Published:Updated:

ரஜினி மீது அடுத்தடுத்து அஸ்திரங்கள்... எடப்பாடி 'எழுச்சி'யின் பின்னணி!

வெற்றிடம் என்று ரஜினி பேசிவைக்க, எரிச்சலாகி விட்டார் எடப்பாடியார். ஏற்கெனவே தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று ஆண்டுகளைக் கடக்க விருக்கிறார்

எடப்பாடி
எடப்பாடி

''ரஜினி என்றதுமே, 'அவர் பி.ஜே.பி-யின் விசுவாசி' என்றுதான் பொதுவாகவே அனைவருக்கும் தோன்றும். அதற்கு ஏற்றாற்போலவே அவருடைய அறிக்கைகளும் அமைந்திருக்கும். சமீபத்தில்கூட 'வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கி ரஜினியைக் குஷிப்படுத்தியது பி.ஜே.பி அரசு. இதுபோன்ற காரணங்களால், ரஜினி விஷயத்தில் எப்போதுமே அமைதியாகத்தான் இருப்பார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தற்போது 'காவிக்கு' எதிர் நிலையில் இருப்பதுபோல் ரஜினி பேசவும், அதையே சரியான வாய்ப்பாக எடுத்துக்கொண்டுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. கிட்டத்தட்ட இது ரஜினிக்கு எதிரான அவருடைய யுத்தம் என்றே சொல்லாம்'' என்கிறார்கள் தமிழக அரசியலை கவனிப்பவர்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2prFZt2

கடந்த 8-ம் தேதியன்று கமல் அலுவலகத்தில் நடந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ''தமிழகத்தில் இன்னும் ஆளுமையான, சரியான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது'' என்று வழக்கம்போல்தான் சொன்னார். இந்தத் தடவை அ.தி.மு.க தரப்பு இதை வேடிக்கை பார்க்கவில்லை. 'காம்பவுண்ட் அரசியல்வாதி' என்று ஆரம்பித்து காய்ச்சித்தள்ள ஆரம்பித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

ரஜினியுடன் இணைந்தால் மிகப்பெரிய ஓட்டுவங்கியாக மாறுவார்கள். அது, அ.தி.மு.க-வைப் பாதிக்கக்கூடும்' என்று கட்சியினர் சிலர் கவலையாகப் பேசியதும் எடப்பாடியை மிகவும் யோசிக்கவைத்துவிட்டது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், "ரஜினியின் பேச்சுக்கு இனியும் சும்மா இருக்கக் கூடாது என நினைக்கிறது எடப்பாடி தரப்பு. அடுத்தடுத்த நாளில் ரஜினி, கமல் என்று எடப்பாடியார் பாய்ச்சல் காட்டுவதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் கணக்கு இருக்கிறது" என்கிறார்கள்.

எடப்பாடிக்கு நெருக்கமான சிலரிடம் இதுபற்றிக் கேட்டபோது, "பா.ஜ.க தரப்பு ரஜினியை வைத்து தமிழக அரசியல் களத்தில் நிலைகொள்ள நினைத்தது. அதை அ.தி.மு.க-வும் அமைதியாக வேடிக்கை பார்த்தது. ரஜினி கட்சி ஆரம்பிப்பதைவிட அவரை வைத்து அ.தி.மு.க கூட்டணிக்குக் கூடுதல் வாக்குகள் வாங்குவதுதான் புத்திசாலித்தனம் என்று எடப்பாடி தரப்பு நினைத்து வந்தது. ஆனால், சமீபத்தில் பா.ஜ.க தரப்பில் மூத்த தலைவர் ஒருவர் எடப்பாடி தரப்பிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குள் ரஜினி வந்தால், அவரை முதல்வர் வேட்பாளராகக்கூட முன்மொழியலாம்' என்று சொன்னதுதான், எடப்பாடியாரின் கோபத்துக்கு முதல் அச்சாரம்போட்டது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

இந்த நிலையில், வெற்றிடம் என்று ரஜினி பேசிவைக்க, எரிச்சலாகி விட்டார் எடப்பாடியார். ஏற்கெனவே தமிழகத்தின் முதலமைச்சராக மூன்று ஆண்டுகளைக் கடக்க விருக்கிறார். ஆட்சியையும் கட்சியையும் தன்வசப்படுத்திக் கொண்டுவிட்டார். டெல்லியும் எடப்பாடியாரின் மூவ்களை அங்கீகரித்துக்கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில், ஜெயலலிதாவுக்கு அடுத்து ஆளுமையான ஒரு தலைவராகவே தன்னை உணர்கிறார் எடப்பாடியார். இதற்குப் பிறகும் வெற்றிடம் என்று ரஜினி பேசுவது, 'தன்னை ஒரு பொருட்டாகக்கூட ரஜினி மதிக்கவில்லை' என்று எடப்பாடியாரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது. அதனால்தான் அவர் தன் அஸ்திரங்களை ஏவ ஆரம்பித்துவிட்டார்.

ரஜினி
ரஜினி

'ரஜினியைத் தூண்டிவிடுவதே கமல்தான். அவர்கள் இருவரும் இணைந்து செயல்படும் திட்டத்தில் இருக்கிறார்கள்' என்று உளவுத்துறை ஒரு தகவலைத் தட்டிவிட்டுள்ளது. இதை வைத்து, 'கமல் தனியாக இருக்கும் வரை பெரிதாக ஆபத்து இல்லை. ரஜினியுடன் இணைந்தால் மிகப்பெரிய ஓட்டுவங்கியாக மாறுவார்கள். அது, அ.தி.மு.க-வைப் பாதிக்கக்கூடும்' என்று கட்சியினர் சிலர் கவலையாகப் பேசியதும் எடப்பாடியை மிகவும் யோசிக்கவைத்துவிட்டது. எனவேதான், ரஜினி - கமல் இணைப்பை முளையிலேயே கிள்ளியெறிய முடிவுசெய்து விட்டார்" என்றார்கள்.

ரஜினி தரப்பில் எடப்பாடியின் எதிர்த்தாக்குதலை அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம், ரஜினி விமர்சித்தாலுமேகூட மனம் தளராத விக்கிரமாதித்தன்போல பா.ஜ.க தரப்பும் ரஜினியை தங்கள் பக்கம் கொண்டுவர தொழிலதிபர் ஒருவர் மூலம் மீண்டும் முயல்கிறது.

- ரஜினிக்கு அவரது நெருக்கமானவர்கள் சொன்ன ஆலோசனை, ரஜினியின் 'அரசியல் வெற்றிடம்' கருத்து தி.மு.க-விலும் நிலவும் அதிருப்தி, ரஜினி குடும்பத்தினரின் யோசனை, கமல் கட்சியினரின் மூவ் உள்ளிட்டவை குறித்தும் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியில் விரிவாக வாசிக்க > ரஜினிக்கு எதிராக யுத்தம்! - ஏன் பாய்ந்தார் எடப்பாடி? https://www.vikatan.com/government-and-politics/politics/rajinikanth-vs-edappadi-palaniswami

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo