Published:Updated:

`எது உண்மையான சிவசேனா?’ - ஆதாரங்களைத் தாக்கல் செய்ய உத்தவ், ஷிண்டே அணிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

ஏக்நாத் ஷிண்டே-உத்தவ்

எது உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைத் தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

`எது உண்மையான சிவசேனா?’ - ஆதாரங்களைத் தாக்கல் செய்ய உத்தவ், ஷிண்டே அணிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு

எது உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைத் தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

Published:Updated:
ஏக்நாத் ஷிண்டே-உத்தவ்

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த மாதம் வீசிய புயல் இப்போதுதான் அடங்கியிருக்கிறது. சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டது. சிவசேனா அதிருப்திக்குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக அரசு பதவியேற்றிருக்கிறது. துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றிருக்கிறார். தற்போது உண்மையான சிவசேனா யாருடைய அணி என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களிடம் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது. சட்டமன்றம், மக்களவையில் ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்தவர்களையே உண்மையான சிவசேனாவைச் சேர்ந்தவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அடுத்தகட்டமாக கட்சியைத் தனது கட்டுக்குள் கொண்டுவருவதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.

தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்து, தங்களுக்குக் கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று கோரி தேர்தல் கமிஷனில் ஏக்நாத் ஷிண்டே அணி சார்பாக இரண்டு நாள்களுக்கு முன்பு மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்களுக்கு மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏ-க்களில் 40 பேரும், மக்களவையில் மொத்தமுள்ள 18 பேரில் 12 பேரும் ஆதரவாக இருப்பதால், தேர்தல் கமிஷன் சட்டப் பிரிவு 15-ன் கீழ் தங்களது அணியை உண்மையான சிவசேனாவாக அங்கீகரிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உத்தவ் தாக்கரே தரப்பில் கட்சியின் மூத்த தலைவர் அனில் தேசாய், தேர்தல் கமிஷனுக்கு பல முறை கடிதம் எழுதியிருக்கிறார். அதில் கட்சியில் சிலர் சட்டவிரோதமாகச் செயல்படுகின்றனர். கட்சிக்கு எதிராகச் செயல்படுபவர்கள் கட்சியின் சின்னத்தையோ அல்லது பால் தாக்கரே பெயரையோ பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு கிடைத்தவுடன், தேர்தல் கமிஷன் துரித வேகத்தில் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்குள் உண்மையான சிவசேனா யாருடையது என்பதை முடிவுசெய்யவேண்டிய நெருக்கடியில் தேர்தல் கமிஷன் இருக்கிறது. இதற்காக ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே ஆகிய அணிகள் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களைத் தாக்கல் செய்யும்படி தேர்தல் கமிஷன் முறைப்படி கடிதம் அனுப்பியிருக்கிறது. இந்தக் கடிதத்துக்கு வரும் 8-ம் தேதி பிற்பகல் 1 மணிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. தேர்தல் கமிஷன் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இரு அணியினரும் கொடுத்திருக்கும் கடிதங்களைப் பார்க்கையில் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தலைமையில் இரண்டாக உடைந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, இரு தரப்பினரும் எழுத்துபூர்வமாக தங்களது தரப்பிலிருக்கும் ஆதாரங்கள், விளக்கங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

தேர்தல் கமிஷன் இவற்றைக் கேட்கும் என்று முன்னரே கருதிய உத்தவ் தாக்கரே, ஏற்கெனவே தன்னுடைய மாவட்ட நிர்வாகிகளுக்கு 50 லட்சம் பேர் கொண்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை உடனே தயாரிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். மற்றொரு புறம் ஏக்நாத் ஷிண்டே மாநகராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர்களை தனது பக்கம் இழுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காகத் தனது அணியில் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்களிடம் சொல்லி அவர்களைக் களத்தில் இறக்கிவிட்டு வேலை செய்துவருகிறார்.

இரு தரப்பினரும் தங்களது அணிதான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைட்ஜ் திரட்டுவதில் பம்பரமாக வேலை செய்துவருகின்றனர். நினைத்தது நடந்துவிட்டதாகக் கருதி பாஜக இந்த நிகழ்வுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. உத்தவ் தாக்கரே இல்லாத சிவசேனாவை உருவாக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.