Published:Updated:

``நான் உயிருடன் விமான நிலையமாவது வந்து சேர்ந்தேன்... முதல்வருக்கு நன்றி!" - மோடி கூறியதாகத் தகவல்

மோடி
News
மோடி

இந்தப் பாதுகாப்பு குளறுபடிக்கு பஞ்சாப் காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் இன்று காலை நலத்திட்ட உதவிகளைத் தொடங்கிவைப்பதாக இருந்தது. இதனால் காலையில் பிரதமர் மோடி விமானம் மூலம் பதிந்தா விமான நிலையத்தில் வந்திறங்கினார். பின்னர், அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஃபெரோஸ்பூர் செல்வதாக இருந்தது. காலையில் விமான நிலையத்தில் இறங்கியதிலிருந்து மழை பெய்துகொண்டிருந்தது. அதனால், சிறிது நேரம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி காத்திருந்தார். ஆனால், 20 நிமிடங்களுக்கு மேலாகக் காத்திருந்தும் வானிலை சரியாகாததால் சாலை மார்க்கமாகச் செல்ல முடிவுசெய்தார். சாலை மார்க்கமாகச் செல்வதாக இருந்தால் இரண்டு மணி நேரம் ஆகும். அப்படியிருந்தும் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்த பிறகு சாலை மார்க்கமாகவே செல்ல முடிவுசெய்யப்பட்டது. அப்போது, சாலை மார்க்கமாகச் சென்றபோது நடுவழியில் விவசாயிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் மேம்பாலம் ஒன்றில் 20 நிமிடங்களுக்கும் மேல் நிறுத்தப்பட்டது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அப்படியிருந்தும் போக்குவரத்து சரியாகவில்லை. பிரதமர் சாலை மார்க்கமாகச் செல்லும்போது மாநில போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என பஞ்சாப் மாநில டி.ஜி.பி-யிடம் மத்திய உள்துறை அமைச்சகம் முன்னதாகவே தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்படியிருந்தும் விவசாயிகள் போராட்டத்தால் பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மோடி
மோடி

இதனால் பயணத்தை மேற்கொண்டு தொடராமல் பிரதமர் மோடி மீண்டும் விமான நிலையத்துக்கே திரும்பிவிட்டார். பாதுகாப்பு குளறுபடி குறித்து பஞ்சாப் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருக்கிறது. மேலும், ஃபெரோஸ்பூரில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்துக்குக் கூடியிருந்த பொதுமக்களும் நீண்ட நேரம் அமர்ந்திருந்துவிட்டு, மழை காரணமாக எழுந்து சென்றனர். பிரதமர் மோடி பஞ்சாபில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கிவைப்பதாக இருந்தது. முதலில் அவர் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்தார்.

இந்தப் பாதுகாப்பு குளறுபடிக்கு பஞ்சாப் காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அரசு அதிகாரிகளிடம், ``நான் உயிருடன் விமான நிலையமாவது வந்துசேர்ந்தேன். பஞ்சாப் முதல்வருக்கு நன்றி!" என்று சொன்னதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.