Published:Updated:

``குறைந்த காலத்தில் அதிக அதிருப்தியைச் சந்தித்த கட்சி திமுக தான்" - ஜெயக்குமார் காட்டம்!

ஜெயக்குமார்

`அ.தி.மு.க உடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் கட்சிகளுக்கு தான் வெற்றி கிடைக்கும்.' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

``குறைந்த காலத்தில் அதிக அதிருப்தியைச் சந்தித்த கட்சி திமுக தான்" - ஜெயக்குமார் காட்டம்!

`அ.தி.மு.க உடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் கட்சிகளுக்கு தான் வெற்றி கிடைக்கும்.' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

Published:Updated:
ஜெயக்குமார்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடைபெறும் எனவும் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மும்முரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று காலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையின் போது பா.ஜ.க-வுடன் கூட்டணியைத் தொடர்வது, இடப்பங்கீடு செய்து கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது. சென்னையில் உள்ள 8 மாவட்டச் செயலாளர்களையும் தங்கள் பகுதிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்களின் பட்டியலுடன் வரும்படி அழைத்திருக்கின்றனர். எனவே சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

அதிமுக - திமுக
அதிமுக - திமுக

மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் முடிந்த உடன் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``குறைந்த காலத்தில் அதிக அதிருப்தியைச் சந்தித்த கட்சி தி.மு.க தான். அ.தி.மு.க உடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் கட்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். தி.மு.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. காவலர்களுக்கே பாதுகாப்பில்லை. இதற்கெல்லாம் பதிலை மக்கள் இந்த தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்துத் தெரிவிப்பார்கள்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!