Published:Updated:

எடப்பாடியின் ஒரே கவலை, சசிகலாவின் விடுதலைதான்... பின்னணி என்ன?

எடப்பாடி
எடப்பாடி

தீபா, தீபக் இருவரும்தான் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள்' என்று அறிவித்துள்ளது நீதிமன்றம். `ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னையை நீதிமன்றத்துக்குப் போகாமல் தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது' என்கிறார்கள்.

வியர்த்து விறுவிறுத்து அலுவலகத்துக்கு நேரில் ஆஜரானார் கழுகாரிடம், ''தி.மு.க தலைமை வருத்தத்தில் இருக்கிறதாமே?'' என்றோம்.

''கிஷோரின் பணிகளில் திருப்தி இல்லை என்கிறார்கள். கிஷோர் தரப்புமீது மாவட்டங் களிலிருந்து நாளுக்கு நாள் வரும் புகார்களைப் பார்த்து வருத்தத்தில் இருக்கிறதாம் கட்சித் தலைமை.

இதற்கிடையே தி.மு.க-வினர்மீது அடுத்தடுத்து வழக்குகளைப் பாய்ச்சும் திட்டத்தில் இருக்கிறது ஆளுங்கட்சி. இதையெல்லாம் சமாளிக்க தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தி.மு.க சட்டத்துறைத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் டி.ஜி.பி-யான திரிபாதியைப் பார்த்து மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், 'தி.மு.க-வினர்மீது தேவையில்லாமல் பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை முடித்துக்கொள்ளும்படி அந்தந்தக் காவல்நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.''

"முதல்வர் எடப்பாடி பழனிசாமி..?"

''தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒரே கவலை சசிகலாவின் விடுதலைதான். அவர் வெளியே வந்த பிறகு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற பதற்றத்தில்தான் போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார்.

தீபா - தீபக் - சசிகலா
தீபா - தீபக் - சசிகலா

ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்ததை எடப்பாடி அரசு ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வில்லை. தவிர, போயஸ் கார்டன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு வருமான வரித் துறையின் பட்டியலிலும் இந்த வீடு இடம்பெற்றுள்ளது. நாளை வருமான வரித்துறை தரப்பிலிருந்தும் சிக்கல்கள் வரலாம். இதையெல்லாம் கவனிக்காமல் அவசரகதியில் அரசாணை வெளியிட்டுவிட்டதாகச் சட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்!''

'ம்...''

'' `தீபா, தீபக் இருவரும்தான் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள்' என்று அறிவித்துள்ளது நீதிமன்றம். `ஆரம்பத்திலேயே இந்தப் பிரச்னையை நீதிமன்றத்துக்குப் போகாமல் தடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது' என்கிறார்கள். இப்போது எடப்பாடி தரப்பில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டுக்குச் செல்லத் திட்டமிடுவதாகத் தெரிகிறது!''

''சசிகலா வருகை உறுதியாகிவிட்டதோ?''

''கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேசமயம் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே குறிப்பிட்ட காலத்துக்குள் அவரால் வெளியே வர முடியும். தொகையைக் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றனவாம். சசிகலா வெளியே வந்த பிறகு அவர் தங்குவதற்கான இடத்தையும் ஒரு டீம் தயார் செய்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் முடிந்த பிறகு எந்த நேரத்திலும் விடுதலைக்கான அறிவிப்பு வரலாம்.''

- இத்துடன், கொரோனா சார்ந்த உள்ளரசியல் விவகாரங்களை ஜூனியர் விகடன் இதழின் கழுகார் பகுதியில் முழுமையாக வாசிக்க >

மிஸ்டர் கழுகு: கொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு? Click here https://bit.ly/2TW2fqV

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு