Published:Updated:

தியோசோஃபிகல் சொசைட்டி வாக்கிங்... ஈ.சி.ஆரில் சைக்கிளிங்! - முதல்வர் ஸ்டாலினின் ஃபிட்னெஸ் ஷெட்யூல்

முதல்வர் ஸ்டாலின்
News
முதல்வர் ஸ்டாலின்

69 வயதிலும், நெருக்கடியான காலகட்டத்திலும், வேலைப்பளுவுக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் எப்போதுமே தனது ஃபிட்னெஸுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்.

சிலருக்கு டீ குடிக்காமல் இருந்தால் அந்த நாளே நகராது. அதுபோல, சிலருக்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ரன்னிங், சைக்கிளிங் செய்யாமல் அந்த நாளே ஓடாது. அதிலும் குறிப்பாக பொதுமக்களைவிட, பொதுவாழ்க்கையில் இருக்கும் அரசியல்வாதிகளில் பலர் நாள் தவறாமல் நடைப்பயிற்சி செய்துவிடுகிறார்கள். குறிப்பாக தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் அடிக்கடி சைக்கிளிங் செய்யும் படங்கள் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. அப்படி எங்குதான் சைக்கிள் ஓட்டுகிறார்... எத்தனை மணிக்குப் போகிறார் வருகிறார்... ஸ்டாலினின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன என்பது குறித்து அவரின் குடும்ப நண்பர் ஒருவரிடம் கேட்டோம்.

பொதுமக்களுடன் உரையாடும் முதல்வர் ஸ்டாலின்
பொதுமக்களுடன் உரையாடும் முதல்வர் ஸ்டாலின்

``தனது உடல் ஆரோக்கியத்துக்கு எப்போதுமே முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். திங்கள் முதல் வெள்ளி வரை அதிகாலை 4:30 மணிக்கு எழுத்திருக்கும் ஸ்டாலின், ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு, ட்ராக்ஸ், டீ-சர்ட் சகிதம் வீட்டிலிருந்து கிளம்புவார். முதல்வர் என்பதால் பாதுகாப்பு கொடுக்கவேண்டியது போலீஸாரின் கடமை. அதனால், பாதுகாப்பு போலீஸாரும் முதல்வருக்கு முன்பாகவே விழித்து தயாராக இருப்பார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதல்வர் கான்வாய், ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலிருந்து ராஜா அண்ணாமலைபுரம், பசுமை வழிச்சாலை வழியாக சென்று, அடையாறு ‘தியோசோஃபிகல் சொசைட்டி’ செல்லும். அங்கு ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் நடைப்பயிற்சி செய்வது முதல்வர் ஸ்டாலினின் வழக்கம்.

முட்டுக்காடு முகத்துவாரத்தில் முதல்வர்
முட்டுக்காடு முகத்துவாரத்தில் முதல்வர்

உடன் நடைப்பயிற்சி செய்யும் பொதுமக்களுடன் பேசிக்கொண்டே நடந்து செல்வார். பாதுகாப்பு போலீஸார் மக்களுக்கு இடையூறின்றி முதல்வருக்குப் பாதுகாப்புக் கொடுப்பார்கள். நடைப்பயிற்சி முடிந்ததும், மீண்டும் வந்த வழியாகவே கான்வாய் இல்லத்துக்குத் திரும்பும்.

முதல்வர் ஸ்டாலின் - மருமகன் சபரீசன்
முதல்வர் ஸ்டாலின் - மருமகன் சபரீசன்

வார இறுதி நாள்களான சனி, ஞாயிறுக்கிழமைகளில் அதே நேரத்தில் எழுந்து கிளம்பும் ஸ்டாலின், வாக்கிங் போவதற்கு பதிலாக சைக்கிளிங் செல்வது வாடிக்கை. வழக்கம்போல சித்ரஞ்சன் சாலை, பசுமை வழிச்சாலை, அடையாறு, திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையை அடைந்து, ஈஞ்சம்பாக்கம் சென்று நிற்கும் முதல்வரின் கான்வாய்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஈஞ்சம்பாக்கத்தில்தான் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் இல்லம் அமைந்திருக்கிறது. முதல்வர் நிற்கும் ஸ்பாட்டில் சபரீசனும் ஆஜராகிவிடுவார். சில குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் இணைந்துகொள்வர். ட்ராக்ஸ், டீ-சர்ட்டுடன் தலையில் சிறிய ஹெல்மட், கூலிங் கிளாஸுடன் ஈஞ்சம்பாக்கத்திலிருந்து சைக்கிளில் கிளம்பும் மாமனார் - மருமகன் கூட்டணி சுமார் 35 கிலோமீட்டர் பயணித்து மாமல்லபுரத்தில் சைக்கிளிங்கை முடிப்பார்கள்.

சபரீசனுடன் சைக்கிளிங்
சபரீசனுடன் சைக்கிளிங்

அதிகாலையில் ஈ.சி.ஆரில் போக்குவரத்து அவ்வளவாக இருக்காது. பாதுகாப்புக்காக கான்வாய், முதல்வர் அண்ட் டீம் உடனே செல்லும்.

அவர்கள் செல்லும் வழியில் கோவளம் அருகே அவர் ரெகுலராக டீ குடிக்கும் கடை உள்ளது. அங்கு முதல்வர் ஸ்டாலின் டீ குடிக்கும்போது, அங்கு இருக்கும் பொதுமக்களுடன் உரையாடுவது வழக்கம். கடந்த முறை அந்த டீக்கடையில் நின்றுகொண்டிருந்த சிறுவனிடம் ஸ்டாலின் பேசும் வீடியோ வெளியானது. இவ்வாறு ஸ்டாலின் சைக்கிளிங் செய்வதையும், இடையில் நடக்கும் உரையாடல்களைப் பதிவுசெய்வதற்கும் போட்டோ மற்றும் வீடியோ டீம் ஒன்று கான்வாயில் எப்போதுமே செல்லும்.

ஜிம்மில் ஸ்டாலின்
ஜிம்மில் ஸ்டாலின்

ஈஞ்சம்பாக்கத்திலிருந்து மாமல்லபுரம் வரை முதல்வர் பின்னாலேயே அவரின் கான்வாய் பின்தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கும். சைக்கிளிங் முடிந்த பின்னர், மாமல்லபுரத்திலிருந்து கான்வாயில் ஏறிக்கொள்ளும் முதல்வர் நேராக சித்தரஞ்சன் சாலை இல்லத்துக்குத் திரும்புவார்” என்றார்.