Published:Updated:

கருணாநிதி அருங்காட்சியகம் ஆகஸ்டில் திறப்பு?! - எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்டாலினின் காட்டூர் விசிட்

திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின்

தனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் சொந்த ஊரில் அமைக்கப்பட்டும் பிரமாண்ட அருங்காட்சியகம் மிக சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

கருணாநிதி அருங்காட்சியகம் ஆகஸ்டில் திறப்பு?! - எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்டாலினின் காட்டூர் விசிட்

தனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் சொந்த ஊரில் அமைக்கப்பட்டும் பிரமாண்ட அருங்காட்சியகம் மிக சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்.

Published:Updated:
திருவாரூரில் முதல்வர் ஸ்டாலின்

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்திற்காக, கடந்த மே 24-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி நிறைவடைந்த பகுதிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்தார்.

கருணாநிதி அருங்காட்சியகம் ஆகஸ்டில் திறப்பு?! - எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்டாலினின் காட்டூர் விசிட்

காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, கடைமடை பகுதிகள் வரை பாசனத்திற்கு தண்ணீர் செல்வதற்காக, 80 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில், சிறப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 82 சதவீதம் பணிகள் நிறைவடைந்திருப்பதாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் தான் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தூர் வாரும் பணி நிறைவு செய்யப்பட்ட ஆறு, வாய்க்கால்கள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள்கள் டெல்டா மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டார்.

அருங்காட்சியகம் கட்டுமான பணி
அருங்காட்சியகம் கட்டுமான பணி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா, வடபாதி கொக்கேரி கிராமத்தில் பீமனோடை வடிகால் நெடுகையில் 4.5 கி.மீ நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின், 30-ம் தேதி இரவு நாகை மாவட்டம், வேளாங்கண்ணி சென்று அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

31-ம் தேதி சுமார் 1 மணியளவில் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கொந்தங்குடி வாய்க்காலை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின். தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் பார்க்க, இப்பகுதியைச் சேர்ந்த ஏரளாமான பொதுமக்களும், தி.மு.க தொண்டர்களும் கூடியிருந்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து புறப்பட்டு, திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

கருணாநிதி அருங்காட்சியகம் ஆகஸ்டில் திறப்பு?! - எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஸ்டாலினின் காட்டூர் விசிட்

அங்கு மதிய உணவு அருந்திவிட்டு, ஓய்வெடுத்த பிறகு, காட்டூரில் உள்ள தனது பாட்டியும் கருணாநிதியின் தாயாருமான அஞ்சுகம் அம்மையாரின் சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இங்கு பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி தி.மு.க. முக்கிய நிர்வாகிகள், ``இங்கு மிகவும் பிரமாண்டமாக கருணாநிதி அருங்காட்சியம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. வீடியோ, புகைப்படங்கள் மூலம் தமிழக முதல்வர் இதனை தொடர்ந்து கண்காணித்து, தேவையான ஆலோசனைகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது ஸ்டாலின் இங்கு நேரடி விசிட் செய்துள்ளார்.

தனது பாட்டி அஞ்சுகம் அம்மையாரின் சொந்த ஊரில் அமைக்கப்பட்டும் இந்த அருங்காட்சியகம் மிக சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். அருங்காட்சியகம் அருகில் கருணாநிதிக்கு மணிமண்டபமும் அமைக்கப்படுகிறது. அருங்காட்சியகத்தையும் மணிமண்டபத்தையும் நிர்வகிப்பதற்கான செலவுகளை சமாளிக்க, இதே பகுதியில் ஒரு கல்யாண மண்டபம் கட்டி, வாடகைக்கு விட்டு, அதன் மூலம் வருமானம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அருங்காட்சியகம், மணிமண்டபம், கல்யாண மண்டபம் இவைகளின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. சுமார் ஏழாயிரம் சதுர மிட்டர் பரப்பளவில், 12 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்த மூன்றும் கட்டப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகளை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையிலான தி.மு.க. பிரமுகர்கள் கவனித்து வருகிறார்கள். ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி, கருணாநிதியின் நினைவு நாள் அன்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் இதனை திறந்து வைக்க வாய்ப்புள்ளதாக கட்சியின் மேல்மட்டத்தில் பேச்சு அடிபடுகிறது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பிறகு பார்த்தால் சிறப்பாக இருக்கும் என்பதால் தான், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் மட்டுமல்லாமல்., திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க உள்ளுர் நிர்வாகிகளுமே கூட இங்கு அனுமதிக்கப்படுவதில்லை’’ என தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism