Published:Updated:

``பாஜக அரசாங்கம் என்னைக் கொல்ல விரும்புகிறது"- விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத்

ராகேஷ் டிகைத் ( ட்விட்டர் )

"பாஜக அரசு என்னைக் கொல்ல விரும்புகிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது" - ராகேஷ் டிகைத்.

``பாஜக அரசாங்கம் என்னைக் கொல்ல விரும்புகிறது"- விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத்

"பாஜக அரசு என்னைக் கொல்ல விரும்புகிறது. ஆனால் அது ஒருபோதும் நடக்காது" - ராகேஷ் டிகைத்.

Published:Updated:
ராகேஷ் டிகைத் ( ட்விட்டர் )

டெல்லியின் மீரட் மாவட்டம், ஜாங்கேதி கிராமத்தில் உள்ள தர்மேஸ்வரி பண்ணையின் ஆய்வுக் கூட்டத்தில் பாரதிய கிசான் யூனியனின் (பிகேயு) தேசிய செய்தித் தொடர்பாளரும், விவசாயிகளின் எதிர்ப்புச் சட்டப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த விவசாயிகளின் தலைவர் ராகேஷ் டிகைத் பேசினார். அப்போது,"தேர்தலுக்கு முன்பு, உத்தரப்பிரதேச அரசு பாசனத்துக்கு இலவச மின்சாரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது, குழாய்க் கிணறுகளில் மீட்டர் பொருத்தி விவசாயிகள் துன்புறுத்தப்படுகிறார்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அரசு பேச்சுவார்த்தைக்கு வரும் வரை போராட்டம் தொடரும். அதுவரை தீர்வு கிடைக்காது.

ராகேஷ் டிகைத்  டிகாயிட்
ராகேஷ் டிகைத் டிகாயிட்
ட்விட்டர்

அதிகபட்ச மக்களைச் சங்கத்தின் கீழ் கொண்டு வர விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அரசுக்கு எதிராக வலுவான மற்றும் ஒன்றுபட்ட போராட்டம் மட்டுமே பலனைத் தரும்.

கடந்த டிசம்பர் மாதம், ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஜெனரல் பிபின் ராவத்துக்கு மரியாதை செலுத்த டெல்லியில் உள்ள வீட்டுக்குச் சென்றபோது என்னைக் கொல்ல சதி இருந்தது. கர்நாடகா, டெல்லியில் என்மீது நடத்தப்பட்ட தாக்குதல்களே போதுமான சான்று. அந்த முயற்சிகள் நன்கு திட்டமிடப்பட்ட சதி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராகேஷ் டிகைத்  டிகாயிட்
ராகேஷ் டிகைத் டிகாயிட்
ட்விட்டர்

மகாத்மா காந்தி சதிகாரர்களால் படுகொலை செய்யப்பட்டதைப்போலவே, நாட்டுக்காகவும் அதன் விவசாயிகளுக்காகவும் குரல் கொடுக்கும் எவரும் சதிகாரர்களால் குறிவைக்கப்படுகிறார்கள்.

விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தின் தலைவர் ராகேஷ் டிகைத்  டிகாயிட் தாக்கப்பட்டபோது..
விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தின் தலைவர் ராகேஷ் டிகைத் டிகாயிட் தாக்கப்பட்டபோது..
ட்விட்டர்

நாசவேலை அரசியலின் மூலம் விவசாயிகள் சங்கத்தை அழிக்க அரசு முயல்வதால், உட்கட்சி சண்டையில் நேரத்தை வீணடிக்க முடியாத ஒரு முக்கியமான தருணம் இது" எனக் குறிப்பிட்டார்.

மே 30-ம் தேதி பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பின்போது ராகேஷ் டிகைத் டிகாயிட் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் நல்ல நடத்தைக்காகச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism