Published:Updated:

``எங்களுக்கும் அதுதான் வேண்டும்!" - உத்தவ் தாக்கரே கேட்கும் சின்னத்தையே கேட்கும் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே-உத்தவ்
News
ஏக்நாத் ஷிண்டே-உத்தவ்

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே கேட்டிருக்கும் சின்னத்தையே தனக்கும் ஒதுக்கவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கேட்டிருக்கிறார்.

Published:Updated:

``எங்களுக்கும் அதுதான் வேண்டும்!" - உத்தவ் தாக்கரே கேட்கும் சின்னத்தையே கேட்கும் ஷிண்டே

சிவசேனாவின் உத்தவ் தாக்கரே கேட்டிருக்கும் சின்னத்தையே தனக்கும் ஒதுக்கவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கேட்டிருக்கிறார்.

ஏக்நாத் ஷிண்டே-உத்தவ்
News
ஏக்நாத் ஷிண்டே-உத்தவ்

மகாராஷ்டிரா சிவசேனாவில் பிளவு ஏற்பட்டிருப்பதால் அந்தக் கட்சியின் சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்க உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து உத்தவ் தாக்கரேவும், ஏக்நாத் ஷிண்டேவும் தாங்கள் விரும்பும் கட்சியின் பெயர் மற்றும் சின்னங்கள் பட்டியலை கொடுக்கும்படி தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டது. தேர்தல் கமிஷனின் தீர்ப்பை முன்கூட்டியே எதிர்பார்த்திருந்த உத்தவ் தாக்கரே உடனே தங்களது கட்சி விரும்பும் மூன்று சின்னங்கள் பட்டியலை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்திருந்தார். உதய சூரியன், திரிசூலம், டார்ச்லைட் ஆகிய மூன்றில் ஒன்றை ஒதுக்கும்படி கேட்டிருக்கிறார்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இதேபோன்று கட்சியின் பெயர் தொடர்பாக மூன்று பெயர்களை உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்திருக்கின்றனர். ஏக்நாத் ஷிண்டேவும் தாங்கள் விரும்பும் மூன்று சின்னங்கள் பட்டியலை தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்திருக்கிறார். இதன்படி உத்தவ் தாக்கரே கேட்டிருக்கும் உதயசூரியன், திரிசூலம் ஆகிய இரண்டையும் தங்களது முதல் தேர்வாக ஷிண்டே அணியினர் குறிப்பிட்டிருக்கின்றனர். இதன் மூலம் உத்தவ் தாக்கரே கேட்டிருக்கும் சின்னம் அவருக்குக் கிடைக்கக்கூடாது என்ற நோக்கில்தான் அதே சின்னம் தங்களுக்கும் வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர் என்கிறார்கள்.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே
ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

அடுத்த மாதம் மூன்றாம் தேதி மும்பையில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரே சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை தேர்தலில் பயன்படுத்தக்கூடும் என்பதால் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தேர்தல் கமிஷனுக்கு கடந்த நான்காம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைத் தொடர்ந்தே தேர்தல் கமிஷன் சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை முடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.