Published:Updated:

“ஜென்ம பூமி ஆந்திரா... கர்ம பூமி தமிழ்நாடு!”

ராமமோகன ராவ்
பிரீமியம் ஸ்டோரி
News
ராமமோகன ராவ்

பொதுவாழ்க்கைக்கு வந்த ராமமோகன ராவ்

இந்த வருடம் மதுரையில் நடந்த திருமலை நாயக்கர் விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது, ராமமோகன ராவின் வருகைதான். ‘வராது வந்த மாமணியே’ என அச்சிடப்பட்ட சுவரொட்டிகள், நாளிதழ் விளம்பரங்கள் என்று அசத்தியிருந்தனர் அவரின் ஆதரவாளர்கள்! 2016-ம் ஆண்டு, தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் அலுவலகம், வீடு உட்பட அவர் தொடர்புடைய பல இடங்களிலும் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினார்கள். தொடர்ந்து தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக இருந்து, 2017-ம் ஆண்டு ஓய்வுபெற்றார். இரண்டு வருடம் சத்தமில்லாமல் இருந்தவர், தற்போது “என் ஜென்ம பூமி ஆந்திரா, கர்ம பூமி தமிழ்நாடு” என்ற கோஷத்துடன் பொதுக்களத்துக்கு வந்துள்ளார்.

“ஜென்ம பூமி ஆந்திரா... கர்ம பூமி தமிழ்நாடு!”

‘‘நீண்டகாலம் அரசின் உயர் பதவியில் இருந்துவிட்டு, ஓய்வுக்குப் பிறகு அரசியலுக்கு வந்தது ஏன்?’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘நான் அரசியலுக்கு வரவில்லை, பொதுவாழ்க்கைக்கு வந்திருக்கிறேன். ஓய்வுக்குப் பிறகு அரசியல் கட்சியில் சேரலாமா, தொண்டு நிறுவனம் தொடங்கி மக்கள் பணி செய்யலாமா என, இரண்டு வருடம் யோசித்தேன். முக்கியப் பிரமுகர்களிடம் ஆலோசனை கேட்டேன். அப்போதுதான், தமிழகத்தில் பெரிய சமுதாயமாக இருந்து அரசியல் மற்றும் ஆட்சியில் பெரிய அங்கீகாரத்தைப் பெற முடியாத நாயுடு, நாயக்கர், ரெட்டி, யாதவர், போயர், ஐயர், அருந்ததியர், மீனவர் உள்ளிட்ட பல சமுதாயங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்காக, அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என முடிவெடுத்தேன்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘நாயுடு, நாயக்கர் மற்றும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைக்க என்ன காரணம்?’’

‘‘தமிழகத்தில் நாயுடு, நாயக்கர் மக்கள்தொகை ஒன்றேகால் கோடி பேர்! அதற்கு ஏற்றபடி அவர்களுக்கு அரசியலில் பிரதிநிதித்துவம் இல்லை. இவர்களில் எட்டு உட்பிரிவினர் உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல யாதவர், அருந்ததியர், போயர், கோயிலில் பூஜை செய்யும் வைஷ்ணவர் உள்ளிட்ட சமுதாயங்களுக்கு போதிய வாய்ப்பில்லை. சலவைத் தொழிலாளர் மற்றும் மருத்துவச் சமூகத்தினருக்கும் எந்தவொரு முன்னேற்றத் திட்டமும் இல்லை. பிராமணர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இப்படிப் புறக்கணிக்கப்படும் சமூகங்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு வழிகாட்டுவேன். வேறெந்த உள்நோக்கமும் இல்லை.’’

ராமமோகன ராவ்
ராமமோகன ராவ்

‘‘நீங்கள் குறிப்பிட்ட சாதி அமைப்பைச் சேர்ந்தவர் என்ற தோற்றம் எழுகிறதே?’’

‘‘அதெல்லாம் இல்லை. அடுத்து அழகுமுத்துக்கோன் விழாவில் கலந்துகொள்கிறேன். முத்துராமலிங்க தேவர் மற்றும் பிராமணர் சங்க நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறேன். ஒதுக்கப்படும் சமூகங்களை ஒன்றிணைப்பதே என் வேலை.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘அரசியல் கட்சிகளில் சேராமல் சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கு என்ன காரணம், கட்சிகள்மீது நம்பிக்கையில்லையா?’’

‘‘எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் அனைத்து சமுதாயங்களுக்கும் நன்மைகள் கிடைத்தன. ஆனால், அதற்குப் பிறகு மிக மோசமான ஆட்சி நடக்கிறது. இப்படியே போனால், தமிழகம் காப்பாற்றவே முடியாத நிலைக்குப் போய்விடும். அரசியலில் அனைத்தும் மாற வேண்டும். புதிய தலைமை உருவாக வேண்டும். ஒதுக்கப்படும் சமுதாய இளைஞர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களை அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும். அதனால்தான் எந்த அரசியல் கட்சியிலும் சேரவில்லை.’’

“ஜென்ம பூமி ஆந்திரா... கர்ம பூமி தமிழ்நாடு!”

‘‘தலைமைச் செயலாளராக இருந்தபோது உங்கள் அலுவலகத்திலும் வீட்டிலும் வருமான வரித் துறை சோதனைகள் நடத்தப்பட்டனவே?’’

‘‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அரசுத் துறையில் சிறப்பாகப் பணி செய்தேன். தி.மு.க, அ.தி.மு.க ஆட்சியில் எந்தப் பாரபட்சமுமில்லாமல் செயல் பட்டேன். கருணாநிதியும் ஜெயலலிதாவும் எனக்கு மதிப்பளித்தார்கள். இந்த நிலையில்தான் என்மீது ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க என்னை அசிங்கப்படுத்த நடந்த நிகழ்வு.

என்னுடைய சொத்து விவரங்கள் அனைவருக்கும் தெரியும். எந்த முறைகேடும் செய்யவில்லை. என்மீது மோசமான பல குற்றச்சாட்டுகளையும் வைத்தார்கள். பெண்கள் தொடர்பு என்றெல்லாம் தகவல்களைப் பரப்பினர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருந்தேன். யாருக்காகவோ என்னை பலிகடாவாக்கப் பார்த்தார்கள். அந்த உண்மைகள் எனக்குத் தெரியும். அதை வெளியில் சொல்லவில்லை. ஒருகாலத்திலும் அதைப் பற்றி சொல்ல மாட்டேன்.’’

‘‘பொதுவாழ்க்கைக்கு வந்துள்ளேன் என்கிறீர்கள், அடுத்த நகர்வு அரசியல் கட்சிதானே?’’

‘‘எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இப்போது, மக்களை ஒருங்கிணைப்பது தான் என் முதல் பணி. அதேசமயம் எந்தக் கட்சி எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டாலும், அந்தக் கட்சியை ஆதரியுங்கள் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்வேன்.’’