Published:Updated:

`பச்சைத்துண்டு போடவும் ஒரு தகுதி வேண்டும்!'- வைத்திலிங்கம் இல்ல விழாவில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

`விவசாயி என்று சொன்னாலே ஒரு பெருமை. அடுத்தவரிடம் கையேந்தி பிழைக்கிற கூட்டம் விவசாயிகள் அல்ல.'

மாநிலங்களவை எம்.பி-யும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தின் மகன் திருமணம் தஞ்சாவூரில் நடைபெற்றது. தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, `பச்சைத்துண்டு போடுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். அந்தத் தகுதி விவசாயிக்கு மட்டுமே உள்ளது' எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாகச் சாடினார்.

`பச்சைத்துண்டு போடவும் ஒரு தகுதி வேண்டும்!'- வைத்திலிங்கம் இல்ல விழாவில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்

அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கத்தின் மகன் டாக்டர் ஆனந்த்பிரபு - டாக்டர் ஞானரூபினி திருமணம் இன்று காலை தஞ்சாவூர் மகாராஜா மகாலில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``இங்கு வந்திருக்கும் அனைவருமே விவசாயிகள். உங்கள் முகத்தில் மறுமலர்ச்சியைப் பார்க்கிறேன். விவசாயி என்று சொன்னாலே ஒரு பெருமை.

அடுத்தவரிடம் கையேந்தி பிழைக்கிற கூட்டம் விவசாயிகள் அல்ல என்பதை, தங்களது உழைப்பின் மூலம் நிரூபிக்கிற ஒரே மனிதன் விவசாயிதான். மற்றவர்கள் எல்லாம் பிறரை நம்பி வாழக்கூடியவர்கள். விவசாயிகள் மட்டும்தான் தங்களது சொந்த காலில் நிற்கக்கூடியவர்கள். விவசாயிகள் தங்களது உழைப்பை மட்டுமே நம்பி வாழக்கூடியவர்கள். உழைப்பதற்காகவே வந்தவர்கள்.

`பச்சைத்துண்டு போடவும் ஒரு தகுதி வேண்டும்!'- வைத்திலிங்கம் இல்ல விழாவில் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்

மற்றவர்களுக்காக உணவு உற்பத்தி செய்ய வந்தவர்கள். விவசாயியை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது. இரவு பகல் பாராமால் மழையிலும் வெயிலிலும் உழைக்கும் விவசாயிகளை கொச்சைப்படுத்த வேண்டாம். பச்சைத்துண்டு போட்டவர் எல்லாம் விவசாயிகள் ஆகிவிடுகிறார்கள் என அவர் சொல்கிறார். பச்சைத்துண்டு போடவும் ஒரு தகுதி வேண்டும். அந்தத் தகுதி விவசாயிக்கு மட்டுமே உள்ளது” எனக் காட்டமாகச் சாடினார்.

மணமகனுக்கு தாலி எடுத்துக் கொடுத்து உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ``தஞ்சை மாவட்டம் ஒரு புண்ணிய பூமி. இதற்கு அச்சுறுத்தலாக ஹைட்ரோ கார்பன் திட்டம் இருந்தது. டெல்டா மக்களின் பயத்தைப் போக்கவே, இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது” என்றார். இத்திருமண விழாவில், தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் உட்பட அ.தி.மு.க பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு