எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம், தற்போது தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி, அடையாறு இந்திரா நகரிலுள்ள தன் வீட்டில் ஓய்விலிருக்கிறார். சமீபத்தில் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரைப் பார்க்க, எந்த அ.தி.மு.க தலைவரும் மரியாதை நிமித்தமாகக்கூடச் செல்லாதது, அரங்கநாயகத்தை மட்டுமல்ல... அவர் குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அரங்கநாயகத்தின் நெருங்கிய உறவினர்களிடம் பேசினோம்... “1988-ல் ஜெ. அணி - ஜா. அணி என அ.தி.மு.க பிளவுபட்டிருந்த போது, ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத் துணை நின்றவர் அரங்கநாயகம். ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அரங்கநாயகத்தின் வீட்டில் வைத்துத்தான், ஜெ அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், முக்கியத் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஜெயலலிதாவின் பெயரைக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு முன்மொழிந்தவர் அரங்கநாயகம். அதன் பிறகுதான், பண்ருட்டி ராமச்சந்திரன், நெடுஞ்செழியன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் வழிமொழிந்தார்கள். ஜெயலலிதாவைக் கட்சியின் உச்சாணிக் கொம்பில் அமர வைத்தவரை, இன்று அ.தி.மு.க தலைமை கொஞ்சம்கூட கண்டுகொள்ளவில்லை.

ஒரு வாரத்துக்கு முன்னர், மூச்சுத்திணறல் காரணமாக கிண்டியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அரங்கநாயகம் அனுமதிக்கப் பட்டார். ஐ.சி.யூ-வில்தான் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். பேச முடியாத நிலையிலும்கூட நோட்டு, பேனாவைக் கொண்டுவரச் சொன்னவர், ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தகவல் சொல்லுங்கள். என் கட்சிக்காரர்களைப் பார்க்க வேண்டும்போலிருக்கிறது’ என்று எழுதினார். உடனடியாக முதல்வர், துணை முதல்வருக்குத் தகவலைச் சொன்னோம். பிரசாரத்தில் பிஸியாக இருப்பதால் வர இயலாது என்று சொல்லிவிட்டார்கள். அந்தச் சமயத்தில் முதல்வர் சென்னையில்தான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். ஒருமுறை வந்து பார்த்துச் சென்றிருக்கலாம். ஆனால், எடப்பாடி தவிர்த்துவிட்டார். இதுவரை அ.தி.மு.க-விலிருந்து ஒரு வட்டச் செயலாளர்கூட வந்து பார்க்கவில்லை. கட்சிக்காக உழைத்தவருக்கு இதுதான் கதி” என்று வேதனைப்பட்டனர்.

அரங்கநாயகத்திடம் பேசினோம். தழுதழுத்த குரலில், “என்னைய மறந்துட்டாங்களே...” என்று உடைந்துவிட்டார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை.

“தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் அ.தி.மு.க தலைவர்களுக்குத் தொண்டர்களே கண்ணுக்குத் தெரிவதில்லை. பதவி இருந்தால் மட்டுமே மரியாதையும் கிடைக்கும் என்பதை இப்போதிருக்கும் தலைவர்கள் நிரூபித்துவிட்டார்கள்” என்றார் மருத்துவ வளாகத்தில் ஒருவர். உண்மைதான்!