Published:Updated:

``ஓ.பி.எஸ்-க்கு அதிமுக-வில் உச்சபட்ச பதவிகளை ஜெயலலிதா வழங்கிவிட்டார், அதனால்..!" - ஆர்.பி.உதயகுமார்

காதணி விழா நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார்

``ஜல்லிக்கட்டு நாயகன், முன்னாள் கழகப் பொருளாளர் ஒ.பி.எஸ்-க்கு உச்சபட்ச பதவிகளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்." - ஆர்.பி.உதயகுமார்

``ஓ.பி.எஸ்-க்கு அதிமுக-வில் உச்சபட்ச பதவிகளை ஜெயலலிதா வழங்கிவிட்டார், அதனால்..!" - ஆர்.பி.உதயகுமார்

``ஜல்லிக்கட்டு நாயகன், முன்னாள் கழகப் பொருளாளர் ஒ.பி.எஸ்-க்கு உச்சபட்ச பதவிகளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ளார்." - ஆர்.பி.உதயகுமார்

Published:Updated:
காதணி விழா நிகழ்ச்சியில் ஆர்.பி.உதயகுமார்

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க நகர பொருளாளர் மணிகண்டன் இல்ல காதணி விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

``அ.தி.மு.க 50 ஆண்டுகள் பொன்விழா கண்ட கட்சி. இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தும் அ.தி.மு.க நிலைத்து நிற்கும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். தற்போது ஒன்றரை கோடி அ.தி.மு.க தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிசாமிதான் அ.தி.மு.க-வை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்பது அனைத்து நிர்வாகிகளின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார்
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார்

ஜல்லிக்கட்டு நாயகன், முன்னாள் கழகப் பொருளாளர் ஒ.பி.எஸ்-க்கு உச்சபட்ச பதவிகளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ளார். எனவே தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று, ஆலோசனை செய்து தி.மு.க-விற்கு சிம்ம சொப்பனமாக விளங்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவை தலைமையேற்று வழி நடத்த ஓ.பி.எஸ் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணம் பொதுக்குழு கூடவேண்டும் என்பதுதான். அதில் நம்பிக்கை உள்ளவர்கள், தி.மு.க-வை எதிர்கொள்ளும் மன உறுதி படைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று நிறைவேற்றப்படும் தீர்மானத்தை வழிமொழிவதற்காக பொதுக்குழுவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம்.

ஒன்றரை கோடி தொண்டர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்ட தலைமைக்கு ஆதரவு தெரிவித்து, கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்து நடைபெறும் பொதுக்குழுவில் மனக் கசப்புகளையும், மன வருத்தங்களையும் மறந்து ஓ.பி.எஸ் கலந்துகொள்ளவேண்டும்.

கிழிக்கப்பட்டுள்ள பேனர்
கிழிக்கப்பட்டுள்ள பேனர்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புண்ணியத்தாலும், செல்வாக்காலும், ஓ.பி.எஸ் உச்சபட்ச பதவிகளைப் பெற்றார். அவர் உயரத்தை இனி யாராலும் தொட்டுக் கூடவும், நினைத்துக் கூடவும் பார்க்க முடியாது. அது அவரின் உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த பரிசு. அப்படி பரிசு பெற்ற அந்த மாவீரர், வெற்றி வீரர் இந்த நிலையிலும் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார்.

ஒட்டுமொத்த தொண்டர்கள், உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்களுடைய ஒற்றை கோரிக்கையான தனித்தன்மை வாய்ந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமையை ஓ.பி.எஸ் முன்மொழிந்து, வழிமொழிந்து வரவேற்றால் தொண்டர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்" எனக் கூறினார்.

முன்னதாக ஆர்.பி.உதயகுமாரை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டதால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.