Published:Updated:

எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி!" - அரங்கநாயகம் அதிரடி

அரங்கநாயகம்
News
அரங்கநாயகம்

தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் 90 வயது அரங்கநாயகத்தை சென்னை அடையாறு, இந்திரா நகரிலுள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.

எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி!" - அரங்கநாயகம் அதிரடி

தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் 90 வயது அரங்கநாயகத்தை சென்னை அடையாறு, இந்திரா நகரிலுள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.

Published:Updated:
அரங்கநாயகம்
News
அரங்கநாயகம்

எம்.ஜி.ஆர் மறைந்து `ஜெயலலிதா', `ஜானகி' என அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டிருந்த நேரம் அது. ஜானகி அணியிலிருந்த ஆர்.எம்.வீரப்பனின் கட்டுப்பாட்டில் 98 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். வெறும் 29 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவே ஜெயலலிதா அணிக்கு இருந்தது. ஆனாலும், பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஜெ-க்கு ஆதரவளித்தனர்.

அந்தச் சமயத்தில், ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த அன்றைய கல்வி அமைச்சரும், 'ஜெ' அணியைச் சேர்ந்தவருமான அரங்கநாயகம் வீட்டில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசர்... என 'ஜெ' ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அரங்கநாயகம், ''புரட்சித்தலைவி ஜெயலலிதாவைக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்மொழிகிறேன்'' என்று பிள்ளையார் சுழியைப் போட்டார். ஜெயலலிதாவின் அரசியல் ஆட்டம் அன்றிலிருந்து ஆரம்பமானது.

தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் 90 வயது அரங்கநாயகத்தை சென்னை அடையாறு, இந்திரா நகரிலுள்ள அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.

"இனி தி.மு.க-வுக்கு மாற்று பா.ஜ.க-தான் என்று வி.பி.துரைசாமி கூறியிருக்கிறாரே..?" என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில்:

''தமிழ்த் திருமுறைகள் நமக்கு சமத்துவத்தைத்தான் போதித்துள்ளன. வடநாட்டு அரசியலைப் போன்று மதத் துவேஷத்தை விதைத்து, வாக்குகளை அறுவடை செய்யலாம் என பா.ஜ.க கணக்குப் போட்டால், அது தவறாகிவிடும்.

அரங்கநாயகம்
அரங்கநாயகம்

1967, 1971 தேர்தல்களில் மதப் பிரச்னையைத் தூண்டிவிட்டு, தி.மு.க-வை வீழ்த்த முயன்றார்கள். அது பூமராங் ஆனதுதான் மிச்சம். அந்த வியூகம் இனி எடுபடாது. இந்துத்துவா அரசியலை ஒருபோதும் தமிழகம் ஏற்றுக்கொண்டதில்லை. வரவிருக்கும் தேர்தலில் எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி!"

> ''தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை விவகாரம் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதே..?''

> ''எம்.ஜி.ஆருக்கும் உங்களுக்குமான உறவு எப்படி இருந்தது?''

> ''கட்சி பிளவுபட்டபோது, ஜெயலலிதாவை ஏன் ஆதரித்தீர்கள்?"

> "எதற்காக அ.தி.மு.க-விலிருந்து விலகினீர்கள்?"

> "அ.தி.மு.க-வில் நடைபெறும் 'யார் முதல்வர்?' பஞ்சாயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

- இந்தக் கேள்விகளுக்கு அரங்கநாயகம் அளித்த பளீச் பதில்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2Q5ySjB > "முதல்வருக்கு எடப்பாடிதான் பெஸ்ட் சாய்ஸ்!" - அரங்கநாயகம் 'பளிச்' பேட்டி https://bit.ly/2Q5ySjB

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV