Published:Updated:

``என் வாழ்க்கையையே மாற்றிவிட்டார்கள்!" - `சென்னை தமிழச்சி' பத்மப்ரியா #EIA2020

பத்மப்ரியா

EIA 2020: நான் வீடியோ வெளியிட்ட பிறகுதான் அது குறித்து மக்களுக்குத் தெரியவருகிறது. அப்படியெனில், ஏன் வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வெளியிடவில்லை?

``என் வாழ்க்கையையே மாற்றிவிட்டார்கள்!" - `சென்னை தமிழச்சி' பத்மப்ரியா #EIA2020

EIA 2020: நான் வீடியோ வெளியிட்ட பிறகுதான் அது குறித்து மக்களுக்குத் தெரியவருகிறது. அப்படியெனில், ஏன் வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வெளியிடவில்லை?

Published:Updated:
பத்மப்ரியா

மத்திய அரசின் 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020' வரைவு அறிக்கையைக் கடுமையாக விமர்சித்து 'சென்னை தமிழச்சி' என்கிற பத்மப்ரியா மூட்டிய நெருப்பு, தமிழகம் முழுவதும் வைரலாகப் பற்றி எரிகிறது. அவர் வெளியிட்ட வீடியோ 'இ.ஐ.ஏ 2020', சூழல் போராக மாறி மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.

இவருடைய பேச்சால் ஆத்திரமடைந்த சிலர், இந்தப் பெண்ணுக்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். 'ஜூனியர் விகடன்' சார்பாக பத்மப்ரியாவிடம் பேசியதிலிருந்து...

"அரசு ஒரு வரைவு அறிக்கை வெளியிடுகிறதென்றால், ஒட்டுமொத்தமாக அது நிராகரிக்கப்பட வேண்டியது என்று சொல்லிவிட முடியாது. நல்ல அம்சங்களும் அதில் இருக்கலாம். அப்படியிருக்கும்போது, நீங்கள் இவ்வளவு கடுமையாக அதை ஏன் எதிர்க்க வேண்டும்... நீங்கள் அதன் 83 பக்கங்களையும் முழுமையாகப் படித்தீர்களா?"

''வரைவு அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டுத்தான் அந்த வீடியோவை வெளியிட்டேன். நான் ஓர் அறிவியல் மாணவி. அந்த வரைவு அறிக்கையைப் படித்தபோது, அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரிந்தது. அரசு என்ன செய்யப்போகிறது என்பதைக் கொஞ்சம் தெளிவுபடுத்திவிட்டு, பிறகு தொழிற்சாலைகளைக் கொண்டுவந்தால் நல்லது. இதை அந்த வீடியோவிலேயே சொல்லியிருக்கிறேன்.

தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் நமக்கு முக்கியம். அதே நேரத்தில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதும் முக்கியம்தானே... நான் வீடியோ வெளியிட்ட பிறகுதான் அது குறித்து மக்களுக்குத் தெரியவருகிறது. அப்படியெனில், ஏன் வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வெளியிடவில்லை?''

"இ.ஐ.ஏ 2020 குறித்து விவாதத்துக்கு வருமாறு உங்களைப் பலரும் அழைக்கிறார்களே... நீங்கள் தயாரா?"

"டாபிக் நான் இல்லை. இ.ஐ.ஏதான் டாபிக். இ.ஐ.ஏ-வின் பாதிப்புகள் குறித்து மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதைச் சொல்லிவிட்டேன். இப்போது என்னைத் தற்காத்துக்கொள்வதுதான் எனக்கு முக்கியம். அவர்கள் விவாதம் நடத்த வேண்டுமென்றால், சமூகச் செயற்பாட்டாளர்களிடம் நடத்திக் கொள்ளட்டும். ஒரு வீடியோவுக்காக ஒரே நாளில் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டார்கள்."

பத்மப்ரியா
பத்மப்ரியா

"ஒரு போராளியாக உங்களை மாற்றிவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?"

"மக்கள் நலன்களுக்காகக் குரல் கொடுக்கிறேன் என்பதற்காக என்னைப் போராளி என்று சொல்வார்களேயானால், நான் போராளியாக இருந்துவிட்டுப்போகிறேன்."

> '' `தொழிற்சாலையை ஆரம்பித்த பிறகும் சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யலாம்' என்று வரைவில் சொல்லப்பட்டிருக்கிறதுதானே?''

> "உங்களைப் பற்றி 'அழகுக் குறிப்புகள் பற்றிய வீடியோக்கள் வெளியிடுபவர்', 'அவரை யாரோ இயக்குகிறார்கள்' என்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் வருகின்றனவே?"

> "நீங்கள் யாரிடமோ பணம் வாங்கிக்கொண்டு இப்படிப் பேசுகிறீர்கள் என்றுகூட சமூக வலைதளத்தில் சிலர் எழுதுகிறார்களே?"

> "உங்கள் குடும்பத்தினர் என்ன நினைக்கிறார்கள்.?"

> "அந்த வீடியோ சர்ச்சையான பிறகு அதை நீக்கிவிட்டீர்கள். என்ன மாதிரியான அச்சுறுத்தல்கள் வந்தன?"

- இந்தக் கேள்விகளுக்கு பத்மப்ரியா அளித்த பதில்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > https://bit.ly/3k9JPi5

சிறப்புச் சலுகை

விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV