Published:Updated:

உத்தரப்பிரதேசம்: `EVM மெஷின்கள் எங்கு போயின' - அகிலேஷ் யாதவைத் தொடர்ந்து நடிகரும் கேள்வி!

நடிகர் அலி பஸால்

"20 இயந்திரங்களும் பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டன. ஓட்டுப்பதிவு இயந்திரத்தோடு தொடர்பு இல்லாதவை அவை." -தேர்தல் ஆணையம் விளக்கம்.

உத்தரப்பிரதேசம்: `EVM மெஷின்கள் எங்கு போயின' - அகிலேஷ் யாதவைத் தொடர்ந்து நடிகரும் கேள்வி!

"20 இயந்திரங்களும் பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டன. ஓட்டுப்பதிவு இயந்திரத்தோடு தொடர்பு இல்லாதவை அவை." -தேர்தல் ஆணையம் விளக்கம்.

Published:Updated:
நடிகர் அலி பஸால்

1985 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்கனவே ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வருவது உத்தரபிரதேசத்தில் இதுவே முதல்முறை. தனக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் சமாஜ்வாதி கட்சியைப் புறக்கணித்து 255 க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையோடு யோகி ஆதித்யநாத்தே மீண்டும் முதல்வராக உள்ளார். இந்த நிலையில் சமாஜ்வாதி கடசியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இரண்டு நாட்களுக்கு முன் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட EVM எனப்படும் எலெக்ட்ரானிக் வாக்களிக்கும் இயந்திரங்கள் ட்ரக்குகளில் வேட்பாளர்களின் முன் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்டதாகவும் வழியில் பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அதனை நிராகரித்த தேர்தல் ஆணையம், "20 இயந்திரங்கள் ட்ராக்கில் கொண்டு செல்லப்பட்டன. தேர்தலில் ஓட்டு பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் என மக்கள் தவறாக புரிந்து கொண்டு அதை வழிமறித்தனர். அந்த 20 இயந்திரங்கள் பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டன. ஓட்டுப்பதிவு இயந்திரத்தோடு தொடர்பு இல்லாதவை அவை" எனப் பதிலளித்தது.

நேற்று உத்தர பிரதேச தேர்தல் நிலவரங்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் மீண்டும் இந்தக் குற்றச்சாட்டு விவாத பொருளானது. இதனைக் குறிப்பிட்டு நடிகர் அலி பஸால் அதற்கு முதல்நாள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பயிற்சிக்காக EVM மெஷின்கள் இரன்டு நாட்களுக்கு முன் இடம்மாற்றப்பட்டன? எதார்த்தமாக கேட்கிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.

மொத்தமாக உள்ள 403 இடங்களில் ஜனதா தளம் 111 இடங்கள் கைப்பற்றியுள்ளது. அகிலேஷ் யாதவ் தான் போட்டியிட்ட கார்கல் தொகுதியில், பாஜகவின் எஸ்பி சிங்க் பாஹே (SP Singh Baghe) விட 67000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் நிலைமை அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது. இதுவரை வெறும் 2 இடங்களிலே மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2017 தேர்தலில் காங்கிரஸ் 7 இடங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism