Election bannerElection banner
Published:Updated:

`யோகி விசிட்; ரிப்போர்ட்டை வீசி எறிந்த பழனிசாமி’ : விகடன் பெயரில் போலிச் செய்திகள்! - உண்மை என்ன?

விகடன் பெயரில் போலிச் செய்திகள்
விகடன் பெயரில் போலிச் செய்திகள்

விகடன் செய்திகள், விகடன் இதழ்களிலும், VIKATAN.COM -லும் மட்டுமே வெளியாகும் என்பதால், விகடன் குழும இதழ்கள் அல்லது விகடன் லிங்க் இல்லாத எந்தத் தகவலையும் விகடன் செய்தியாக நம்ப வேண்டாம்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வானதி சீனிவாசனை ஆதரித்து கோவையில் பிரசாரம் செய்துவிட்டுப் போன பிறகு, கொங்கு மண்டல அதிமுக-வில் நடந்தவையாக விகடன் பெயரில் வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் பரவியது.

இந்தநிலையில், வாக்குப்பதிவு முடிந்த பின்னர், ``ரிப்போர்ட்டை வீசி எறிந்த பழனிசாமி... விக்கித்துப்போன அ.தி.மு.க அமைச்சர்கள்!” என்ற தலைப்பில் மற்றொரு தகவலும் விகடன் பெயரில் வாட்ஸ்அப்பில் பரவுகிறது.

வாட்ஸ்அப் ரகசியங்கள்
வாட்ஸ்அப் ரகசியங்கள்

விகடன் அறத்தோடும் நேர்மையோடும் தொடர்ந்து செய்திகளை வாசகர்களுக்கு வழங்கிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. தேர்தல் களத்திலும் விகடன் அவ்வாறே செயல்பட்டது. வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் செய்திகளுக்குக் கீழே `விகடன் ஸ்பெஷல் டீம்’ என்று குறிப்பிடப்பட்டு சில போலிச் செய்திகளும் பரவிவருகின்றன.

ஜூனியர் விகடன்
ஜூனியர் விகடன்

விகடன் செய்திகள், விகடன் இதழ்களிலும், VIKATAN.COM-லும் மட்டுமே வெளியாகும் என்பதால், விகடன் குழும இதழ்கள் அல்லது விகடன் லிங்க் இல்லாத எந்தத் தகவலையும் விகடன் செய்தியாக நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

விகடன் செய்திகளை விகடன் தளத்திலும், அதன் அதிகாரபூர்வ சமூக வலைதளங்களைப் பின்தொடர்வதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

விகடன் இணைய தள லிங்க்: https://www.vikatan.com/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு