Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: “அது நானும் ரஜினியும் முடிவு செய்யவேண்டிய விஷயம்!”

VikatanPressMeet
பிரீமியம் ஸ்டோரி
VikatanPressMeet

விகடன் பிரஸ்மீட்டில் கமல்! #VikatanPressMeet: விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

விகடன் பிரஸ்மீட்: “அது நானும் ரஜினியும் முடிவு செய்யவேண்டிய விஷயம்!”

விகடன் பிரஸ்மீட்டில் கமல்! #VikatanPressMeet: விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

Published:Updated:
VikatanPressMeet
பிரீமியம் ஸ்டோரி
VikatanPressMeet

“கீழடி அகழாய்வு முடிவுகளை வைத்து, ‘இது தமிழர் கலாசாரம்’, ‘திராவிடக் கலாசாரம்’, ‘பாரதக் கலாசாரம்’ என்று வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படு கின்றன. ஆரியர், திராவிடர், தமிழர், இந்தியர் என இந்த அடையாளங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

- சுகுணா திவாகர்

“மாறி மாறி நிறைய அடையாளங்கள் வருகின்றன. இதில் புதிதாக ஒரு குரல் கேட்டிருப்பீர்கள். ஆர்ய வைஸ்ய என்ற குரல் வருகிறது. அதற்கு என்ன அர்த்தம்? அப்படியென்றால் ஆர்ய ஷத்ரியர், ஆர்ய திராவிடர் என்று எல்லாம் இருந்திருக்கிறதுதானே. இவை எல்லாம் கலந்ததுதான் நாடு. சயின்டிஸ்ட்டு களிடம் இதுபற்றிக் கேட்டோம் என்றால் அவர்கள் சொல்லும் மனிதக்கலவையைத் தாங்கவே முடியாது. ஆனால் அதில் பல விஷயங்கள் நிஜம். கீழடியில் பானைகளில் எழுதிவைத்திருப்பதால் முக்கியமான விஷயம் இல்லையென்று சொல்ல முடியாது. கல்வெட்டுகளில் இருப்பதைவிட பானைகளில் இருப்பது தனிப்பட்ட மனிதனின் குறிப்பு. பல பானைகளில் தமிழ் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கிறது. இது சுட்டபின் எழுதப்பட்டிருப்பதால் இதை, படித்த குயவர்கள் மட்டும் எழுதியிருக்க வாய்ப்பில்லை. பலரும் எழுதியிருக்கிறார்கள். அப்போது எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரிந்திருக்கிறது. இதுதானே பெருமிதத்துக்குரிய விஷயம். அதை விட்டுவிட்டு இதில் திராவிடம், பாரதம், தமிழர்... எந்தத் தெரு, என்ன சாதி என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். இத்தனை பேர் படித்திருக்கிறார்கள் என்பதல்லவா பெருமை?

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
விகடன் பிரஸ்மீட்: “அது நானும் ரஜினியும் முடிவு செய்யவேண்டிய விஷயம்!”

திராவிடம் நாடுதழுவியது என்கிற கருத்து எனக்குண்டு. நான் சொல்லும் பல விஷயங்களைப்போல இதுவும் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படும். ‘மொகஞ்சதாரோவில் நாங்கள்தான் இருந்தோம்’ என்று சொன்னாலும் அங்கே திராவிடமும் இருந்திருக்கிறது. ‘திராவிடத்தால்தான் தமிழகம் கெட்டது’ என்று சொல்வோரிடம், ‘திராவிடம் என்ற சொல்லை உச்சரிப்பவர்களின் மனது சுத்தமாக இருக்கும்பட்சத்தில் திராவிடம் கெடுதல் இல்லை’ என்று சொல்வேன். அது ஒரு இனக்குறிப்பு அவ்வளவுதான். திராவிடத்தை இந்தியா முழுக்கக் கொண்டாடவேண்டும். திராவிடர்கள் இந்தியா முழுக்க எங்கும் பரவியிருக்கிறார்கள். என்னுடைய முகச்சாயலில், நண்பர் பாரதிராஜா முகச்சாயலில், இளையராஜா முகச்சாயலில் பீகாரில் ஒருவரை என்னால் காட்ட முடியும். அதனால்தான் சொல்கிறேன், திராவிடம் நாடு தழுவியது என்று.”

