Published:Updated:

ePass குளறுபடிகள்: மக்களின் பிழைப்பைக் கேள்விக்குறியாக்கும் தமிழக அரசு!

ePass குளறுபடி
ePass குளறுபடி

முதன்முதலாக ஊரடங்கு அமலானபோது, 'ஊருக்குப் போய்விட்டு சீக்கிரம் வந்துவிடலாம்' என்று போட்டது போட்டபடி நகரங்களிலிருந்து கிளம்பிய பலரால் இன்னமும் திரும்ப முடியவில்லை

இ-பாஸ் மூலம் கொரோனா கட்டுப்படுத்தப்படுவதாக நம்புகிறது அரசு. ராணிப்பேட்டையும் வேலூரும், தலா 1,000-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுள்ள பக்கத்து பக்கத்து மாவட்டங்கள். மதுரையும் விருதுநகரும், தலா 2,000-க்கும் மேற்பட்ட பாசிட்டிவ் நோயாளிகளுள்ள பக்கத்து பக்கத்து மாவட்டங்கள். நெல்லையும் தூத்துக்குடியும், தலா 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுள்ள பக்கத்து பக்கத்து மாவட்டங்கள். 'ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்குப் போகிறவர்களால் கொரோனா பரவிவிடும்' என அச்சப்படுகிற அளவுக்கான பச்சை மண்டலம் என எதுவுமே இல்லை.

உண்மையைச் சொல்வதென்றால், ஒரே மாவட்டத்துக்குள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்குச் செல்பவர்களால்தான் புதிய புதிய இடங்களில் நோய்த்தொற்று ஏற்படும். ஆனால், மாவட்ட எல்லைக்கோட்டைப் பிடித்துக்கொண்டு தொங்குகிறது அரசு. ஆயிரக்கணக்கான மக்களின் பிழைப்பையே இது கேள்விக்குறியாக்கிவிட்டது.

முதன்முதலாக ஊரடங்கு அமலானபோது, 'ஊருக்குப் போய்விட்டு சீக்கிரம் வந்துவிடலாம்' என்று போட்டது போட்டபடி நகரங்களிலிருந்து கிளம்பிய பலரால் இன்னமும் திரும்ப முடியவில்லை. இடைப்பட்ட நான்கு மாதங்களில் வேலை, வியாபாரம், தொழில் என இழப்புகளைச் சந்தித்த அவர்கள், தங்கள் கிராமங்களில் என்ன செய்வார்கள்? பலருக்கு ரேஷன் கார்டுகூட அந்த கிராமத்தில் கிடையாது.

ePass குளறுபடிகள்: மக்களின் பிழைப்பைக் கேள்விக்குறியாக்கும் தமிழக அரசு!

'நான்கு பேருக்கு மேல் கூட்டம் சேரக் கூடாது' என விதி இருக்கிறது. ஆனால், கொரோனாவிலிருந்து மீண்ட அமைச்சர் செல்லூர் ராஜூவை வாழ்த்த ஆயிரம் பேர் கூடுகிறார்கள்.

திருமணம், மருத்துவச் சிகிச்சை, மரணம் போன்றவை தவிர வேறு காரணங்களுக்கு இ-பாஸ் மறுக்கப்படுகிறது. ஆனால், சிலரால் மட்டும் இதை வாங்கிவிட முடிகிறது. பலபேர் மோசடி இ-பாஸ்கூட இல்லாமலே கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, மதுரை, புதுச்சேரி என்று அடிக்கடி சென்று வந்துகொண்டுள்ளனர். "எங்களை யாரும் ஒரு இடத்துலயும் நிறுத்தி எந்த பாஸும் கேட்கலையே'' என்கிறார்கள் அவர்கள். பிறகு 'மக்கள் ஒத்துழைக்கவில்லை' எனப் புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

முகக்கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல், ஜுரப் பரிசோதனை போன்ற அவசியமான கட்டுப்பாடுகள் மட்டுமே போதும். இவற்றை மீறினால் அபராதம் விதிக்கலாம்.

- தமிழகத்தின் பெரும்பாலான மக்களுக்கு மறைமுகமாக இரண்டு வாய்ப்புகளை மட்டுமே அரசு அளித்திருக்கிறது. ஒன்று, 'கொரோனா நோய் தாக்கி செத்துப் போகிறாயா? இரண்டு, ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கி செத்துப் போகிறாயா?' என்பவையே அவை! கொரோனா தாக்கினால்கூட உயிர் பிழைப்பதற்கு 98 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கியவர்களுக்கு, பிழைப்புக்கான வாய்ப்புகள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை.

> ஊரடங்கு கொரோனாவை ஒழிக்காது

> வீழ்ச்சியடைந்த எட்டு துறைகள்

> என்ன செய்ய வேண்டும்?

- இந்த அம்சங்களை உள்ளடக்கிய சிறப்புக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க இங்கே க்ளிக் செய்க.. https://bit.ly/3k9K7Wd > நோயால் சாவா, ஊரடங்கால் சாவா? - எடப்பாடி கொடுக்கும் இரண்டு சாய்ஸ்... தொடரும் ஊரடங்கு.. முடங்கும் மக்கள்! https://bit.ly/3k9K7Wd

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிப்பதுடன், 15 ஆண்டுகால பொக்கிங்களிலும் வலம் வரலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு