Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

வெல்லவைத்த அட்வைஸர், அரசியல் விவகாரங்களிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்துவிட்டார். தோற்ற அணியின் அட்வைஸரோ அடுத்த ஐந்து வருடங்களுக்கான அக்ரிமென்ட் கைக்கு வந்துவிட்டதாகச் சொல்லி மீண்டும் களப்பணிகளில் குதித்துவிட்டார். ‘முதலில் கட்சி… அடுத்து ஆட்சி’ என்பதுதான் அசைன்மென்ட்டாம்! #வெற்றிநடை போடும் அட்வைஸர்!

எதிர்த்து போட்டியிட்ட அத்தனை பேரையும் டெபாசிட் இழக்கவைத்த முன்னாள் புள்ளி கடைசி நேரக் கஷ்டத்துக்காகத் தன் பண்ணை வீட்டையே விற்றுவிட்டாராம். ‘கட்சிக்காக ஒரு மனுஷன் இப்படித்தான்யா கஷ்டப்படணும்’ என உடன்பிறப்புகள் நெகிழ, வளமான துறையைக் கொடுத்து அசத்துகிற முடிவில் இருக்கிறதாம் தலைமை. #சின்ன மீனைப் போட்டு...

கிசுகிசு

ரிசல்ட் நாளில் யாரிடமும் பேசாத முதன்மைப் புள்ளி. ஒரே ஓர் அமைச்சருக்கு மட்டும் போன் பண்ணிப் பாராட்டினாராம். ‘உங்க வெற்றிதான் கட்சியோட வெற்றி’ என்றாராம். இம்சை கொடுத்த இனிஷியல் பிரமுகரைத் தோற்கடித்ததால்தான் இந்தப் பாராட்டாம். #வெல்டன் ‘ராஜு’ பாய்!

எதிர்பார்த்தபடியே
மூன்றாம் இடம் பிடித்ததில் ‘அண்ணன்’ தலைவருக்கு ரொம்பவே நிம்மதியாம். கணிசமான வாக்குகள் பெற்று கவனம்பெற்ற தம்பி, தங்கைகளை போனிலேயே புகழ்ந்து தள்ளிவிட்டாராம். விரைவில் அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்து சிறப்பு விருந்து கொடுக்கப்போகிறாராம். #ஆடு, கோழி, ஆமைன்னு அட்டகாச விருந்தா இருக்குமே…

பொதுவான மூத்த தலைவரே வெற்றிக்குப் போராட, திடீரென செயல் புள்ளியிடமிருந்து அவருக்கு போன் வந்திருக்கிறது. ‘‘இந்த முறை நீங்கள் சட்டமன்றத்துக்குள் இருந்தே ஆகணும்’’ எனச் செயல் புள்ளி சொல்ல, பொதுத் தலைவர் பூத் ஏஜென்ட்டுகளை விரட்டியெடுத்தாராம். ஒருவழியாக வெற்றி உறுதியாக, ‘‘நீங்க தோற்றே போயிருந்தாலும் எந்தத் தொகுதியிலாவது நிறுத்தி ஜெயிக்கவெச்சு உங்களை என் பக்கத்துலேயே உட்காரவெச்சிருப்பேன்’’ எனச் செயல் புள்ளி சொல்ல, சும்மாவே கண்ணீர்விடும் மூத்த தலைவர் கதறித் தீர்த்தாராம். #கொஞ்சம் தொகுதியை கவனிச்சிருக்கலாம்!

கிசுகிசு

‘நம்மளை கூட்டணியில் சேர்த்திருந்தா இந்நேரம் எடப்பாடி முதல்வராகியிருப்பார். இப்போ புரியும்ல நம்ம அருமை?’ என்றாராம் கப்பல் தலைவரின் மனைவி. இதில் கடுப்பான நிர்வாகிகள், ‘உங்க அவசரத்தாலும் கோபத்தாலும்தான் இப்போ டெபாசிட் காலியாகி நிக்கிறீங்க…’ எனச் சொல்ல, அதன் பிறகுதான் அம்மணி அமைதியானாராம். #யாகாவாராயினும்...

சட்டமன்றத்துக்குள் புதிதாகக் கால்வைக்கும் வாரிசுக்கு, திரையுலகிலிருந்து பலரும் போன் பண்ணியிருக்கிறார்கள். ஆனால், வாரிசு போனைத் தொடவே இல்லையாம். ‘ஆதரிச்சு பிரசாரம் பண்ண யாரும் வரலை. வாழ்த்துக்கு மட்டும் வாராங்களா?’ என சைலன்ட் மோடிலேயே இருந்தாராம். பிறகு என்ன நினைத்தாரோ, அடுத்த நாளே அனைவருடைய அழைப்புக்கும் பதில் சொல்லி, நன்றி பகர்ந்தாராம். #தாத்தாவோட பக்குவம்!

கிசுகிசு

தேர்தலில் ஒதுங்கியிருந்த தலைவி, “எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்திருந்தால், மூன்றாவது முறையும் ஜெயித்து சாதிச்சிருக்கலாம்” என வருந்தினாராம். இணைப்பு முயற்சிகளுக்கு ஒத்துவராமல் கெத்து காட்டிய முதன்மைப் புள்ளி மீதுதான் தலைவிக்குத் தாங்க முடியாத வருத்தமாம். அதேநேரம் தன் பேச்சைக் கேட்காமல் வீம்புக்குப் போட்டியிட்ட அக்கா மகன் மீதும் ஆத்திரம் குறையவில்லையாம்! #அடுத்தது என்ன...

சர்வே நிலவரத்தை இழுபறியாகச் சொன்னாலும், ‘மீண்டும் அ.தி.மு.க-தான் வரும். ஸ்டாலின் இந்த முறையும் ஏமாறப்போவது உறுதி’ எனத் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் சொல்லிக்கொண்டேயிருந்தாராம் முன்னாள் சேனல்காரர். தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி வெளியாக, ‘எனக்கு அப்பவே தெரியும் சார்’ என்கிறரீதியில் அமைச்சர் பட்டியலில் அடிபடும் ஆட்களுக்கு போன் செய்து பாராட்டினாராம். #அது போன மாசம்....

நடுநிலை நடிகரையே வீழ்த்தி வெற்றிபெற்ற காவிக் கட்சி அம்மணிக்கு சந்தோஷம் பிடிபடவில்லையாம். தான் வென்றதைவிட தன் கட்சியின் ‘எல்’ போர்டு தலைவர் தோற்றதில்தான் அம்மணிக்குக் கொண்டாட்டமாம். அம்மணிக்கு எதிராக அவ்வளவு வியூகங்களைச் செய்தாராம் ‘எல்’ போர்டு தலைவர். அதையும் தாண்டி வென்றதால்தான் இந்தப் பூரிப்பாம்! #மலர்ந்தும் மலராத...