Published:Updated:

``இணையவும் முடியாது; கைப்பற்றவும் முடியாது” - சசிகலா விவகாரத்தில் ஸ்ட்ரிக்ட் காட்டும் எடப்பாடி

மேடையில் பேசும் சசிகலா

அ.தி.மு.க-வில் எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பில் இல்லாமல், நடுநிலையாக 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். அவர்களிடமும் சசிகலா தரப்பிலிருந்து பேசினார்கள். முன்னாள் அமைச்சர்களில் சசிகலா சமூகத்தைச் சேர்ந்தவகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

``இணையவும் முடியாது; கைப்பற்றவும் முடியாது” - சசிகலா விவகாரத்தில் ஸ்ட்ரிக்ட் காட்டும் எடப்பாடி

அ.தி.மு.க-வில் எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பில் இல்லாமல், நடுநிலையாக 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். அவர்களிடமும் சசிகலா தரப்பிலிருந்து பேசினார்கள். முன்னாள் அமைச்சர்களில் சசிகலா சமூகத்தைச் சேர்ந்தவகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Published:Updated:
மேடையில் பேசும் சசிகலா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக 33 ஆண்டுகள் உடனிருந்தவர்... ஜெயலலிதா எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் பின்புலமாக இருந்தவர்... இன்னும் சொல்லப்போனால், சசிகலா எடுக்கும் பல முடிவுகளைத்தான் ஜெயலலிதா அமல்படுத்தினார் என்றும் சொல்வார்கள். அ.தி.மு.க-வின் அதிகார குவியலாக, சின்னாம்மா என்கிற அடையாளத்துடன் பவனிவந்த சசிகலாவை, இன்று அ.தி.மு.க-வுக்குள்ளேயே என்ட்ரி ஆகாதபடி தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கழக ஒருங்கிணைப்பாளர்கள்.

ஜெயலலிதா, சசிகலா
ஜெயலலிதா, சசிகலா

"சசிகலா எதிர்காலத்தில் அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவாரா? அல்லது குறைந்தபட்சம் இணைந்தாவது செயல்பட வாய்ப்புள்ளதா?" என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``சசிகலா அ.தி.மு.க-வைக் கைப்பற்றுவதற்கான அத்தனைக் கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. குறைந்தபட்சம் ஒரு உறுப்பினராக இணைந்து செயல்படத் தயார் என்று சசிகலா பொதுவெளியில் அறிவித்தால், அதற்கும் வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக டெல்லி பா.ஜ.க தலைமை சசிகலாவையும், தினகரனையும் இணைத்துக்கொள்ளலாம் என்று எடப்பாடியிடம் பேசிப்பார்த்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆனால், எடப்பாடி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மனதளவில் ஓ.பி.எஸ் தயாராக இருந்தும், உதட்டளவில் அவரும் ஓகே சொல்லவில்லை. அதனால், நூற்றுக்கு நூறு சதவிகிதம் சசிகலா அ.தி.மு.க-வுக்குள் வரமுடியாது என்று டெல்லியிலேயே முழங்கினார் எடப்பாடி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறையிலிருந்து விடுதலையாகி இத்தனை மாதங்களாகியும், சசிகலாவினால் அ.தி.மு.க-வுக்குள் துரும்பையும் நகர்த்த முடியவில்லை. தலைமை மீதிருந்த வெறுப்பின் காரணமாக சிலர் சசிகலாவை சந்தித்து ஆதரவு கொடுத்தனர். அவர்களும் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர். இவ்வாறு சுமார் 400-க்கும் மேற்பட்டோரை அ.தி.மு.க தலைமை நீக்கியிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா.
எடப்பாடி பழனிசாமி - சசிகலா.

