Published:Updated:

``தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு; முடிந்த பிறகு ஒரு பேச்சு!” - ஸ்டாலினை விமர்சித்த பழனிசாமி

தஞ்சாவூர் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி ( ம.அரவிந்த் )

``ஸ்டாலின் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், மகன் உதயநிதி 90% நிறைவேற்றப்பட்டதாகவும் சொல்லி காதில் பூ சுற்றுகின்றனர். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறக்கும் கட்சி திமுக’’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

``தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு; முடிந்த பிறகு ஒரு பேச்சு!” - ஸ்டாலினை விமர்சித்த பழனிசாமி

``ஸ்டாலின் 70% வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், மகன் உதயநிதி 90% நிறைவேற்றப்பட்டதாகவும் சொல்லி காதில் பூ சுற்றுகின்றனர். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறக்கும் கட்சி திமுக’’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Published:Updated:
தஞ்சாவூர் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி ( ம.அரவிந்த் )

``திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இரட்டை வேடம் போடுகிறது. ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறக்கும் கட்சி திமுக. கடந்த ஒன்பது மாதங்களில் மக்களுக்காக திமுக எதையும் செய்யவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ரூ.410 கோடி அளவில் முறைகேடு நிகழ்ந்துள்ளது” என தஞ்சாவூரில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். முதலில் கும்பகோணம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், அதன் பிறகு தஞ்சாவூர் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதற்காக ரயிலடியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு முன்புறம் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடைக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை சமீபத்தில் கட்சிப் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட எம்.பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசியதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி 51 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். அப்போது அவர், ``முதலமைச்சர் ஸ்டாலின் மக்களைச் சந்திக்கத் தயாரில்லை. கொல்லைப்புறம் வழியாகத் தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறார். அதிமுக நிர்வாகிகளை விலை பேசுவது, ஆசைவார்த்தைகளைக் கூறி அதிமுக வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெறவைப்பது போன்றவற்றை தி.மு.க செய்துவருகிறது.

அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பிரசாரம்
அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பிரசாரம்

அதிமுக-வை எதிர்த்து வெல்லக்கூடிய சக்தி திமுக-வுக்கு இல்லை. மக்களைச் சந்தித்து வெற்றி பெறக்கூடியதும், தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுமான கட்சி அதிமுக. 2006-ல் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்பதாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் சொன்னபடி கொடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சும், தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சும் என திமுக இரட்டை வேடம் போடுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் எதுவுமே செய்யப்படவில்லை. மக்களின் நிலை, பொருளாதார நிலை உயர அடித்தளமிட்ட கட்சி அதிமுக. இந்தப் பொன் விளையும் பூமியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டுவருவதற்காக ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின். அதைத் தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதாதான். அதிமுக ஆட்சியில்தான் இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, விவசாயம் பாதுகாக்கப்பட்டது. விவசாயிகளை வாழவைத்தது ஜெயலலிதாவின் ஆட்சி.

தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி
தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி

தேர்தலின்போது திமுக-வினர் 565 வாக்குறுதிகள் அளித்தனர். அவற்றைப் புத்தகமாக அச்சிட்டுக் கொடுத்தனர். ஆனால் அவை நிறைவேற்றப்படவில்லை. ஸ்டாலின் 70 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், மகன் உதயநிதி ஸ்டாலின் 90 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டதாகவும் சொல்லி காதில் பூ சுற்றுகின்றனர். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறக்கும் கட்சி திமுக. கடந்த ஒன்பது மாதங்களில் நாட்டு மக்களுக்காக திமுக எதையும் செய்யவில்லை.

சமையல் எரிவாயு ரூ.100 தருவதாகக் கூறினார். அதற்கு பதிலாக சமையல் எரிவாயு விலை ரூ.100 உயர்ந்துவிட்டது. நகைக்கடன் தள்ளுபடி 35 லட்சம் பேருக்குக் கிடைக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தாலும், திமுக அரசு குறைக்கவில்லை. ஸ்டாலின் ஒரு விளம்பரப் பிரியர். தினம் அவருக்கு ஒரு போட்டோ பத்திரிகையில் வர வேண்டும். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட சைக்கிள் ஓட்டுறார், ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார். உங்க உடம்பு நல்லா இருக்கு, மக்களுக்கும் நல்லது செய்யுங்க.

தேர்தல் பிரசாரம்
தேர்தல் பிரசாரம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல், கொள்முதல் செய்யப்படாமல் திறந்தவெளியில் கிடக்கிறது. இதனால் விவசாயிகளின் நெல் மழையில் நனைந்து வீணாகிறது. இதேபோல, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லும் திறந்தவெளியில் கிடப்பதால், மழையில் நனைந்து மீண்டும் முளைக்கிறது. பொங்கல் பரிசுத்தொகை அதிமுக ஆட்சியில் ரூ.2,500 வழங்கப்பட்டபோது, ரூ. 5,000 வழங்க வேண்டும் எனக் கூறியவர் ஸ்டாலின்.

ஆனால்,அவர் ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கல் பரிசுத் தொகையே கொடுக்கவில்லை. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ரூ. 410 கோடி அளவில் முறைகேடு நிகழ்ந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவது உள்ளாட்சி அமைப்பு. இதில்,அதிமுக வெற்றி பெற வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.