“ ‘கமலுக்குக் கட்சி நடத்த எங்கிருந்து பணம் வருகிறது?’ - இந்தக் கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. விரிவான ஒரு விளக்கம் கிடைக்குமா?’’

- செல்வக்குமார்

“என் பாக்கெட்டிலிருந்துதான் வருகிறது. என் கட்சியில் உள்ள பலரும் அவரவர் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துப் போட்டுத்தான் கட்சியை நடத்திக்கொண்டி ருக்கிறோம். ‘இங்கிருந்து வருகிறது... அங்கிருந்து வருகிறது’ எனப் புரளிகள் எல்லாம் கிளப்பிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் செய்திருக்கிற செலவுகள் தேர்தல் கமிஷனுக்குத் தெரியும். குறைந்த செலவில் நிறைய வெற்றியைப் பெற்றிருக்கிறோம். பணம் கொடுக்கமாட்டோம் எனச் சொல்லிட்டு, கைத்தட்டலுடன் திரும்பி வந்த காட்சிகளும் உண்டு.’’

Vikatan PressMeet:
Vikatan PressMeet:

“கமல் - ரஜினி, விஜய் - அஜித், இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் எனக் காலம்காலமாகத் தமிழ் சினிமாவில் நடந்துவரும் ஒப்பீட்டுச் சண்டையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

- கார்க்கிபவா

“ரசிகர்கள் அப்படித்தான் இருப்பார்கள். கொஞ்ச நாளில் வளர்ந்துவிடுவார்கள். இது எல்லாக் காலகட்டத்திலும் நடந்ததுதான். பி.யூ.சியா -

எம்.கே.டியா எனச் சண்டைபோட்ட காலம் ஒன்று இருக்கிறது. இப்போது ‘பி.யூ.சின்னா என்ன?’ என்று கேட்கிறார்கள். ரசிகச் சண்டைகள் இருக்கத்தான் செய்யும். சில நேரங்களில் ரஜினி கோபித்துக்கொண்டு ‘எல்லாம் முடிஞ்சுபோச்சு... சினிமாவை விட்டே போலாம்னு இருக்கேன்’ என என்னிடம் சொல்லும்போது ‘அதெல்லாம் செஞ்சிதொலைக்காதீங்க... எனக்கு இன்னும் நிறைய வேலை இருக்கு. இங்க ரெண்டு கோல்போஸ்ட் கட்டிட்டு விளையாடுறாங்க. ஒருத்தர் போனா இன்னொருத்தரும் போகணும்னு அடம்பிடிப்பாங்கய்யா... நான் போகத்தயாரா இல்லை’ என அவரிடம் சொல்வேன். நாங்கள் இருவரும் தனியாக உட்கார்ந்துபேசும்போது என்ன பேசுகிறோம் என்று தெரிந்தால் துடித்துப்போவார்கள் ரசிகர்கள். ஆனால், அந்த விளையாட்டை அவர்கள் விளையாடிக்கொண்டுதான் இருப்பார்கள். ஸ்டேடியத்துக்கு சத்தம் வேண்டும் இல்லையா...’’

Vikatan PressMeet:
Vikatan PressMeet:

“நீங்களும் ரஜினியும் தேசியம் குறித்த ஒரேமாதிரியான கருத்தையே வைத்திருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து பயணிப்பதில் என்ன சிரமம்?’’

- கதிரேசன்.

“அதை நாங்கள் இருவரும் அல்லவா பேசவேண்டும்! நாடு நன்றாக இருக்கவேண்டும் என்பதில் எங்கள் இருவருக்கும் மாற்றுக்கருத்துகள் இல்லை. இருவரும் பேசி முடிவு செய்யவேண்டும்.’’

“அரசியல் கட்சி என்றால் மக்களைச் சந்தித்து, மக்களோடு நின்று போராடுவது, சிறை செல்வது, தீர்வை நோக்கி முன்னேறுவதுதானே சரி. ஆனால், மக்கள் பிரச்னைகளுக்காக ஆவேசமாக வீடியோ வெளியிடுவதோடு ஒதுங்கிக்கொள்கிறீர்களே?’’

- நித்திஷ்

“மக்கள் பலம் இல்லாமல் எந்த அரசியல்வாதியும் ஒன்றும் செய்யமுடியாது. மக்கள் பலத்தை எந்தவகையில் திரட்டினால் என்ன? போராட்டமும், உயிர்நீத்தலும், தீக்குளிப்பதும்தான் ஒரே வழி என்பது காந்தி காலத்திலேயே மாறிவிட்டது. அது என் காலத்தில் இன்னமும் மாறும். போர்தான் நீதி கேட்பதற்கு ஒரே வழி எனும் நிலைமை மாறியே தீரும். மாறும் என்று நம்புபவன் நான். வீதிகளில் போராட்டங்கள் நடத்துவதால் ஏற்படும் டிராஃபிக் ஜாம் மக்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும். எத்தனை பேர் பிரசவத்துக்குப் போகிறார்களோ, அவசரமாக மருத்துவமனைக்குப் போகிறார்களோ? நிகழ்வாழ்வைத் தடைப்படுத்துவதைவிட அதைத்தொடர அனுமதிக்க வேண்டும். குரல் எப்படி வேண்டுமென்றாலும் வரலாம். மேடை மேல் இருந்து வரலாம். வீதிகளில் இருந்தும் வரலாம். நாங்கள் களத்துக்குப் போயிருக்கிறோம். கஜா புயலின்போது நின்றிருக்கிறோம். ஹெலிகாப்டரில் போகவில்லை. மக்களின் பேச்சு, குரல், அழுகை எல்லாம் கேட்டுக்கொண்டுவந்தோம். அரசு அதிகாரிகள்கூட வராத இடத்துக்குப் போனோம். மேலிருந்து உத்தரவு வந்தால்தானே அவர்கள் போவார்கள். அதனால் அந்த மேலிடத்தைக் கைப்பற்றவேண்டும் என்பதற்காகத்தான் 2021-ல் முயற்சி செய்யப்போகிறோம்.’’

“நீங்கள் ஒரு நாத்திகராக அறியப்பட்டாலும், உங்கள் திரைப்படங்களில் வைணவம் சார்ந்த குறியீடுகள், பெயர்கள், தொன்மங்கள் இடம்பெறு கின்றன. என்ன காரணம்?’’

- சுகுணா திவாகர்

“குணாவில் அது இருக்காது. எல்லாம் சிவனாக இருக்கும். ‘அன்பே சிவம்’ படத்திலும் சிவன் இருக்கும். கண்ணப்ப நாயனார் கதையில் சிவனும் புலாலும் வராமல் அதைச்சொல்ல முடியாது. ‘என்னங்க இது சிவனுக்கு முன்னாடி மட்டனை வெச்சிட்டீங்களே?’ என்றால், அந்தக் கதை அப்படி. நான் ஏற்கெனவே சொன்னதுதான். நோய் இல்லாமல் மருந்தைச் சொல்ல முடியாது. எம்.ஆர்.ராதா பட்டை பட்டையாக விபூதி போட்டுக்கொண்டு படத்தில் வருவார். ஆனால் அவர் சொல்லும் கருத்துகள் வேறு மாதிரியிருக்கும்.