இந்நிலையில், கடவுளைத் தவிர நமக்கு வேறு துணையில்லை என்று எண்ணி, தமிழகம் முழுக்க ஆன்மிகச் சுற்றுப்பயணம் செய்துவருகிறார் சசிகலா. அ.தி.மு.க-வில் எடப்பாடி மற்றும் பன்னீர் தரப்பில் இல்லாமல், நடுநிலையாக 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். அவர்களிடமும் சசிகலா தரப்பிலிருந்து பேசினார்கள். முன்னாள் அமைச்சர்களில் சசிகலா சமூகத்தைச் சேர்ந்தவகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அனைவரும் குறிப்பிடும் ஒரே விஷயம் வைட்டமின் `ப’

ஜெயலலிதாவுடன் இருந்த காலக்கட்டத்தில், சசிகலாவுக்கு வந்த நிதி ஆதாரங்கள் பெரும்பாலும் அவரது குடும்பத்தினர் பெயரில் இருக்கிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு பெரும் உதவியை சசிகலா செய்தார். அதற்கு அவரும் கணக்குக் காட்டிவிட்டார். சசிகலாவுக்கென போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே ஒரு இல்லம் கட்டப்படுகிறது. அந்த வீட்டின் வேலையும் இன்னும் முடிந்தபாடில்லை என்பதால், தன் உறவினரான இளவரசியின் மகள் வீட்டில்தான் அடைக்கலமாகியிருக்கிறார். இதுபோக, பிரதமர் மோடியுடன் சமரசம் செய்துகொள்ள அவர் எடுத்த முயற்சிகளெல்லாம் பயனற்றுப் போயின.

விவேக், தினகரன்
விவேக், தினகரன்

அரசியல்ரீதியாக ஒதுங்கியிருப்பதென சசிகலா எடுத்த முடிவையே டெல்லியும் தற்போதைக்கு விரும்புகிறது. 2023-ம் ஆண்டு தொடக்கத்தில்தான், தமிழகத்தில் எம்.பி சீட்களை பிடிப்பதற்கான வியூகத்தை பா.ஜ.க வகுக்கவிருக்கிறது. அதுவரையில், சசிகலாவின் தீவிர அரசியல் முன்னெடுப்புகளை டெல்லி விரும்பவில்லை. அதனால், வெளியே கொடுத்து வைத்திருக்கும் நிதியை தைரியமாக எடுக்க சசிகலாவுக்கு வாய்ப்பே அமையவில்லை.

அ.தி.மு.க-வில் சாதாரண உறுப்பினராக இணைத்துக் கொள்ளக்கூட எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. அவர் தரப்பில், 'சாதாரண உறுப்பினராகச் சேர்ந்தாலும் மதிப்புமிக்க ஒரு பொறுப்பையாவது கொடுத்தாக வேண்டும். அப்படிக் கொடுக்கப்படும் பட்சத்தில், சில ஆண்டுகளில் நிர்வாகிகளை மொத்தமாக அவர் பக்கம் திருப்பி, பன்னீரையும் கைக்குள் போட்டுக்கொண்டு தங்களுக்கு எதிராகவே காய்நகர்த்துவார்' என்று தயங்குகிறார்கள். எந்த வகையிலும் சசிகலா என்ட்ரி கொடுத்துவிடக்கூடாது என்பதால்தான், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை பொதுக்குழு நினைத்தாலும், ஒருங்கிணைப்பாளர்களே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதாக கட்சி விதியையே மாற்றியமைத்துவிட்டனர்.

பன்னீர் செல்வம்
பன்னீர் செல்வம்

மேலும், தற்போது கட்சியிலிருக்கும் மாவட்டச் செயலாளர்களில் இருந்து, கிளைச் செயலாளர்கள் வரை பெரும்பான்மையாக எடப்பாடியை ஆதரிப்பதால், தேர்தலே நடத்தாமல் இருப்பவர்களை அதே பதவியில் தொடரவைத்து உட்கட்சித் தேர்தலை முடித்துவிட்டது தலைமை. அடுத்து, இம்மாத இறுதியில் பொதுக்குழு கூட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அதனை ஜூன் இரண்டாம் வாரத்துக்குத் தள்ளிவைத்துவிட்டனர். பொதுக்குழுவிலும் பெரிய மாற்றங்கள் இன்றி, எடப்பாடியின் ஆதரவாளர்களே தொடருகிறார்கள். அதனால், எடப்பாடி இருக்கும்வரை ஒருபோதும் சசிகலாவினால் கட்சிக்குள் வரவே முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை!” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism