Published:Updated:

“எல்லா மருத்துவர்களும் என் சகோதரர்கள்!”

விஜயபாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜயபாஸ்கர்

“ஏழை, பணக்காரன், குழந்தை, முதியவர் என்று யாராக இருந்தாலும் உயிர் என்பது ஒன்றேதான்!

மிழகத்தையே பதைபதைக்க வைத்த, ஆழ்துளைக்கிணற்றுக்குள் சுஜித் என்னும் சிறுவன் விழுந்த சம்பவம், அரசு மருத்துவர்கள் போராட்டம் இரண்டிலும் அடிபட்ட பெயர் விஜயபாஸ்கர். மருத்துவர்கள் போராட்டம் திரும்பப்பெற்றுக் கொள்ளப்பட்ட நாளில் அவரைச் சந்தித்தேன்.

‘`குழந்தை சுஜித், மீட்கப்படாததற்கு தமிழக அரசின் மெத்தனப்போக்கே காரணம் என்ற மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்?’’

“ஏழை, பணக்காரன், குழந்தை, முதியவர் என்று யாராக இருந்தாலும் உயிர் என்பது ஒன்றேதான்! அந்தவகையில், இரண்டரை வயதுச் சிறுவன் சுஜித்தின் உயிரைக் காப்பாற்ற, களத்தில் நின்ற அனைவருமே இரவு பகல் பாராமல், ஊண் உறக்கமின்றி உணர்வுபூர்வமாக முழு அர்ப்பணிப்போடு மீட்புப்பணியில் ஈடுபட்டோம். அதை மக்கள் அறிவார்கள். மீட்புப்பணி நடந்த முதல் நாளின்போது, ‘இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை’ என்று ரொம்பத் தெளிவாகத்தான் மு.க.ஸ்டாலின் சொல்லியிருந்தார். ஆனால், தமிழக அரசுக்கு நல்ல பெயர் கிடைப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் ‘அதிகாரிகள் மெத்தனமாக இருந்துவிட்டார்கள்’ என்றார். இதுபோன்ற உணர்வுபூர்வமான விஷயங்களிலும் கூட அரசியல் செய்வதென்பது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
லண்டன் கிங்ஸ் மருத்துவமனையின் கிளைகளை இங்கேயும் நிறுவுவது, டெங்கு - மலேரியாவைக் கட்டுப்படுத்துவது மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சிகள் என மூன்று ஒப்பந்தங்கள் போடப்பட்டு, ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘`அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்காமல், அவர்களைப் பணிக்குத் திரும்பச்சொல்லிக் கெடு விதிப்பது சரியான நடைமுறைதானா?’’

“நானும் ஒரு மருத்துவர்தான். என் குடும்பத்திலுள்ள சகோதர, சகோதரிகளாகத்தான் அனைத்து மருத்துவர்களையும் பார்க்கிறேன். பி.ஜி டாக்டர்ஸ் மற்றும் ஹவுஸ் சர்ஜன் டாக்டர்களுக்கு ஏற்கெனவே சம்பள உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் பதவி உயர்வும்தான் போராட்டத்துக் கான காரணமாகச் சொல்லப் பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை மற்ற துறைகளை விடவும் சுகாதாரத்துறை யில்தான் கூடுதலான ஊதியமும் பதவி உயர்வும் வழங்கப் படுகின்றன. கோரிக்கைகளைப் பரிசீலித்துக்கொண்டிருக்கும்போதே, அரசை நிர்பந்திக்கும் வகையில் செயல்படுகிறார்கள்; இதை நாங்கள் தாங்கிக் கொள்வோம். ஆனால், போராட்டத்தால், ஏழை மக்களின் சிகிச்சை பாதிக்கப் படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது!’’

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

‘’டெங்கு பாதிப்பு குறித்த கேள்விகளுக்கெல்லாம், பக்கத்து மாநிலங்களையும் வெளிநாடு களையும் உதாரணம் காட்டிப்பேசுவதே போதுமானதா?’’

“பருவகாலங்கள் மாறுகிறபோது, விட்டு விட்டு மழை பெய்கிற, தண்ணீர் தேங்கி நிற்கிற சூழல்களிலெல்லாம் இதுபோன்ற தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். உலகம் முழுவதுமே இதுபோன்ற காலங்கள் சவாலானவைதான். ஆனாலும்கூட தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, உள்ளாட்சித் துறையிலிருந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். இதையும் மீறிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தனி வார்டு, ஸ்கேன் மற்றும் பரிசோதனை என்று முழு வசதிகளையும் செய்து தந்து முற்றிலுமாக நோயைக் குணப்படுத்துகிறோம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘`தரமாகவும் உடனுக்குடனும் நோயாளிகளுக்கு சிகிச்சை தரும் அளவுக்கு மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள் என்பதுதானே போராடுகிற மருத்துவர்களின் கோரிக்கையாக இருக்கிறது?’’