kamal
kamal

இறைமறுப்பைவிட, பகுத்தறிவது முக்கியம் என்பதை என்னுடைய இவ்வளவு கால வாழ்க்கையில் உணர்ந்திருக்கிறேன். அதற்காக ‘அரசியலுக்கு வந்ததும் அடிச்சார் பார் பல்டி’ என இதைப் புரிந்துகொள்ளக்கூடாது. இது என்னுடைய பரிணாம வளர்ச்சியின் அடையாளம். இதற்கும் அரசியலுக்கும், சம்பந்தம் இல்லை. என்னுடைய பகுத்தறிவு பற்றி வெளியில் சொல்லத்தேவையில்லை. என்னுடைய புரிதல் எப்படியிருக்கிறது என்பதைத்தான் ‘தசாவதாரம்’ படத்தில் காட்டியிருக்கிறேன். ஓட்டு வாங்குவதற்கோ, ஒரு குலத்தின், ஒரு இனத்தின் சந்தோஷத்தை சம்பாதிப்பதற்கோ நான் பார்ப்பன விரோதி என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? என் தாயும் தகப்பனும் அதுவல்லவா! அந்தப் பொய்யெல்லாம் நான் சொல்லமாட்டேன். எனக்கு அவர்களைப் புரியும். அவர்களைத் தெரியும். ஆனால் என் பாதை வேறு.’’

“தலித் அரசியல், தமிழ்த்தேசிய அரசியல் குறித்து உங்கள் கருத்து என்ன?’’

- சுகுணா திவாகர்

“தலித் அரசியல் எனத் தனியாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. தலித் அரசியலை நானும் நடத்த வேண்டும். நீங்களும் நடத்த வேண்டும். அதை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என விட்டுவிடக்கூடாது. அதில் எல்லோரும் பங்குபெற வேண்டும். நான் சொல்வது அதற்கு ஆதரவாக! எதிர்த்து நின்று விளையாடக்கூடாது. ‘இல்லாமை இல்லாத நிலைவேண்டும்’ என்று சொல்வதுபோல அந்த நிலை இல்லாத நிலைவரும்வரை அந்த அரசியல் நடக்க வேண்டும்.

தமிழ்த்தேசிய அரசியல் பற்றிக் கேட்கிறீர்கள். என்னை மாடர்ன் இந்தியன் என வைத்துக்கொள்ளலாம். இந்தியாவை ஒருநாடாகத் தைக்கவேண்டிய அவசியம் இல்லை என்றார்கள் சிலர். தைத்தால் என்ன என்று கேட்டு ஒன்றுசேர்ந்த பெருங்கூட்டத்தில் ஒருவன் நான். அதிலிருந்து இந்த மண்ணைத் தனியாகப் பிரித்தெடுக்க எனக்கு விருப்பம் இல்லை. எப்போதுமே தனிச்சிறுகூட்டத்தின் குரலாக ஒலிக்கக்கூடாது. ஒட்டுமொத்தத் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள் என உன்னிப்புடன் கேட்க வேண்டும். தனித்துப்போகவேண்டும் எனச் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.’’

எட்டு மணி நேரத்துக்கும் மேலாக, பத்துப் படங்களில் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். அப்படிப்பார்த்தால் 800 நாள், 1,000 நாள்கள் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். என்ன செய்யமுடியும்... சில விஷயங்கள் வரத்தான் செய்யும். முன்பெல்லாம் ஷூட்டிங் லைட்டுகளே அவ்வளவு சூடாக இருக்கும். அந்த வெப்பத்தால் முடியெல்லாம் கொட்டிப் போய்விடும். தோல் போய்விடும்.
K. S. Ravikumar
K. S. Ravikumar

