்” என்றார். மேலும் கம்பீர், ``இங்கு குழுவாக இயங்குவதுதான் முக்கியம் என்றார் மோடி. இறுதியாக அனைத்து உறுப்பினர்களிடமும் உடல்நிலையில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குடும்பத்துக்குக்காகவும் நேரம் செலவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முடித்தார்” என்றார் கம்பீர்.

News Credit - TOI