Published:Updated:

``தாக்கரேயிடம் எஞ்சியிருக்கும் சிலரால் சேனாவை உருவாக்க முடியாது" - பட்னாவிஸ் மனைவி அம்ருதா

அம்ருதா பட்னாவிஸ்

சிவசேனா ஏற்கெனவே பாஜக-விடம்தான் இருக்கிறது என்றும், உத்தவ் தாக்கரேயிடம் சிலர் மட்டுமே இருப்பதாகவும் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் தெரிவித்திருக்கிறார்.

``தாக்கரேயிடம் எஞ்சியிருக்கும் சிலரால் சேனாவை உருவாக்க முடியாது" - பட்னாவிஸ் மனைவி அம்ருதா

சிவசேனா ஏற்கெனவே பாஜக-விடம்தான் இருக்கிறது என்றும், உத்தவ் தாக்கரேயிடம் சிலர் மட்டுமே இருப்பதாகவும் மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
அம்ருதா பட்னாவிஸ்

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா, பிரபல தனியார் வங்கியில் உயரதிகாரியாக இருக்கிறார். கடந்த முறை மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியில் இருந்தபோது, மகாராஷ்டிரா அரசு ஊழியர்களின் சம்பளக் கணக்கை தான் வேலை செய்த வங்கியில் திறக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சர்ச்சையும் ஏற்பட்டது. தற்போது மீண்டும் பட்னாவிஸ் துணை முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். இது குறித்து அம்ருதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது, ``என் கணவர் எப்போதும் வேலை செய்துகொண்டேயிருப்பார். எங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. மற்ற பொறுப்புகளும் இருக்கின்றன. நான் எனது வேலையையும் கவனித்துக்கொண்டு, குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிறேன். நான் வங்கியில் பணியாற்றினாலும் எனது பொழுதுபோக்கான இசையை எப்போதும் புறக்கணித்தது கிடையாது. சமூக சேவையிலும் ஈடுபடுகிறேன். எங்களுக்கு இருக்கும் ஒரு மகளையும் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது அவசியம் என்று நம்புகிறேன்.

தேவேந்திர பட்னாவிஸ் - அம்ருதா
தேவேந்திர பட்னாவிஸ் - அம்ருதா

நான் என்னுடைய வீடு மற்றும் வேலையில் கவனம் செலுத்துகிறேன். கிராம மேம்பாடு மற்றும் தெருவோரக் குழந்தைகளின் நலனில் பங்கெடுப்பதன் மூலம் சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முயல்கிறேன். சமூக சேவையும் அரசியலில் ஒரு பங்குதான். என் கணவர் மீண்டும் அதிகாரத்துக்கு வந்திருப்பதால் மும்பையில் நின்றுபோன வளர்ச்சித் திட்டங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

முந்தைய அரசு உட்கட்சிப் பிரச்னையால் கவிழும் என்று தேவேந்திர பட்னாவிஸ் ஒரு முறை சொல்லியிருந்தார். அதன்படிதான் நடந்திருக்கிறது. சிவசேனா ஏற்கெனவே பாஜக-வுடன்தான் இருக்கிறது. எஞ்சியிருப்பது சிலபேர் மட்டுமே. அவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களால் சேனாவை உருவாக்க முடியாது” என்று தெரிவித்தார்.

அம்ருதா நாக்பூர் அருகே ஒரு கிராமத்தையும் தத்து எடுத்திருக்கிறார். மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான அம்ருதா, ஒரு சிறந்த பயிற்சி பெற்ற பாடகிம்கூட.