‘`சுகாதாரத்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பிறகு மட்டும் மருத்துவர், செவிலியர் என்று மொத்தம் 27,777 பேர் ‘மருத்துவ ஆட்சேர்ப்பு வாரியம்’ மூலமாகப் பணி நியமனம் பெற்றிருக்கிறார்கள். இன்னும் 2,345 செவிலியர்களைப் பணி நியமனம் செய்யவிருக்கிறோம். இது தமிழக அரசின் மற்ற துறைகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கை யிலான பணி நியமனங்கள். இவை தவிர புதிதாக ஆறு மருத்துவக்கல்லூரிக்கான அனுமதி, அம்மா குழந்தை நலப் பரிசுப் பெட்டகம், கர்ப்பிணிப் பெண்களுக்கான சத்துணவு, ஆரம்பச் சுகாதாரம், உடல் உறுப்பு தானம், தோல் - எலும்பு வங்கிகள், தாய்ப்பால் வங்கி எனப் பல்வேறு சாதனைகளிலும் தமிழக சுகாதாரத்துறை முதலி டத்தில் இருந்துவருகிறது.’’

‘`உயிர்காக்கும் துறையின் அமைச்சரான நீங்களே, ‘கொசு கடிப்பதற்கு முன் அது உள்ளாட்சித்துறை; கொசு கடித்தபின் அது சுகாதாரத்துறை’ என்றெல்லாம் பேசலாமா?’’

``இல்லையில்லை... நான் பேசிய விஷயத்தைத் திரித்து வெளியிட்டுவிட்டார்கள். நோய்த்தொற்றைத் தடுக்கும் பொருட்டு சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டம் ஒன்றில், நானும் உள்ளாட்சித் துறை அமைச்சரும் கலந்துகொண்டோம். அந்தக்கூட்டத்தில் நான் பேசும்போது, ‘தொற்றைத் தடுப்பதில் இந்த இரண்டு துறைகளும் சேர்ந்து பணியாற்றவேண்டிய பொறுப்பு இருக்கிறது’ என்ற கருத்தைத்தான் நல்லதொரு நோக்கத்தில் நான் சொன்னேன். ஆனால், நான் பேசிய பேச்சின் முன்பகுதியையும் பின்பகுதியையும் வெட்டிவிட்டு, ஒரு வரியை மட்டும் எடுத்துப் பிரசுரம் செய்துவிட்டார்கள்.’’

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

‘`கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னேறிய மாநிலமாக இருப்பதாலேயே, மத்திய நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதை எப்படி எடுத்துக்கொள்வது?’’

‘`புறக்கணிக்கப்படவில்லை. ‘முன்னேறிய மாநிலமான தமிழகத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்’ என்றுதான் பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தினரும் சொல்லியிருக்கிறார்கள். இதுதான் நமக்கான வெற்றி!

வளர்ந்த மாநிலத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகள் கிடையாது என்றுதான் சொன்னார்கள். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை, ஆறு மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுவிட்டோமே!’’

‘`முதல்வரோடு வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நீங்கள், சுகாதாரத்துறையில் புதிதாக என்னென்ன மாற்றங்களைச் செய்திருக்கிறீர்கள்?’’

‘`லண்டன் கிங்ஸ் மருத்துவ மனையின் கிளைகளை இங்கேயும் நிறுவுவது, டெங்கு - மலேரியாவைக் கட்டுப்படுத்துவது மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சிகள் என மூன்று ஒப்பந்தங்கள் போடப்பட்டு, ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்துக்கான சிகிச்சை மையங்களில் ஆஸ்திரேலியாதான் உலக அளவில் சிறந்தது. ஏற்கெனவே ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின்போது அங்குள்ள சுகாதாரத்துறை அமைச்சரோடு இதுவிஷயமாக ஒப்பந்தம் செய்திருந்தோம். அவர்கள் வகுத்துக்கொடுத்த நெறிமுறைகளின் படி தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 210 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விபத்து சிகிச்சை மையங்களைக் கட்டமைத்திருக்கிறோம். இதன் பயனாக இறப்பு விகிதத்தைக் குறைத்திருக்கிறோம். இதுதவிர வெளிநாட்டுப் பயணத்தின்போதே, ‘விமான அவசர ஊர்தி தமிழகத்திலும் கொண்டுவரப்படும்’ என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு துறை சார்ந்தும் நிறைய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.’’

‘`மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதுபோல், இந்த விவரங்களையெல்லாம் வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதில் இந்த அரசுக்கு என்ன தயக்கம்?’’

‘‘எதிர்க்கட்சி என்றால் நாங்கள் எதிரிக்கட்சியாகத்தான் இருப்போம்; குறை சொல்வது ஒன்றே எங்களது அஜெண்டா’ என்ற நோக்கில் குறுகிய வட்டத்துக்குள்ளேயே செயல்படுகிறார் ஸ்டாலின். இது அவரது பக்குவமின்மையைத்தான் காட்டுகிறது!’’