எட்டு மணி நேரத்துக்கும் மேலாக, பத்துப் படங்களில் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். அப்படிப்பார்த்தால் 800 நாள், 1,000 நாள்கள் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். என்ன செய்யமுடியும்... சில விஷயங்கள் வரத்தான் செய்யும். முன்பெல்லாம் ஷூட்டிங் லைட்டுகளே அவ்வளவு சூடாக இருக்கும். அந்த வெப்பத்தால் முடியெல்லாம் கொட்டிப் போய்விடும். தோல் போய்விடும்.‘‘தொடர்ச்சியாகப் பல மேக்கப்புகள் போட்டதால் உங்கள் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா... குண்டு, குள்ளம், உயரம் என்று உடலை எப்படியெல்லாமோ வளைத்திருக்கிறீர்களே, உங்கள் உடல் உங்களிடம் என்ன சொல்லும்?’’

- பரிசல் கிருஷ்ணா.

“வெவ்வேறு செய்திகள் சொல்லும். புதிய புதிய வைத்தியர்களை அறிமுகப்படுத்திவைக்கும். சொல்லிப்பார்க்கும்; ஆனால், நாம் கேட்டால்தானே! எட்டு மணி நேரத்துக்கும் மேலாக, பத்துப் படங்களில் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். அப்படிப்பார்த்தால் 800 நாள், 1,000 நாள்கள் மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். என்ன செய்யமுடியும்... சில விஷயங்கள் வரத்தான் செய்யும். முன்பெல்லாம் ஷூட்டிங் லைட்டுகளே அவ்வளவு சூடாக இருக்கும். அந்த வெப்பத்தால் முடியெல்லாம் கொட்டிப் போய்விடும். தோல் போய்விடும். இது இல்லாமல் எங்களுக்கு இருக்கும் வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு, சிகரெட், மது போன்ற பழக்கங்கள் வேறு, ஸ்கின்னுக்கு பிரச்னைகளை உண்டுபண்ணும். நாம் என்ன உட்கொள்கிறோமோ, உடலில் என்ன பூசிக்கொள்கிறோமோ அதற்கான எதிர்வினைகளை எல்லாம் தோல் அனுபவித்துத்தான் ஆகும். புலி வேஷம் போட்டு செத்துப்போனவர்களெல்லாம் உண்டு. பாடிபில்டிங்கில் பரிசு வாங்கவேண்டும் என்பதற்காக கடைசிநேரத்தில் ஸ்டீராய்ட்ஸ் போட்டுக்கொண்டு இறந்துபோனவர்கள் உண்டு. அதனால் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும்.’’

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததும் ‘சார்ந்தோர்க்கு அனுதாபங்கள்’ என ட்விட்டரில் பதிவிட்டீர்கள். ஜெயலலிதா மரணம் குறித்து உங்கள் கருத்து அவ்வளவுதானா?’’

- வெய்யில்

“மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடியது. எல்லோருக்கும் நிகழ்ந்தே ஆகும். இது வாழ்த்தல்ல. சாபமும் அல்ல. மரணத்துக்கு உண்டான மரியாதை கண்டிப்பாக உண்டு. சார்ந்தோர்களுக்கும் அனுதாபம் என்பதும் உண்டு. சார்ந்தோர்க்கு இன்னும் உண்டு. அனுதாபப்படுவதைத்தவிர வேறு என்ன செய்ய முடியும்?’’

- தொடரும்

அடுத்த வாரம்...

  • “ ‘16 வயதினிலே’ படத்தை ரீமேக் செய்தால் பரட்டை, சப்பாணி, மயில் கேரக்டர்களில் இப்போது நடிக்க உங்கள் சாய்ஸ் யார்?”

  • ‘‘கமல் படத்தின் இயக்குநர் யார் என்றாலும் கமல்தான் படத்தை இயக்குவார் என்பது உண்மையா?”

  • “விஜய் அரசியலுக்கு வந்தால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?”

  • “நீங்கள் சந்தித்த மிகப்பெரிய பாராட்டு, மிகப்பெரிய அவமானம்?”