Published:Updated:

மகாராஷ்டிரா: `நாங்கள் எதிரிகள் இல்லை’ - பரபரப்பைப் பற்றவைத்த பட்னாவிஸ் - சஞ்சய் ராவத் சந்திப்பு

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

`வரும் காலங்களில் இது போன்ற சந்திப்புகள் அதிகம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். அரசியலில் எதுவும் நடக்கும்” என்று ஆளும்தரப்புக்கு `பகீர்’ கிளப்புகிறார்கள் சிலர்!

இரண்டுதொடர்ந்து தேசிய கவனம் பெறும் மகாராஷ்டிரா!

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த சில மாதங்களாகவே பரபரப்புக்குப் பஞ்சமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த பா.ஜ.க - சிவசேனா முதல்வர் ரேஸ் யுத்தம், தொடர்ந்து ஆட்சியமைக்கும் காட்சிகள், மாறுபட்ட கொள்கையை உடைய கட்சிகளின் கூட்டணி எனப் பரபரப்பு சற்று ஓய்ந்த நிலையில் கொரோனா பாதிப்பு தொடங்கியது. லாக்டெளனில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம், கங்கனா ரணாவத்தின் மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான அட்டாக் எனத் தொடர்ந்து தேசிய அளவில் அரசியல் கவனம் பெற்ற மாநிலமாக மகாராஷ்டிரா இருந்துவருகிறது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே

இந்தச் சிக்கல்கள் அனைத்திலும் சிவசேனா கட்சித் தரப்பில் மூத்த எம்.பி சஞ்சய் ராவத்- தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்தார். குழப்பங்களுக்கு சிவசேனா தரப்பில் பதில் சொல்லும் முகமாக மாறிப் போனார் சஞ்சய் ராவத். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடங்கி, கங்கனா ரணாவததுக்கு பதிலளிப்பது வரை என அனைத்திலும் சஞ்சய் ராவத் தேசிய கவனம் பெற்றார். இந்த நிலையில் தற்போது பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை மும்பையிலிருக்கும் நட்சத்திர ஓட்டலில் சந்தித்துப் பேசி, புதிய பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார் சஞ்சய் ராவத்.

நட்சத்திர ஓட்டலில் நடந்த சந்திப்பு!

மும்பை நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு, பா.ஜ.க சிவசேனா தலைவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாகச் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் அவர்கள் சந்தித்து அதிக நேரம் பேசியதில்லை. அதனால் இந்தச் சந்திப்பு அதிக கவனம் பெற்றது. இந்தச் சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என பாரதிய ஜனதா கட்சியின் சில நிர்வாகிகள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத்
உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத்
vikatan

சஞ்சய் ராவத் சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவின் நிர்வாக ஆசிரியர் என்ற பொறுப்பிலும் இருந்துவருகிறார். சாம்னாவில் பால் தாக்கரே, உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் ஆகியோரின் பேட்டிகள் வெளியாயிருக்கின்றன. தொடர்ந்து பா.ஜ.க மூத்த தலைவ்ரும் முன்னாள் முதல்வருமான பட்னாவிஸைப் பேட்டியெடுப்பது தொடர்பான சந்திப்புதான் நிகழ்ந்தது என விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்த இரண்டு மணி நேர சந்திப்பில் பேட்டி அளிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

அரசியலில் எதுவும் நடக்கலாம்!

மகாராஷ்டிர மாநில பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்தாய், ``ராவத், சாம்னாவுக்காக பட்னாவிஸைப் பேட்டியெடுக்க விரும்பினார். அது தொடர்பாகவே இருவரும் சந்தித்துப் பேசினார்கள். பீகார் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்று வந்த பிறகு பேட்டியளிப்பதாக பட்னாவிஸ், சஞ்சய் ராவத்திடம் கூறினார்’’ என்று தெரிவித்தார். பா.ஜ.கவினர் பலரும் இந்தச் சந்திப்பில் அரசியல் பேசவில்லை என்றாலும், சிலர், ``அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்றும் `பகீர்’ கிளப்பிவருகிறார்கள்.

பட்னாவிஸ்
பட்னாவிஸ்

இந்தப் பரபரப்பு சந்திப்பு குறித்து சஞ்சய் ராவத் பேசுகையில், ``முன்னாள் முதல்வரையும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்துப் பேசுவது குற்றமா? சரத் பவாரைப் பேட்டி எடுத்தபோதே, பட்னாவிஸ், ராகுல் காந்தி, அமித் ஷா உள்ளிட்டோரைப் பேட்டி எடுக்க விருப்பம் தெரிவித்திருந்தேன். எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவது ஒன்றும் குற்றமில்லையே... எங்களுக்குள் கொள்கை முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், நாங்கள் எதிரிகள் இல்லை. முதல்வருக்குத் தெரிந்துதான் இந்தச் சந்திப்பு நடைபெற்றது” என்றார்.

மகாராஷ்டிரா அரசின் எச்சரிக்கை... அமித் ஷாவுக்கு நன்றி!  Y+ பாதுகாப்பில் கங்கனா?

பா.ஜ.க சட்ட மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் பிரவீன் தாரேகர் என்பவர் இந்தச் சந்திப்பு தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், ``வரும் காலங்களில் இது போன்ற சந்திப்புகள் அதிகம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். அரசியலில் எதுவும் நடக்கும்” என்றார். அரசியலில் இந்த கூற்றையும் புறந்தள்ளிவிட முடியாது.

அடுத்த கட்டுரைக்கு