Published:Updated:

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுடன் விமான நிலையத்துக்கு குடிபோதையில் வந்தாரா ஏக்நாத் ஷிண்டே?!

ஏக்நாத் ஷிண்டே

சூரத்தில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க வந்தபோது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குடிபோதையில் தள்ளாடியபடி வந்ததாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுடன் விமான நிலையத்துக்கு குடிபோதையில் வந்தாரா ஏக்நாத் ஷிண்டே?!

சூரத்தில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க வந்தபோது மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குடிபோதையில் தள்ளாடியபடி வந்ததாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Published:Updated:
ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிராவில் தற்போது முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே கடந்த மாதம் 20-ம் தேதி சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சூரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்கு எம்.எல்.ஏ-க்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். எம்.எல்.ஏ-க்களை அஸ்ஸாமில் வைத்துவிட்டு ஏக்நாத் ஷிண்டே மட்டும் அடிக்கடி குஜராத் வந்து பாஜக தலைவர்களைச் சந்தித்து அடுத்தகட்ட திட்டம் குறித்து ஆலோசித்துவிட்டுச் சென்றார். சூரத்திலிருந்து எம்.எல்.ஏ-க்களுடன் அஸ்ஸாமுக்கு அழைத்துச் சென்றபோது விமான நிலையத்தில் ஏராளமான பத்திரிகையாளர்களும், பாஜக ஆதரவாளர்களும் கூடியிருந்தனர்.

விமான நிலையத்தில் ஷிண்டே
விமான நிலையத்தில் ஷிண்டே

அப்போது அங்கு ஷிண்டே மிகவும் தள்ளாடியபடி விமான நிலையத்துக்கு வருவது போன்ற ஒரு வீடியோ வைரலாகயிருக்கிறது. இந்த வீடியோவை பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். வீடியோவில் ஏக்நாத் ஷிண்டேயால் சரியாகப் பத்திரிகையாளர்களிடம் பேசவும் முடியவில்லை, நடக்கவும் முடியாமல் இருப்பது போன்று வீடியோவில் இருந்தது. இதனால் மது அருந்திவிட்டு வந்தாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது... ``ஏக்நாத் ஷிண்டே இரண்டு நிமிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டதை அதில் எடிட் செய்து சில குறிப்பிட்ட பகுதியை மட்டும் மர்ம நபர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்” என அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். பயணம் செய்த களைப்பு காரணமாக அவரால் சரியாக நடக்க முடியாமல் போஉஒருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதோடு பத்திரிகையாளர்கள் ஒரே நேரத்தில் வந்து குவிந்து கேள்வி கேட்டதால் அவரால் அவசரத்தில் பதில் சொல்ல முடியாமல் வாய் உளறியிருக்கலாம் என்று வீடியோவை முழுமையாகப் பார்த்தபோது தெரிய வந்தது என்கிறார்கள். குடித்துவிட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டை ஷிண்டேயின் ஆதரவாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அதோடு சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டு சரியாகப் பேசியதும் முழுமையான வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!