Published:Updated:

``எங்கு விசுவாசமாக இருந்தார்... எதை விட்டுக்கொடுத்தார்?!" - ஓபிஎஸ்-ஐ விளாசிய எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

``நாங்கள்தான் விட்டுக் கொடுத்தோம். அவர் என்ன விட்டுக் கொடுத்தார். ஓ. பன்னீர்செல்வத்துக்குக்கு எப்போதும் சுயநலம்தான். திமுக-வின் கைக்கூலி பன்னீர்செல்வம்" - எடப்பாடி பழனிசாமி

``எங்கு விசுவாசமாக இருந்தார்... எதை விட்டுக்கொடுத்தார்?!" - ஓபிஎஸ்-ஐ விளாசிய எடப்பாடி பழனிசாமி

``நாங்கள்தான் விட்டுக் கொடுத்தோம். அவர் என்ன விட்டுக் கொடுத்தார். ஓ. பன்னீர்செல்வத்துக்குக்கு எப்போதும் சுயநலம்தான். திமுக-வின் கைக்கூலி பன்னீர்செல்வம்" - எடப்பாடி பழனிசாமி

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி

சென்னை, வானகரத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலராக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டார். மேலும் இந்தப் பொதுக்குழுவில் முக்கியமாக கட்சி விதியில், கழக பொதுச் செயலாளர் பொறுப்புக்கு இனி யாரும் தேர்ந்தெடுக்கப்படவோ அல்லது நியமிக்கப்படவோ மாட்டார்கள் என்ற விதி ரத்துசெய்யப்பட்டது உட்பட பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``கழகத்தை காக்கக்கூடிய நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். சில எட்டப்பர்கள் கழகத்திலிருந்துகொண்டு கலகம் கற்பித்துக் கொண்டிருக்கிற நிலையில், அதையெல்லாம் அழிக்க வேண்டும் என்று சொன்னால் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று முடிவெடுத்தீர்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இன்று பொதுக்குழு உறுப்பினர்கள் ஏக மனதாக அதை நிறைவேற்றி தந்திருக்கிறீர்கள். கட்சியைக் காக்க இடைக்காலப் பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் விரும்பிய தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் உளமாற பாராட்டுகள்.

1974-ல் ஒரு கிளைச் செயலாளராக கட்சியில் சேர்ந்தேன். பின்னர் ஜெயலலிதா அணியில் சேர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அம்மா அவர்கள் எனக்கு அமைச்சர் பதவி தந்தார். அந்த பணியை சிறப்பாக செய்ததால் கூடுதலாக பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியும் எனக்கு வழங்கினார். எல்லா திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தினேன். நாம் செய்த பணிகளைத்தான் இன்று முதல்வராக ஸ்டாலின் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே ஜனநாயக முறைப்படி நடக்கும் ஒரு கட்சி என்றால் அது அ.தி.மு.க-தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

மாண்புமிகு அம்மாவின் மறைவுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தோம். நமது கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. ஆனால் இன்றைய நிலை என்ன? தினமும் கொலை, கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு மேலாக போதைப்பொருள்... எங்கே பார்த்தாலும் கஞ்சா விற்கிறது... எது கிடைக்கிறதோ எது கிடைக்கலையோ கஞ்சா எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசால் கடந்த ஓர் ஆண்டில் என்ன பலன் கிடைத்துவிட்டது... என்ன திட்டம் புதிதாக கொண்டு வந்தார்கள்?

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

தி.மு.க அரசு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. மு.க.ஸ்டாலினின் ஆட்சி குடும்ப ஆட்சி, அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள். இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது” என்றவர், பன்னீர்செல்வம் குறித்து பேச ஆரம்பித்தார்.

``அண்ணன் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அண்ணன் பன்னீர்செல்வம் குறித்த தீர்மானம் அது. கட்சியில் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றைத் தலைமை குறித்துப் பேசியபோது, அது தொடர்பாக அவரது வீட்டுக்கு தொடர்ந்து சென்று பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. ஒற்றைத் தலைமையின் தேவை குறித்துப் பேசினார்கள். அவர் அம்மாவுக்கு விசுவாசமாக இருந்ததாகக் கூறினார். எங்கே நீங்கள் விசுவாசமாக இருந்தீர்கள்? ஓ.பி.எஸ், தான் நிறைய விட்டுக் கொடுத்ததாகக் கூறுகிறார். ஆனால், நாங்கள்தான் விட்டுக் கொடுத்தோம். அவர் என்ன விட்டுக் கொடுத்தார். எதையுமே விட்டுக் கொடுக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்குக்கு எப்போதும் சுயநலம்தான். திமுக-வின் கைக்கூலி பன்னீர்செல்வம்” என்றார்.