Published:Updated:

``அண்ணாமலையின் பதிவுகளுக்கெல்லாம், நான் பதில் கூறினால் சரியாக இருக்காது!" - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
News
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

``நானும், அமைச்சர் நேருவும் பேசிக்கொள்வதாக வெளியாகியிருக்கும் வீடியோ குறித்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவுகளுக்கெல்லாம் நான் பதில் கூறினால் சரியாக இருக்காது." - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

Published:Updated:

``அண்ணாமலையின் பதிவுகளுக்கெல்லாம், நான் பதில் கூறினால் சரியாக இருக்காது!" - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

``நானும், அமைச்சர் நேருவும் பேசிக்கொள்வதாக வெளியாகியிருக்கும் வீடியோ குறித்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவுகளுக்கெல்லாம் நான் பதில் கூறினால் சரியாக இருக்காது." - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
News
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் சோஷியல் டெமாக்ரடிக் பீப்புள் ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சி, காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவிருப்பதாக அந்தக் கட்சியினர் கூறிவந்தனர். இந்த நிலையில், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு எஸ்.டி.பி.ஐ கட்சியிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருந்தது. இடைத்தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போட்டியிடவில்லை என்றும், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவளிக்கவிருப்பதாகவும் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஈரோட்டில் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பாரம்பர்யமிக்க கட்சியிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கும் அப்பழுக்கு இல்லாத தலைவராக இருக்கிறார். சிறந்த வேட்பாளரான அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாங்கள் போட்டியிடவில்லை. அவரை ஆதரித்து மாநில அளவில் எங்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள்" என்றார்.

இளங்கோவன், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்.
இளங்கோவன், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸை ஆதரிப்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் ஆதரவுக் கடிதத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், ``எங்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியிருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சியினருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நானும், அமைச்சர் நேருவும் பேசிக்கொள்வதாக வெளியாகியிருக்கும் வீடியோ குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவுகளுக்கெல்லாம் நான் பதில் கூறினால் சரியாக இருக்காது. அந்த வீடியோவில் பேசிக்கொள்ளும் வார்த்தைகள் தெளிவாக இல்லை. கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போது நேரு என்னிடம் பேசியது தெளிவாகக் கேட்கவில்லை.

எனவே அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுத்தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். என் மகன் திருமகன் ஈ.வெ.ரா விட்டுச் சென்ற மக்கள் பணிகளை நான் தொடர வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே போட்டியிடுகிறேன். தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் நலனுக்காகப் பாதயாத்திரை சென்ற இளம் தலைவர் ராகுல் காந்தி போன்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி வேறு கூட்டணியில் இருக்கும்போது, நான் பேசியதை ஒட்டியும் வெட்டியும் மீம்ஸ்களாகப் போடுகிறார்கள். அரசியல் களத்தில் இன்று நாம் ஒரு கட்சியில் கூட்டணியில் இருப்போம். அரசியல் சூழல் மாறும்போது மாறும் கூட்டணிக்குத் தகுந்தவாறு விமர்சனங்களை முன்வைப்பது 1967-ம் ஆண்டுக்குப் பிறகு சகஜமாகிவிட்டது. எனவே, நான் எப்போதோ பேசியதைப் பற்றியெல்லாம் இப்போது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படுவதில்லை. என்னைப் பொறுத்தவரை நான் பிறந்த ஈரோட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னுடைய தாத்தா பெரியார் ஈ.வெ.ரா., ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்து நற்காரியங்களைச் செய்தார். 1957-ல் என்னுடைய தந்தை ஈ.வி.கே.சம்பத் எம்.பி-யாக இருந்து பல்வேறு பணிகளைச் செய்து கொடுத்திருக்கிறார். என்னுடைய மகன் திருமகன் ஈ.வெ.ரா ஒன்றரை ஆண்டாக இந்தத் தொகுதிக்காக பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்.

இளங்கோவன், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்
இளங்கோவன், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர்

இந்தக் குறுகியகாலத்தில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அவர் ஆற்றியிருக்கும் பணிகள் குறித்து இன்னும் நான்கைந்து நாள்களில் சாதனைப் பட்டியலைத் தயாரித்து நோட்டீஸாக விநியோகம் செய்யவிருக்கிறோம். ஏற்கெனவே எம்.பி-யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த நான் இப்போது எம்.எல்.ஏ பதவிக்காகப் போட்டியிடுவது கலெக்டராக இருந்தவர் பியூனாக மாறியதைப்போல என்று எழுந்திருக்கும் விமர்சனத்தை நான் பொருட்படுத்தப்போவதில்லை. ஏனெனில், சில நேரங்களில் கலெக்டரால் செய்ய முடியாததை ஒரு பியூன் செய்து முடிப்பார் என்பதால் மக்களோடு மக்களாக இருந்து அவர்களுக்குப் பணியாற்றவே விரும்புகிறேன்.

சிறுபான்மை மக்களுக்குப் பிரதமர் மோடி பல்வேறு கொடுமைகளை இழைத்திருக்கிறார். ஆயிரக்கணக்கான மக்களைப் பழிவாங்கிய மோடியின் கரங்களில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. அவரின் நண்பர்களான அதானி உள்ளிட்ட இரண்டு மூன்று பணக்காரர்களின் கையில்தான் இந்த நாடு இருக்கிறது. தற்போது அவர்களது ஊழல் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கிவிட்டது. அதானி நிறுவனத்தின் மோசடிகள் குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் முறையிட்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என்று சவால்விட்டிருக்கிறார்கள். எனவே ஊழல் செய்திருப்பவர்கள் தப்பிவிட முடியாது. ஈரோடு மக்கள் விஷயம் தெரிந்தவர்கள். அவர்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் இந்தத் தேர்தலில் எங்களை முழுமையாக ஆதரிப்பார்கள்" என்றார்.