Published:Updated:

சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தீர்மானம் இல்லை... ஏன்? - எடப்பாடிக்கு வந்த கடைசிநேர `எச்சரிக்கை'!

எடப்பாடி
News
எடப்பாடி

மூன்றாண்டு காலத்தை முதல்வர் பதவியில் வெற்றிகரமாக முடித்ததற்காக பிப்ரவரி 17-ம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்துக்குள் நுழையும்போதே அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

''வண்ணாரப்பேட்டைதான் சென்னையின் ஷாகின் பாக் ஆகிவிட்டதே?” என்று கழுகாரிடம் ஆரம்பித்தோம்.

''அரசுக்கும் இதில் தர்மசங்கடம்தான். போலீஸ் தாக்குதல் நடந்த மறுநாளே டி.ஜி.பி-யையும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரையும் கூப்பிட்டுப் பேசிய முதல்வர் எடப்பாடி, 'ஏன் அவசரப்பட்டீர்கள்?' என்று கமிஷனரிடம் சத்தம்போட்டிருக்கிறார். அப்போது, 'போராட்டம் பெரிதாகும் முன்னே அதைத் தவிர்த்துவிட்டால் நல்லது. சி.ஏ.ஏ போராட்டங்களைக் கண்காணிக்க அதிகாரிகளை நியமிக்கலாம்' என்று ஐடியா சொல்லியிருக்கிறார் டி.ஜி.பி திரிபாதி. முதல்வரும் உடனே ஓகே சொல்லிவிட்டார். அதற்குப் பிறகுதான் தென் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கைக் கண்காணிப்பதற்காக மூன்று ஏ.டி.ஜி.பி-க்கள் உட்பட 12 அதிகாரிகளை நியமித்திருக்கின்றனர்.''

''போலீஸ் அதிகாரிகளிலேயே ஒரு தரப்பினர், 'இதெல்லாம் தேவையில்லாத வேலை' என்கிறார்களே?''

சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தீர்மானம் இல்லை... ஏன்? - எடப்பாடிக்கு வந்த கடைசிநேர `எச்சரிக்கை'!

''ஏற்கெனவே சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யான ஜெயந்த் முரளியிடம் மாவட்ட அதிகாரிகள் ரிப்போர்ட் அளிக்கும் நிலையில், எதற்காக இந்த 12 பேர் தனியாக நியமிக்கப்பட்டனர் என்ற குழப்பம் எழுந்திருக்கிறது. இது அவருடைய அதிகாரத்தைப் பறிக்கும் வேலை என்றும் சொல்கிறார்கள். ஆனால் போராட்டக்காரர்கள் தரப்பிலோ, 'இது, போராட்டமே கூடாது என மிரட்டும் நடவடிக்கை' என்கிறார்கள்.''

''எவ்வளவு போராடினாலும் சட்டமன்றத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாரே சபாநாயகர்?''

''அது பலரும் சேர்ந்து எடுத்த முடிவு. மூன்றாண்டு காலத்தை முதல்வர் பதவியில் வெற்றிகரமாக முடித்ததற்காக பிப்ரவரி 17-ம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்துக்குள் நுழையும்போதே அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அதற்கு முன்பே மூத்த அமைச்சர்களிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, 'மத்திய அரசு விஷயத்திலும் சில அதிரடிகளை எடுக்க வேண்டும்' என்று முதல்வர் சொல்ல, 'அப்படி ஏதாவது செய்தால் ஆறே மாதங்களில் ஆட்சி போய்விடும்' என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். அதன் பிறகே சி.ஏ.ஏ-வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவதில்லை என்று முடிவெடுத்திருக்கின்றனர்.''

- இத்துடன், 'ஸ்டாலின் அப்செட்' பின்னணி, அடுத்த ஒரு வருஷத்துக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் பாடு திண்டாட்டம்... ஏன்?, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பாடுதான் கொண்டாட்டமாக இருக்கப்போவது எப்படி?, பா.ஜ.க-வுக்கு தமிழகத்தில் இன்னும் ஒரு தலைவர் கிடைக்கவில்லையா? - கழுகார் தரும் விரிவானத் தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > மிஸ்டர் கழுகு: விலைபோகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்... ஏலம் எடுக்கும் கம்பெனிகள்! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-feb-23

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

"ரஜினி பேட்ட... உடனே வாங்க வண்ணாரப்பேட்ட"

பிப்ரவரி 14 அன்று காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளு, தடியடி, கைதுகள் எல்லாம் தமிழகம் முழுவதும் போராட்டத்தைப் பற்றவைத்தன. 'கபில்குமார் சரத்கர் நிலைமையைத் தவறாகக் கையாண்டதாலேயே அங்கு வன்முறை வெடித்தது' என்று கனிமொழி சொன்னதன் பின்னணியும் இதுதான்.

தா.பாண்டியன், நல்லகண்ணு, தயாநிதி மாறன், மன்சூர் அலிகான், சீமான் எனப் பலரும் வண்ணாரப் பேட்டைக்குப் படையெடுத்தனர். புதுகை பூபாளம் கலைக்குழு உட்பட பல குழுவினர் வந்து சி.ஏ.ஏ-வுக்கு எதிரான கருத்துகளைப் பாடினர். மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி வந்து ஆதரவு தெரிவித்தார். மோடி, அமித் ஷா, இ.பி.எஸ், ஓ.பி.எஸ், ஜெயக்குமார், ரஜினி, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் போராட்டத்தில் வறுபட்டனர்.

சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தீர்மானம் இல்லை... ஏன்? - எடப்பாடிக்கு வந்த கடைசிநேர `எச்சரிக்கை'!

'இது பெரியார் மண்ணுடா... இந்து-முஸ்லிம் நாங்க ஒண்ணுடா' என்றெல்லாம் கோஷங்கள் ஒலித்தன. தேசியக்கொடி தவிர வேறு கொடிகளோ பிரிவினை தொடர்பான கோஷங்களோ இல்லை. டெல்லி ஜெ.என்.யூ-வில் எதிரொலித்த 'ஆசாதி' (விடுதலை) கோஷம், வண்ணாரப்பேட்டையிலும் அதிர்ந்தது.

'முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்றால், முதலில் நான் வந்து நிற்பேன்' என்று சில தினங்களுக்கு முன்பு ரஜினி பேசிய விஷயமும் போராட்டத்தில் எதிரொலித்தது. "ரஜினி பேட்ட... உடனே வாங்க வண்ணாரப்பேட்ட" என முழங்கினார்கள்.

- ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க மக்களைக் கிளர்ந்தெழச் செய்தவர், விஜயேந்திர பிதாரி. அலங்காநல்லூரில் போராடியவர்கள்மீது மதுரை எஸ்.பி-யான விஜயேந்திர பிதாரி மேற்கொண்ட அடக்குமுறைகளையடுத்து இளைஞர்கள் பெருந்திரளாக குவிய... மெரினா புரட்சி வெடித்தது. இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான வண்ணாரப்பேட்டை போராட்டக் காட்சிகள் அதையே நினைவுபடுத்துகின்றன.

- முழுமையான செய்திக் கட்டுரையை வாசிக்க > “தேவை சி.ஏ.ஏ-வுக்கு எதிராக சட்டமன்றத் தீர்மானம்!” - தெறிக்கும் கோஷம்... நெரிக்கும் போலீஸ் https://www.vikatan.com/social-affairs/politics/protest-against-caa-in-washermanpet

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9