அரசியல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

“இதுக்குத்தான் அந்தம்மாவை சேர்த்துக்கங்கன்னு சொன்னேன். இப்போ தி.மு.க கையில ஆட்சியைக் கொடுத்துட்டீங்க’’ என முன்னாள் முதன்மைப் புள்ளியிடம் ரொம்பவே ஆதங்கப்பட்டாராம் ஆலோசகர். ‘‘இப்பவும் தாமதம் ஆகலை. அந்தம்மாகிட்ட கலந்துபேசி கட்சியை பலமாக்குங்க. உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் தி.மு.க-வைத் தோற்கடிக்கலாம்” என்றும் சொன்னாராம். #குரு பார்க்கக் கோடி நன்மை

கிசுகிசு

இழுபறிநிலை நீடித்து இறுதியில் தோற்றுப்போனார் நடுநிலைக் கட்சியின் தலைவர். தான் தோற்றுப்போனதைவிட கட்சி வாங்கிய மிகக்குறைவான வாக்குவங்கிதான் அவரை ரொம்பவே கவலைப்பட வைத்துவிட்டதாம். மூன்றாம் இடத்தைப் பிடித்த அண்ணன் தலைவர் பெயரைச் சொல்லி, ‘அவரைவிட நான் கீழே போயிட்டேனே…’ எனப் புலம்புகிறாராம். #ஒரே ‘டார்ச்’சர்ப்பா!

பிரசாரத்தில் செயல் புள்ளியை வறுத்தெடுத்த முன்னாள் மில்க் மினிஸ்டர் பயத்தில் உறைந்துகிடக்கிறாராம். இரட்டைப் புள்ளிகளுக்கு இடையே முட்டல் நடப்பதால், காவிக்கட்சியில் சேர்ந்தால்தான் வழக்கு வம்புகளிலிருந்து தப்பிக்க முடியும் என நம்புகிறாராம். ‘டெல்லிக்கு வரலாமா?’ என மில்க் புள்ளி கேட்க, கிரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம். #‘மஞ்சள்’ முகமே வருக…

கிசுகிசு

கப்பல் தலைவர் வீட்டுக்குத் திடீரென போன வாரிசு புள்ளி, ‘என்ன தேவைன்னாலும் எனக்கு போன் பண்ணுங்க. இது உங்க ஆட்சி’ எனச் சொல்லியிருக்கிறார். ‘இதற்கு முன்னால் நடந்ததை மறப்போம். அப்பா உங்களைச் சீக்கிரமே வந்து பார்ப்பார்’ என வாரிசு சொல்ல, கப்பல் தலைவர் நெகிழ்ந்துபோனாராம். #எங்கள் அண்ணா

தன்னுடைய தோல்விக்குத் தோட்டத்து தலைவரின் உள்ளடி வேலைதான் காரணம் எனக் கொந்தளிக்கிறாராம் சட்டத்தைக் கையில் வைத்திருந்த புள்ளி. ‘எனக்குச் செய்த துரோகத்தால்தான் தோட்டத்து தலைவரின் கட்சியும் பெரிதாக ஜெயிக்காமல் போனது’ எனச் சாபம் விடுகிறாராம். ஆதரவாளர்கள் சொல்கிற ஆறுதலையெல்லாம் சட்டை செய்யாமல் தோட்டத்துத் தலைவரை வறுத்தெடுக்கிறாராம். #‘நிதானம்’ முக்கியம்ல…

னது வலதுகரமாக இருக்கும் பிராமிஸ் புள்ளி தோற்றுப்போனதில் பம்பரமாகச் சுழலும் தலைவருக்குத் தாங்க முடியாத வருத்தம். ‘கூட்டணிக் கட்சிக்காரங்களே உள்ளடி வேலை பார்த்துட்டாங்க’ என ஆதாரங்களை அள்ளிப்போட்டு பிராமிஸ் புள்ளி சொல்ல, ‘அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ எனப் புயல் தலைவரே அமைதியாக்கிவிட்டாராம். #பொறுத்தது புயல்!

கிசுகிசு

விசுவாசத்தின் அடையாளமாகத் தன்னைக் காட்டிக்கொண்ட ஹெல்த் புள்ளி, ஆட்சி மாறியதும் அந்தர்பல்டி அடித்து பொக்கேயுடன் புது நிர்வாகத்தினரைப் போய்ப் பார்க்க, முன்னாள் முதன்மைப் புள்ளி நொந்துபோனாராம். இன்னொரு அதிகாரி மூலமாக இது குறித்துக் கேட்க, ‘நானாகச் செல்லவில்லை. கொரோனா பரவல் குறித்து விசாரிப்பதற்காக அவர்களாகத்தான் அழைத்தார்கள்’ என்றாராம் அந்தர்பல்டி அதிகாரி. #அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…

உளவுப்பணியில் இருந்த முன்னாள் நிலவு அதிகாரிதான் புது முதல்வரின் ஆஸ்தான ஆளாம். அதிகாரிகள் குறித்த ஆலோசனைகளையும் அவர்தான் வழங்குகிறாராம். முக்கிய ஆட்களிடம் பேச இவரையே போன் போட்டுக் கொடுக்கச் சொல்கிறாராம் புது முதல்வர். அந்த அளவுக்கு நம்பிக்கையான ஆளாக மாறிவிட்டாராம்! #சந்திரனே... சூரியனே...

எடப்பாடி
பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது சம்பந்தமே இல்லாமல் அவரைச் சந்தித்து பொக்கே கொடுத்தார் மதுரை காமெடிக்காரர். ஸ்டாலின் வெற்றிபெற்றவுடன் முதல் ஆளாக எல்லோரையும் முந்திக்கொண்டு அதே காமெடிக்காரர் பொக்கே கொடுக்க, ‘அரசியல்வாதிகளையே தூக்கிச் சாப்பிடுற ஆளா இருக்காரே…’ என அசந்துபோனார்கள் உடன்பிறப்புகள். #அதுல ஒரு குத்து… இதுல ஒரு குத்து…

காவிக்கட்சியின் நான்கு வெற்றியாளர்களில் டெம்பிள் தொகுதியின் வேட்பாளருக்குக் கூட்டணி தர்மப்படி நிறைய ஸ்வீட் பாக்ஸ் ஒதுக்கப்பட்டனவாம். ஆனால், ‘எதையும் கொடுத்து வாக்கு வாங்கும் பழக்கம் எனக்கு இல்லை’ எனச் சொல்லி அதை வாங்க மறுத்துவிட்டாராம் அவர். ஆனாலும் அவருக்குக் கொடுத்ததுபோல் கணக்கு காட்டி லம்ப்பாக அமுக்கிவிட்டார்களாம் சிலர். #ஓ, இதுதான் ‘காந்தி’ கணக்கா?