Published:Updated:

``தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக் கூடாதென நினைப்பவர் ஓபிஎஸ்!" - இபிஎஸ் சாடல்

எடப்பாடி பழனிசாமி

`ஓ.பி.எஸ் ரௌடிகளை கூப்பிட்டு வந்து கண்மூடித்தனமாக தனது கட்சி உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்தினார். மனசாட்சி இல்லாத மிருகத்தனமான மனிதனுக்குத்தான் இப்படி ஒரு எண்ணம் வரும்.' - இபிஎஸ்

``தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக் கூடாதென நினைப்பவர் ஓபிஎஸ்!" - இபிஎஸ் சாடல்

`ஓ.பி.எஸ் ரௌடிகளை கூப்பிட்டு வந்து கண்மூடித்தனமாக தனது கட்சி உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்தினார். மனசாட்சி இல்லாத மிருகத்தனமான மனிதனுக்குத்தான் இப்படி ஒரு எண்ணம் வரும்.' - இபிஎஸ்

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த ஒரு மாதகாலமாகவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இ.பி.எஸ், ஓ.பி.எஸ் என்ற இரட்டைத் தலைமை நடைமுறை அ.தி.மு.க-வில் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது.

அ.தி.மு.க அலுவலகத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டதால், அ.தி.மு.க தலைமை கழக அலுவலகம் வருவாய்த்துறையினரால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அ.தி.மு.க தலைமை கழக அலுவலகம் பகுதி முழுவதும் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்சித் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பொதுக்குழு
பொதுக்குழு

இந்த நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அ.தி.மு.க தொண்டரைச் சந்தித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``அ.தி.மு.க அலுவலகத்துக்குள் சமூக விரோதிகள் நுழைய இருப்பதாக முன்கூட்டியே காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டிருந்தோம். ஆனால் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. ஓ.பி.எஸ் ரௌடிகளை அழைத்துவந்து அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகளை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். காவல்துறையின் பாதுகாப்போடு தலைமை கழகத்திலிருந்து ஆவணங்களை அள்ளிச் சென்றிருக்கின்றனர். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க கொடுத்த மனுமீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. காவல்துறையினர் எங்கள் ஆதரவாளர்களைத் தாக்கினரே தவிர, ஓ.பி.எஸ் அழைத்து வந்த ரௌடிகளைத் தடுக்கவில்லை. ஓ.பி.எஸ் ரௌடிகளை கூப்பிட்டு வந்து கண்மூடித்தனமாக தனது கட்சி உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்தினார். மனசாட்சி இல்லாத மிருகத்தனமான மனிதனுக்குத்தான் இப்படி ஒரு எண்ணம் வரும். இன்று அவர் கொடூரமாக அடித்து, தாக்கிய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் உங்களை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஆக்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக் கூடாதென நினைப்பவர் ஓபிஎஸ்!" - இபிஎஸ் சாடல்

பொதுக்குழுவில் அவருக்கு மேடையில் இருக்கை போடப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. ஓ.பி.எஸ் ஒரு சுயநலவாதி. அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அங்குள்ள பொருள்களை அள்ளிக்கொண்டு செல்கிறார் என்றால் இவரெல்லாம் ஒரு தலைவரா? கேவலமாக இருக்கிறது. அ.தி.மு.க உங்களுடைய சொந்த சொத்தா? இல்லை கார்ப்பரேட் கம்பெனியா? இது ஒவ்வொரு தொண்டனுடைய சொத்து.

அ.தி.மு.க அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டு புது பொலிவுடன் வீறு கொண்டு நடைபோடும். அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்குச் சாதகமாக இருக்கின்றனர். ஓ.பி.எஸ் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் உறவு வைத்துக்கொண்டு அவர்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிற காரணத்தினால்தான், அவர் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். தனக்கு கிடைக்காத பதவி எவருக்கும் கிடைக்கக் கூடாது என்று எண்ணும் மனம் படைத்தவர்தான் ஓ.பி.எஸ். ஓ.பி.எஸ் எந்த காலத்திலும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை. அ.தி.மு.க தொண்டர்கள் சராமாரியாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். வேண்டுமென்று திட்டமிட்டு ஸ்டாலின் அரசும், அவருடன் உறவு வைத்திருந்த அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ம் இணைந்து இந்த கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றார்.