Published:Updated:

"மோடியிடம் நேரடியாக 'நோ' சொன்ன எடப்பாடி..." - அ.தி.மு.க Vs பா.ஜ.க போக்கு!

'தமிழகத்தில் நமது ஆட்சி தொடரவேண்டும் என்ற தமிழக மக்களின் விருப்பமே இடைத்தேர்தல் வெற்றி' என்று குறிப்பிட்டார்.

எடப்பாடி
எடப்பாடி

''ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு பொதுவெளியில் கடும் கண்டனங்களைச் சம்பாதித்திருக்கிறது. 'ஆம்பள' என்கிற சொல் பதத்தையே பலரும் அநாகரிகத்தின் உச்சம் என்கிறார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்கிற பாலினச் சமத்துவத்தைக் கேள்விக்குறியாக்கி யிருக்கும் அவரின் பேச்சை சுட்டிக்காட்டும் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும், 'பெண் என்றால் இளக்காரமா?' என்று கொந்தளிக் கிறார்கள். மற்றொரு தரப்போ, 'இது பன்னீர் தரப்பையும் ஆடிட்டரையும்வைத்து தமிழகத்தில் பா.ஜ.க ஆடப்போகும் ஆட்டத்துக்கான டிரெய்லர்' என்கிறது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2QSDJX2

அதே கூட்டத்தில் தமிழருவி மணியன் பேசியதைக் கவனித்தீரா? 'ஊழலைச் சகித்துக்கொள்ள மாட்டேன் என முழங்கும் பிரதமர் மோடி, தமிழகத்தில் நடக்கும் மோசமான ஆட்சியை எப்படிச் சகித்துக்கொள்கிறார்? பத்து அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடத்தினாலே பல நூறு கோடி ரூபாய் கிடைக்கும். அந்தப் பணத்தை எண்ணுவதற்கே காலம் போதாது' என்று ஊழலைச் சுட்டிக்காட்டியதுடன், 'இந்த ஆட்சியைக் கலைத்துவிட்டு ஆறு மாதங்களில் ஆளுநர் ஆட்சியைக் கொண்டுவந்து, மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் பா.ஜ.க வளரும்' என்றும் ஐடியா கொடுத்திருக்கிறார்.''

"மோடியிடம் நேரடியாக 'நோ' சொன்ன எடப்பாடி..." - அ.தி.மு.க Vs பா.ஜ.க போக்கு!

''இதற்கும் ஆடிட்டர் பேச்சுக்கும் என்ன சம்பந்தம்?''

''எடப்பாடியின் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்வார்கள். அதற்குக் காரணமாக 'ஊழல் ஆட்சி' என்ற கோஷத்தை முன்வைப்பார்கள். இதில் பன்னீர் தரப்பினரைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்படும். ஊழல் அமைச்சர்கள் உள்ளே போவார்கள். அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். லஞ்ச அதிகாரிகள் கைதாவார்கள். நீண்டகாலமாக நடக்காத பல வேலைகள், பெரிய திட்டங்கள் வேகமாக நடக்கும். ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்படும். மக்களே இந்த ஆட்சி நன்றாக இருக்கிறது என்று பேசும் அளவுக்கு ஆளுநரின் ஆட்சி நடக்கும். அப்போது 'பா.ஜ.க ஆட்சிதான் இது' என்று சொல்லி, பா.ஜ.க தலைமையில் ஒரு கூட்டணியை அமைப்பார்கள். இதற்கான அடித்தளம்தான் ஆடிட்டரின் பேச்சு. 'பன்னீரால்தான் சசிகலாவிடமிருந்து அ.தி.மு.க காப்பாற்றப்பட்டிருக்கிறது' என்று அவர் சொன்னதுதான் கலகத்துக்கான முதல் குரல்.''

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

''ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பும் பா.ஜ.க-வுடன் இணக்கமாகத்தானே இருக்கிறது.''

''சமீபகாலமாக மாறிவருகிறது அவரின் போக்கு என்கிறார்கள். ஏன்... பொதுக்குழுவில் எடப்பாடியின் பேச்சைக் கவனித்தீரா? நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி, இடைத்தேர்தலில் வெற்றியை ஒப்பிட்டு அவர் பேசுகையில், 'தமிழகத்தில் நமது ஆட்சி தொடரவேண்டும் என்ற தமிழக மக்களின் விருப்பமே இடைத்தேர்தல் வெற்றி' என்று குறிப்பிட்டார். அதாவது, 'தமிழக மக்கள் பா.ஜ.க ஆட்சியை விரும்பவில்லை' என்றரீதியில் முதல்வரின் பேச்சு இருந்தது. அதேபோல், 'நாங்கள் அடிமைக் கட்சி என்கிறார்கள். ஆனால் எந்த ரூபத்திலும் நாங்கள் பா.ஜ.க-வுக்கு அடிமையாக இல்லை. இணக்கமான உறவு மட்டுமே இருக்கிறது' என்றும் பேசியிருக்கிறார்.

'பா.ஜ.க-வினர் இதற்கெல்லாம் நேரடியாக பதில் சொல்வார்களா என்ன... சி.பி.ஐ விசாரித்துவரும் குட்கா வழக்கை தற்போது அமலாக்கத் துறை கையில் எடுத்திருக்கிறது. டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு தமிழக குட்கா வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதைப் பட்டியலிட்டு அவற்றை விசாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் தொடர்ச்சியாகத்தான் ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரனை வரும் டிசம்பர் 2-ம் தேதியும், ஐ.ஜி-யான தினகரனை டிசம்பர் 3–ம் தேதியும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துள்ளனர். அடுத்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடக்கும் என்கிறார்கள்.

சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு விஷயத்தைப் பேசியதாகக் குறிப்பிடுகிறார்கள்.

'`இத்தனை நாள்களாக அமைதியாக இருந்துவிட்டு, குட்கா வழக்கில் திடீர் பாய்ச்சல் காட்ட ஆரம்பித்திருப்பதற்கும் பின்னணி இருக்கிறது. சமீபத்தில் தகவல் தொடர்பு தலைமை ஆணையராக கவர்னரின் செயலாளராக இருந்த ராஜகோபால் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவிக்கு முதல்வர் எடப்பாடி யின் சாய்ஸ், ஓய்வுபெற்ற டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரன்தான். ஆனால், கவர்னர் அலுவலகம் மற்றும் டெல்லி பிரஷர் காரணமாக, அதை அவரால் நிறைவேற்ற முடியவில்லையாம். இதுவும்கூட எடப்பாடி தரப்பைக் கோபப்பட வைத்துள்ளது என்கிறார்கள்.

டி.கே.ராஜேந்திரன் தரப்பிலிருந்தும் பி.ஜே.பி-க்கு எதிராகக் கடுமையான உறுமல்கள் கிளம்பினவாம். அதனால்தான் அவர்மீது அதிரடியாக அமலாக்கப் பிரிவை இறக்கிவிட்டுள்ளார்களாம்.

பா.ஜ.க இப்படியும் நினைக்கிறது... 'தி.மு.க ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக அ.தி.மு.க ஆட்சியைத் தக்கவைக்க உதவினால், எடப்பாடி தனிப்பெரும் தலைவராகப் பார்க்கிறார். அதனால்தான், டெல்லி சொல்வதையெல்லாம் இப்போது எடப்பாடி அரசு அப்படியே கேட்பதில்லை. இது பா.ஜ.க-வின் வளர்ச்சிக்கு ஆபத்தானது' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார் பா.ஜ.க டெல்லி புள்ளி ஒருவர்!''

''உதாரணம்?''

''சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு விஷயத்தைப் பேசியதாகக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, 'அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி-யான விஜிலா சத்தியானந்தின் எம்.பி பதவிக்காலம் அடுத்த வருடம் முடிகிறது. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தர விரும்புகிறோம். அவருடைய எம்.பி பதவிக்காலத்தை நீட்டித்துத் தரவும்' என்று மோடி கேட்டாராம். இதைக் கேட்டதும் எடப்பாடி அதிர்ந்து விட்டாராம். சிறிதும் யோசிக்காமல் அப்போதே 'நிச்சயமாக முடியாது' என்று தடாலடியாகச் சொல்லிவிட்டாராம். இதில் மோடி பயங்கர அப்செட் ஆனதுடன், சற்று கோபமாகவே திரும்பினாராம்.''

திருச்சியில் நடந்த துக்ளக் இதழின் பொன்விழா கூட்டத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதன் பின்னணி, பொதுக்குழு மூலம் மீண்டும் வெடித்த அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் விவகாரம் உள்பட மிஸ்டர் கழுகு திரட்டிய உள்ளரசியல் தகவல்களை முழுமையாக வாசிக்க > 'ஆம்பள' அரசியல்! - பற்றவைத்த குருமூர்த்தி... பாயத் தயாராகும் பா.ஜ.க. https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-gurumurthy-dec-01

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |