Published:Updated:

`ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள்; காரணம் அம்மா அரசு!' - சொல்கிறார் ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

`அ.தி.மு.க-வில் செந்தில் பாலாஜி இருந்தபோது அவர்மீது தி.மு.க குற்றம்சாட்டியது. இப்போது அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறது. செந்தில் பாலாஜி மீது தி.மு.க சுமத்திய குற்றச்சாட்டுகள் என்ன ஆகின என்று மக்கள் கேட்கிறார்கள்’ - ஆர்.பி.உதயகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், ``கழக ஒருங்கிணைப்பாளர்கள் விரைவில் உட்கட்சித் தேர்தலை அறிவிக்கவுள்ளனர். கிளைக் கழகம்வாரியாக ஜனநாயக வழியில் தேர்தலை நாம் நடத்த வேண்டும். கட்சியின் மூத்த முன்னோடிகள் இளைஞர்களுக்கு வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும்.

நம் இயக்கத்தின் பொன்விழாவைக் காணவிருக்கிறோம். அமைப்புரீதியாக நம் இயக்கம் 77 மாவட்டங்களாக இருக்கிறது. உட்கட்சித் தேர்தலை மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சிறப்பாக நடத்திக் காட்டி, பாராட்டு பெற வேண்டும்.

`ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம்’ என்றதோடு மட்டுமல்லாமல், `ரத்து செய்ய வழி தெரியும். அந்த ரகசியத்தைச் சொல்ல மாட்டோம்’ என்று பேசி, மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து தி.மு.க-வினர் ஏமாற்றிவிட்டனர்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

ஆனால், தற்போது கமிட்டியை மட்டும் அமைத்துள்ளனர். நீட் தேர்வை மாணவர்கள் சந்திக்க வேண்டும் என்று முரண்பட்ட கருத்துகளை அமைச்சர் கூறிவருகிறார்.

`தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை!' - கருத்துக் கணிப்பில் 87% பேர் கருத்து

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் குறிப்பாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி என்ற வீராங்கனை பங்கேற்கிறார். ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்கள் பங்கேற்பது குறித்து தி.மு.க பெருமையாகப் பேசுகிறது.

ரேவதி
ரேவதி

ஆனால், கடந்த பத்தாண்டுகளில் அம்மா ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்குப் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டதன் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு உயர்ந்துள்ளனர் என்பதுதான் உண்மை. ஆனால், அம்மா அரசு கட்டிய கட்டடத்துக்கு தி.மு.க ரிப்பன் வெட்டுகிறது.

அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் ரெய்டைச் சந்திக்கவேண்டியிருக்கிறது. அம்மா கொடுத்த பணிகளை எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பாகச் செயல்படுத்தினார். அவர் துடிப்புமிக்க இளைஞராக வலம்வந்தவர். போக்குவரத்துத்துறையை முன் மாதிரியாக மாற்றுவதற்குப் பாடுபட்டார்.

புதிய அரசுக்கு பல்வேறு சவால்கள் உள்ள நிலையில், அவற்றை கவனிக்காமல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது. பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க மீது சேற்றை வாரி இரைக்கும் நிகழ்வாகத்தான் இந்த ரெய்டை மக்கள் பார்ப்பார்கள்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க-வில் செந்தில் பாலாஜி இருந்தபோது அவர்மீது தி.மு.க குற்றம்சாட்டியது. இப்போது அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறது. செந்தில் பாலாஜி மீது தி.மு.க சுமத்திய குற்றச்சாட்டுகள் என்ன ஆகின என்று மக்கள் கேட்கிறார்கள்.

எதிர்க்கட்சி இருக்கக் கூடாது என்று, சோதனை என்ற பெயரில் பழிவாங்கும் நடவடிக்கைகளை இந்த அரசு கையாண்டுவருகிறது. இதைக் கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனையப்பட்ட இந்த வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு