Published:Updated:

நிர்மலாவின் `வெங்காய' கருத்து, பிரக்யா பேச்சு, குதிரைபேரம்... - இல.கணேசன் `லாஜிக்' பேட்டி

முதலில், குதிரைபேரம் என்பதே ஊழல் என்று அர்த்தமாகாது. தேர்தலில், எந்தக் கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கிறதோ அந்தக் கட்சிதான் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும். அதுதான் மக்களின் விருப்பம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மாநில அரசியலில் குதிரைபேர விளையாட்டுகள், பொருளாதாரச் சரிவு, வெங்காய விலையுயர்வு என நாடே தடதடக்கிறது மோடியின் தர்பாரில்!

தலைமை இல்லாத தமிழக பா.ஜ.க-வோ, வள்ளுவருக்குக் காவி அடித்துக்கொண்டும், நமீதா, ராதாரவி எனக் கோடம்பாக்கத்தினருக்கு வலைவிரித்துக்கொண்டும் தாமரையை மலரவைக்கப் படாதபாடுபடுகிறது. இந்நிலையில், தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசனைச் சந்தித்தேன். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2qJBYRd

''வெங்காய விலையுயர்வு பற்றிய கேள்விக்கு, 'நான் வெங்காயம் பற்றி அதிகம் கவலைப்படாத குடும்பத்திலிருந்து வந்தவர்' என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பதை என்னவென்று புரிந்துகொள்வது?''

"வட மாநிலங்களில் அவர்களது உணவுப் பொருள்களில் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது வெங்காயம். காரணம் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தி சமநிலைப்படுத்துவதற்கு அங்கே வெங்காயம் கட்டாயத் தேவையாக இருக்கிறது. கேரள மாநிலத்தவர்களுக்குத் தேங்காய் இல்லாமல், எப்படி சமையல் செய்யமுடியாதோ, அதேபோல் வட மாநிலத்தவர்களுக்கு வெங்காயம் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் வெங்காயத் தட்டுப்பாட்டினால், பெரிய அளவில் பிரச்னைகள் கிடையாது. ஆக, தமிழ்நாட்டுக் குடும்பத்திலிருந்து வந்திருப்பவர் என்ற முறையில், 'தமிழ்நாட்டில் வெங்காயம் என்பது அத்தியாவசியம் கிடையாது' என்ற கருத்தைத்தான் நிதி அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால், அவரது பொறுப்பான பதில், இங்கே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.''

நிர்மலாவின் `வெங்காய' கருத்து, பிரக்யா பேச்சு, குதிரைபேரம்... - இல.கணேசன் `லாஜிக்' பேட்டி

''மக்களால் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரக்யா சிங், 'கோட்சே தியாகி' என்று பேசுவதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?''

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருந்தாலும்கூட அவரும் கோடானுகோடி மக்களில் ஒருவர்தான். அந்த ஒருவரும்கூட கட்சிக்குக் கட்டுப்பட்டு, இப்போது அந்தக் கருத்தை வாபஸ் வாங்கிவிட்டார். எப்போதுமே விதிவிலக்குகளை விதியாக மாற்றி பிரச்னை செய்யக்கூடாது."

'' 'எனக்குக் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது; ஆனால், நான் மாட்ட மாட்டேன்' என்கிறாரே ரஜினிகாந்த்?''

''காவி என்பது தியாகத்தைக் குறிக்கக்கூடிய புனிதமான நிறம். நமது தேசியக் கொடியிலும்கூட காவி வண்ணம் இருக்கிறது. ஆக, 'எனக்குக் காவி சாயம் பூசாதே' என்று யாரேனும் சொன்னால், 'என்னைத் தியாகி என்று சொல்லாதே; அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை' என்று சொல்வதாகத்தான் அர்த்தம். ஆனால், ரஜினிகாந்த் இப்படி யோசித்தெல்லாம் அந்த வார்த்தையைச் சொல்லவில்லை. நிருபர் யாரோ கேட்டதற்கு, சும்மா விளையாட்டுத்தனமாகச் சொல்லிவிட்டுப் போனாரே தவிர, அவர் அப்படிச் சொல்கிறவரும் அல்ல.''

''இந்து ஒற்றுமை பேசும் பா.ஜ.க., தீண்டாமைச்சுவர், ஆணவக்கொலை உள்ளிட்டவற்றுக்கு எதிராக எங்காவது களமிறங்கியதுண்டா?''

''நாங்கள் தொண்டு செய்யத்தான் போகிறோம்; கிளர்ச்சி செய்ய அல்ல. வெள்ளம் வறட்சி போன்ற பாதிப்புகளின்போது, மற்ற கட்சியினர் 'நிவாரணம் கொடு' என்று அரசை வலியுறுத்திக் கொடி பிடிப்பார்கள். ஆனால், நாங்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி அந்த மக்களுக்கு உதவ ஆரம்பித்துவிடுவோம். பிரச்னைகளை முன்வைத்து அரசியல் செய்வதை நாங்கள் எப்போதுமே விரும்புவதில்லை!''

நிர்மலாவின் `வெங்காய' கருத்து, பிரக்யா பேச்சு, குதிரைபேரம்... - இல.கணேசன் `லாஜிக்' பேட்டி

"ஊழல் இல்லாத கட்சி என்று சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க, ஒவ்வொரு மாநிலத்திலும் குதிரைபேரத்தில் ஈடுபடுகிறதே, இது ஊழலில்லையா?"

"முதலில், குதிரைபேரம் என்பதே ஊழல் என்று அர்த்தமாகாது. தேர்தலில், எந்தக் கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கிறதோ அந்தக் கட்சிதான் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும். அதுதான் மக்களின் விருப்பம். எனவே, மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டியதிருக்கிறது. 'என்னோடு துணைக்கு வந்தால், உங்கள் கட்சிக்கும் இரண்டு அமைச்சர் பதவிகள் கொடுக்கிறோம்' என்கிறோம். மற்றபடி நாங்கள் யாரிடமும் லஞ்சம் வாங்கவும் இல்லை; கொடுக்கவும் இல்லை. ஆட்சிப் பொறுப்புகளில் எதையாவது கொடுத்துத்தானே மற்றவர்களையும் பங்குகொள்ளச் செய்யமுடியும். எனவே, இதெல்லாம் பேரம் இல்லை... பேச்சுவார்த்தை!"

'' 'தாமரை மலர்ந்தே தீரும்' என்று சொன்ன தமிழிசையும் தமிழக அரசியலை விட்டுச் சென்றுவிட்டார். தமிழகத்தில் எப்போதுதான் தாமரை மலரும்?''

''ஒரு தனி நபரை மட்டுமே நம்பியிருக்கக்கூடிய கட்சியல்ல பா.ஜ.க. ஆனால், தமிழிசை சௌந்தரராஜன் சொன்னது உண்மை. அவர் சொன்னதுபோலவே தாமரை மலர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் மலர்ந்தே தீரும்! அதில் சந்தேகமே இல்லை. உங்கள் கண்ணாலேயே நீங்கள் பார்ப்பீர்கள்!'' (பலமாக சிரிக்கிறார்)

- இல.கணேசன் நேர்காணலை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "பாக்கெட் பால் என்பது பன்றியின் பாலாகவும் இருக்கலாம்!" https://www.vikatan.com/government-and-politics/politics/an-exclusive-interview-with-bjps-la-ganesan

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு