Published:Updated:

``சோனியா காந்தி குடும்பம் மன்னித்தாலும், காங்கிரஸ்காரர்கள்...” - திருநாவுக்கரசர் காட்டம்

திருநாவுக்கரசர் ( நரேஷ் குமார்.வெ )

பேரறிவாளன் விடுதலை குறித்தும், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அக்கட்சியின் திருச்சி தொகுதி எம்.பி திருநாவுக்கரசரிடம் பேசினோம்...

``சோனியா காந்தி குடும்பம் மன்னித்தாலும், காங்கிரஸ்காரர்கள்...” - திருநாவுக்கரசர் காட்டம்

பேரறிவாளன் விடுதலை குறித்தும், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் அக்கட்சியின் திருச்சி தொகுதி எம்.பி திருநாவுக்கரசரிடம் பேசினோம்...

Published:Updated:
திருநாவுக்கரசர் ( நரேஷ் குமார்.வெ )

``பேரறிவாளன் விடுதலையை வரவேற்றுவிட்டு, போராட்டத்திலும் கலந்துகொண்டிருக்கிறீர்களே?”

பேரறிவாளன்
பேரறிவாளன்

``வரவேற்கிறேன் என்ற வார்த்தையையே நான் பயன்படுத்தவில்லை. வரவேற்கவேண்டிய தேவையும் எனக்கில்லை. செய்திகளில் திரித்து வெளியிட்டதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. எம்.பி-யாக இருந்தாலும், காங்கிரஸ் தொண்டன் என்கிற முறையில், திருச்சியில் போராட்டத்தில் பங்கேற்றேன். அங்கு பேரறிவாளன் விடுதலைக்கு எதிராகப் பல கருத்துகளைப் பதிவிட்டேன். சோனியா காந்தி குடும்பமே அந்த ஏழு பேரையும் மன்னித்தாலும், காங்கிரஸ்காரர்கள் மனதில் ஆறாத வடுவாகவே தொடர்கிறது.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பேரறிவாளன் விடுதலையை அரசியல் கட்சிகள் கொண்டாடிவருகின்றனவே?”

பேரறிவாளன் விடுதலைக் கொண்டாட்டம்
பேரறிவாளன் விடுதலைக் கொண்டாட்டம்


“விடுதலை பெற்றாலும் அவர் கொலைக் குற்றவாளிதான். விடுவித்த உச்ச நீதிமன்றம்கூட நிரபராதி என்று சொல்லவில்லை. அதனால் விடுதலையைக் கொண்டாடுவது சரியல்ல. தியாகிபோலவும், ஹீரோபோலவும் உருவகப்படுத்துவது, புண்பட்ட காங்கிரஸ் தொண்டர்களின் இதயங்களில் மேலும் குத்துவதுபோல் உள்ளது.”

“சசிகலா விடுதலையைக் கொண்டாடியதைவிட இது பரவாயில்லைதானே?”

“அந்தக் கொண்டாட்டங்களையும் நாங்கள் வரவேற்கவில்லை. வாழ்த்து சொல்லவில்லை. அதுவும் தவறுதான்.”

சசிகலா
சசிகலா

``சிறுபான்மை மக்களுக்கு காங்கிரஸில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்கிறார்களே?”

``சிறுபான்மை மக்களை அரவணைத்துப் பாதுகாக்கும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனது மகன் அறந்தாங்கியில் வெல்வதற்கே இஸ்லாமியர்களின் வாக்குகள்தான் காரணம். சட்டமன்றத் தேர்தலில் வேளச்சேரியில் ஹசனுக்கு சீட் கொடுத்து எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். எம்.பி தேர்தலில் தேனி தொகுதி ஆரூனுக்காகத்தான் கேட்டுப் பெறப்பட்டது. ஆனால், அவரால் போட்டியிட முடியவில்லை. கட்சிப் பதவிகளில் சிறுபான்மையினருக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நானும் வலியுறுத்துவேன்.”

``சிறுபான்மையினரை ஓட்டுவங்கியாகத்தான் தி.மு.க பயன்படுத்துவதாக அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் குற்றம்சாட்டுகின்றனவே?”

திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
நரேஷ் குமார்.வெ

“அப்படியெல்லாம் இல்லை. காங்கிரஸ்காரராக இருந்தாலும் சிறுபான்மை ஆணையத்துக்கு பீட்டர் அல்போன்ஸை நியமித்தார் முதல்வர். அதேபோல், முஸ்லிம் லீக் அப்துல் ரஹ்மான் வக்பு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். அமைச்சரவையிலும் இரண்டு முஸ்லிம்கள், நான்கு கிறிஸ்தவர்கள் உள்ளனர். சிறுபான்மையினர் நலனைக் காக்கும் கட்சியாக தி.மு.க உள்ளது.”

“காங்கிரஸ் சட்டமன்றக்குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை தி.மு.க-வுக்கு ஓவராக ஜால்ரா அடிப்பதாக கட்சியினரே குற்றம்சாட்டுகிறார்களே?”

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

“ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக இருந்தபோதும், சட்டமன்றக்குழுத் தலைவராக முதன்முறை பதவி வகிக்கிறார் செல்வப்பெருந்தகை. சட்டமன்றத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் டெல்லியில் கருத்து கேட்டுச் செயல்பட முடியாது. அவருடைய சுய முடிவின்படி நடந்துகொள்கிறார். போகப்போக இன்னும் சிறப்பாகச் செயல்படுவார் என்ற நம்பிக்கையுள்ளது.”

``தி.மு.க ஓராண்டு ஆட்சி எப்படி?”

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

``பாராட்டுகுரியது. ஒரே ஆண்டில் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முடியாது. மாநில வருவாய், மத்திய அரசு நிதி, கடன்சுமை, அரசு ஊழியர் சம்பளம் என பலப் பிரச்னைகளுக்கு மத்தியில் திட்டங்களை நிறைவேற்றியும், முதலீடுகளை ஈர்த்தும், உற்பத்தியைப் பெருக்கியும் முடிந்தவரை சிறப்பாகவே செயல்பட்டுவருகிறது ஆட்சி. இதுவரை எந்த முதல்வரும் செய்யாத வகையில், 24 x 7 என்ற வகையில் ஓய்வில்லாமல் உழைத்துவருகிறார் முதல்வர் ஸ்டாலின். முதன்முறை ஆட்சியிலேயே மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகவும் திகழ்கிறார் ஸ்டாலின்.”

``மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து?”

மோடி
மோடி

``2014, 2019 இரு தேர்தல்களிலும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாட்டின் பொருளாதாரம், ஜி.டி.பி நிலையாக உயர வேண்டும், அந்நியச் செலாவணி கையிருப்பு, ஏற்றுமதி உயர்ந்து, இறக்குமதி குறைய வேண்டும். அனைவருக்குமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். வேலைப்புவாய்ப்புகள் பெருக வேண்டும். விலைவாசி கட்டுக்குள் இருக்க வேண்டும். இப்படியான எல்லாப் படித்தரங்களிலும் மோடி அரசு தோற்றுவிட்டது. நேரு காலத்தில் தொடங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கிவருகிறார்கள். மொத்தத்தில் மோடி அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே நிலவுகிறது.”

``2024-ல் பா.ஜ.க-வை எதிர்க்கும் அளவுக்கு காங்கிரஸ் வலுவாக இருக்கிறதா?”

ராகுல் காந்தி - சோனியா காந்தி
ராகுல் காந்தி - சோனியா காந்தி

``யானைக்கும் அடி சறுக்கும் என்ற வகையிலான பின்னடைவுதான் இது. ஒருபோதும் காங்கிரஸ் வீழ்ச்சியடையவில்லை. ஜனசங்கமாக இருந்ததிலிருந்து, ஒவ்வொரு முறையும் வாஜ்பாய்தான் பா.ஜ.க-வால் முன்னிறுத்தப்பட்டார். அதுபோல, ராகுல் காந்தியைத்தான் நாங்கள் ஒவ்வொரு முறையும் முன்னிறுத்துவோம். நிச்சயம் 2024-ல் வெற்றிபெற்று ஆட்சியும் அமைப்போம்.”