Published:Updated:

``5 மாநிலத் தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டுமே பொறுப்பல்ல!" - மல்லிகார்ஜுன கார்கே விளக்கம்

மல்லிகார்ஜுன கார்கே ( ட்விட்டர் )

`நாங்கள் பா.ஜ.க-வையும் அதன் சித்தாந்தத்தையும் எதிர்த்து போராடுவோம். அடுத்த தேர்தலில் முன்பைவிடச் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறோம்' என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில்கூட ஆட்சியைப் பிடிக்க முடியாமல் படுதோல்வியடைந்தது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இரு இடங்களை மட்டுமே பெற்றது. மேலும், பஞ்சாப்பில் ஆட்சியைக்கூடத் தக்கவைத்துக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரிய கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சோனியா, ராகுல், பிரியங்கா
சோனியா, ராகுல், பிரியங்கா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டுமே பொறுப்பல்ல. ஐந்து மாநில காங்கிரஸ் தலைவர்களும், எம்.பி-க்களும்கூட பொறுப்புதான். அதனால், அவர்மீது மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளோம். சோனியா காந்தி ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் பா.ஜ.க-வையும், அதன் சித்தாந்தத்தையும் எதிர்த்துப் போராடுவோம். அடுத்த தேர்தலில் முன்பைவிடச் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறோம்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism