Published:Updated:

முதல்வர் வேட்பாளர் ரேஸ்... தி.மு.க பாணியில் ஒரு `கணக்கு' போடும் எடப்பாடி!

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

கட்சி நிர்வாகிகளுக்கு அந்த நெருக்கடி இல்லை. அவர்கள் பன்னீர் பின்னால் சென்றாலும், எடப்பாடியால் அதைத் தடுக்க முடியாது. இதையெல்லாம் மனக்கணக்கு போட்டுத்தான் எடப்பாடி செயற்குழுவுக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்

பன்னீர் - பழனிசாமி இடையிலான பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்துவரும் நிலையில், "சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும் அ.தி.மு.க-வை மீட்பதற்கான பணிகளைத் தொடங்குவார்" என அ.ம.மு.க நிர்வாகியான வெற்றிவேல் தன் பங்குக்குப் பற்றவைத்திருக்கிறார். இதனால் அ.தி.மு.க-வுக்குள் வெடித்துவரும் கலகம் உச்சத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட சில விவகாரங்கள் இங்கே...

"அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்ற தனது முடிவைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் பன்னீர். பிறகு கட்சி அலுவலகத்துக்கும் விசிட் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.

இதையெல்லாம் பழனிசாமி தரப்பு அமைதியாக கவனித்துவருகிறது. பன்னீருக்குப் பின்னால் சில அமைச்சர்கள் அணிவகுத்தது உண்மைதான். எடப்பாடி மீது அதிருப்தியிலிருக்கும் அமைச்சர்கள், பன்னீர் பின்னால் அணி திரளத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இதுவரை வெளிப்படையாக எடப்பாடிக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

முதல்வர் வேட்பாளர் ரேஸ்... தி.மு.க பாணியில் ஒரு `கணக்கு' போடும் எடப்பாடி!

இதில்தான் எடப்பாடியின் சூட்சுமம் இருக்கிறது. தனக்கு எதிராக அமைச்சர்கள் அணி திரண்டாலும், தன்னை எதிர்த்து இப்போதைக்கு குரல் கொடுக்க மாட்டார்கள்; அமைச்சர் பதவி அவர்களுக்கு முக்கியம் என்று எடப்பாடி நினைக்கிறார்.

ஆனால், கட்சி நிர்வாகிகளுக்கு அந்த நெருக்கடி இல்லை. அவர்கள் பன்னீர் பின்னால் சென்றாலும், எடப்பாடியால் அதைத் தடுக்க முடியாது. இதையெல்லாம் மனக்கணக்கு போட்டுத்தான் எடப்பாடி செயற்குழுவுக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்..."

ஏற்கெனவே, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாகவே முயன்றுவருகிறார் எடப்பாடி. அதற்கு பன்னீர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். இந்த நேரத்தில்தான் சசிகலா தரப்பு, மறைமுகமாக பன்னீருக்கு ஆதரவாகக் களமாட ஆரம்பித்துள்ளது. இதையெல்லாம் மனதில்வைத்திருக்கும் எடப்பாடி, தி.மு.க பாணியில் ஒரு கணக்கைக் கையிலெடுக்க இருக்கிறார்.

அதாவது, கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்தத் திட்டத்தையும் இப்போது பேச வேண்டாம். ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை மாற்றம் செய்யலாம் என்று எடப்பாடி தரப்பிலிருந்து சிலர் செயற்குழுவில் குரல் கொடுக்கப்போகிறார்கள்.

- "கருணாநிதி பாணியில், கடைசி நேரத்தில் கட்சியைக் கைப்பற்றும் யுக்தியை எடப்பாடி கையிலெடுக்கக்கூடும்" என்கிறார்கள் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள்.

எப்படி..? - முழுமையான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/36aLxLd > கருணாநிதி பாணி அரசியலை கையிலெடுக்கும் எடப்பாடி? https://bit.ly/36aLxLd

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு