Published:Updated:

புதுச்சேரி: ’அமைச்சர் பதவி யாருக்கு?’ அடித்துக்கொள்ளும் பா.ஜ.க; அலுவலகத்தை நொறுக்கிய தொண்டர்கள்!

புதுச்சேரி பா.ஜ.க

புதுச்சேரி அமைச்சரவையில் முதன்முறையாகப் பங்கேற்கவிருக்கும் பா.ஜ.க., சொந்தக் கட்சிக்காரர்களையும் விட்டுக்கொடுக்க முடியாமல், தங்களுக்காக எதிரணியிலிருந்து கட்சி மாறி வந்தவர்களையும் விட்டுவிட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.

புதுச்சேரி: ’அமைச்சர் பதவி யாருக்கு?’ அடித்துக்கொள்ளும் பா.ஜ.க; அலுவலகத்தை நொறுக்கிய தொண்டர்கள்!

புதுச்சேரி அமைச்சரவையில் முதன்முறையாகப் பங்கேற்கவிருக்கும் பா.ஜ.க., சொந்தக் கட்சிக்காரர்களையும் விட்டுக்கொடுக்க முடியாமல், தங்களுக்காக எதிரணியிலிருந்து கட்சி மாறி வந்தவர்களையும் விட்டுவிட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.

Published:Updated:
புதுச்சேரி பா.ஜ.க

புதுச்சேரியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து ஆட்சியைக் கைப்பற்றியதும், தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை முதலமைச்சராக அறிவித்தது காங்கிரஸ் கட்சித் தலைமை. ஆனால், நாராயணசாமிக்காக தொகுதியை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் முன்வரவில்லை. அப்போது நாராயணசாமியால் கட்சிக்குக் கொண்டுவரப்பட்ட ஜான்குமார், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தொகுதியை விட்டுக்கொடுத்தார். அந்தத் தொகுதியில் இடைத்தேர்தலில் நின்று தனது முதல்வர் பதவியைக் காப்பாற்றிக்கொண்டார் நாராயணசாமி. அதற்கு பிரதியுபகாரமாக ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி அல்லது எம்.பி பதவி தருவதாக நாராயணசாமி தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகத் தகவல் பரவியது.

கிழிக்கப்பட்ட பா.ஜ.க பேனர்
கிழிக்கப்பட்ட பா.ஜ.க பேனர்

ஆனால் அதன் பிறகு காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மட்டுமே ஜான்குமாருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் ஜான்குமார் வெற்றிபெற்ற நிலையில், ’டெல்லி சிறப்பு பிரதிநிதி’ என்ற பதவி வழங்கப்பட்டது. அதேபோல வருமான வரித்துறையில் இருந்த வழக்கும் ஜான்குமாரை நெருக்கியது. அமைச்சர் பதவியும் இல்லை, வழக்கும் முடியவில்லை என்ற விரக்தியில் இருந்த ஜான்குமாரை அதே வழக்கைக் காரணம் காட்டியும், ’பா.ஜ.க ஆட்சி அமைந்தால் அமைச்சர் பதவி’ என்று வாக்குறுதி கொடுத்தும் வளைத்துப் போட்டது பா.ஜ.க. அதன்படி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் அரசு கவிழ்வதற்குக் காரணமானார் ஜான்குமார். அத்துடன் தனக்கும், தனது மகன் வில்லியம் ரிச்சர்ட்டுக்கும் இரண்டு தொகுதிகளைப் பெற்றுக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் தனது மகனை நிற்கவைத்து வெற்றிபெற வைத்த ஜான்குமார், காமராஜர் நகர் தொகுதியில் தான் நின்று வெற்றிபெற்றார். இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றிகளும் என்.ஆர்.காங்கிரஸுக்கோ அல்லது பா.ஜ.க-வுக்கு சொந்தமானதோ அல்ல. ஜான்குமார் என்ற தனிநபர் இலவசங்களைக் கொடுத்து வளைத்துவைத்திருந்த வாக்குவங்கிகள் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நீண்ட இழுபறிக்குப் பின் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வுக்கு இரண்டு அமைச்சர் பதவிகளை ஒதுக்கினார் முதல்வர் ரங்கசாமி. அதையடுத்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்துக்கும், ஜான்குமாருக்கும் அமைச்சர் பதவியை ஒதுக்கி பட்டியலைத் தயாரித்தது பா.ஜ.க.

அடித்து நொறுக்கப்பட்ட பா.ஜ.க அலுவலகம்
அடித்து நொறுக்கப்பட்ட பா.ஜ.க அலுவலகம்

அப்போது பா.ஜ.க-வில் நீண்டகாலமாக இருப்பவரும், ஊசுடு தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான சாய் ஜெ.சரவணகுமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதேபோல காலாப்பட்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் அவர்கள் பங்குக்கு ’வருங்கால அமைச்சரே...’ என்று போஸ்டர் அடித்து கட்சி அலுவலகத்தில் ஒட்டித் தீர்த்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதுச்சேரி அமைச்சரவையில் முதன்முறையாக பங்கேற்கவிருக்கும் பா.ஜ.க., சொந்தக் கட்சிக்காரர்களையும் விட்டுக்கொடுக்க முடியாமல், தங்களுக்காக எதிரணியிலிருந்து கட்சி மாறி வந்தவர்களையும் விட்டுவிட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது. ’இரண்டு அமைச்சர் பதவிகளையுமே அணி மாறி வந்தவர்களுக்குக் கொடுத்துவிட்டால் கட்சிக்காரர்கள் அதிருப்தியாகிவிடுவார்கள். தவிர ஜான்குமார் மீதான வருமான வரித்துறை வழக்கு நிலுவையில் இருக்கிறது. அவரின் சொத்து மதிப்பைவிட வருமான வரித்துறைக்குச் செலுத்த வேண்டிய தொகை அதிகமாக உள்ளது.

பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார்
பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார்

அவர்மீது காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸில் போட்டியிட்டபோது பிரமாணப் பத்திரத்தில் உண்மைத் தகவல்களைத் தெரிவிக்காததால், புதுச்சேரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கினால், எதிர்க்கட்சிகளால் நாம் சிக்கலைச் சந்திக்க நேரிடும். அதனால் நமது கட்சிக்காரர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கினால் கட்சி வளர்வதற்கான வாய்ப்பாக இருக்கும்’ என்று உள்ளடி வேலை பார்த்தது பா.ஜ.க-வின் ஒரு தரப்பு.

அதையடுத்து பா.ஜ.க-வில் நீண்டகாலமாக இருப்பவரும், இந்தத் தேர்தலில் ஊசுடு தனித்தொகுதியில் வெற்றிபெற்றவருமான சாய் ஜெ.சரவணகுமாருக்குத்தான் அமைச்சர் பதவி என்று தகவல் பரவியது. தொடர்ந்து ‘சிறுபான்மையினரான ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கிய பா.ஜ.க தலைமைக்கு நன்றி’ என்று எம்.எல்.ஏ ஜான்குமாரே வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டார். இந்தநிலையில், ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று இன்று பா.ஜ.க அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அவருடைய ஆதவராளர்கள், அங்கிருந்த பேனர்களைக் கிழித்து, ஷட்டர்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, “நீங்கள் சொன்னால் எம்..எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வர வேண்டும். ஆனால் அமைச்சர் பதவியைத் தர மாட்டீர்களா ? இரண்டு தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். அதனால் சிறுபான்மையினர் என்ற முறையில் அமைச்சர் பதவியை எங்களுக்குத் தர வேண்டும்” என்று ஆக்ரோஷமாக கோஷத்தை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ ஜான்குமார், அவரது மகன் எம்.எல்.ஏ ரிச்சர்டு ஆகியோர் டெல்லியில் முகாமிட்டிருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.

பா.ஜ.க தரப்பில் நிலவும் இதே குழப்பம்தான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலும் நீடிக்கிறது. அரசு அமைந்து 45 நாள்களைக் கடந்தும் இன்னும் அமைச்சரவை இறுதி செய்யப்படாததால் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் புதுச்சேரி மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism