Published:Updated:

``ஹிட்லரைப்போல நடந்துகொள்ளும் மோடி, அவரைப்போல்தான் இறப்பார்" - மாஜி காங்., அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

சுபோத் சஹாய்

``ஹிட்லரைப்போல நடந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அவரைப்போல்தான் இறப்பார்." - சுபோத் சஹாய்

``ஹிட்லரைப்போல நடந்துகொள்ளும் மோடி, அவரைப்போல்தான் இறப்பார்" - மாஜி காங்., அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

``ஹிட்லரைப்போல நடந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அவரைப்போல்தான் இறப்பார்." - சுபோத் சஹாய்

Published:Updated:
சுபோத் சஹாய்

காங்கிரஸ் கட்சி பாதுகாப்புப் படைக்கு புதிதாக ஆட்களைத் தேர்வுசெய்யும் அக்னிபத் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த பந்த்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஆனால், மத்திய அரசு அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும், ஜூலை மாதத்திலிருந்து அக்னிபத் திட்டத்தில் பாதுகாப்புப் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சஹாய் பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். சுபோத் காந்த் சஹாய் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ``ஹிட்லரைப்போல நடந்துகொள்பவர்கள் அவரைப்போல்தான் இறப்பார்கள். பிரதமர் நரேந்திர மோடியும் ஹிட்லரைப்போலதான் இறப்பார்" என்று தெரிவித்திருந்தார். அவரின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுபோத் சஹாய்
சுபோத் சஹாய்

இது தொடர்பாக அந்தக் கட்சியின் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ், ``காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரதமரை அவமதித்திருக்கிறார். இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது காங்கிரஸ் மரபணுவில் இருக்கிறது. அனைவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை `கொலை வியாபாரி’ என்று விமர்சனம் செய்தார். இந்த வார்த்தையால் குஜராத் மக்கள் மிகவும் காயப்பட்டனர். அதனால்தான் பிரதமர் தேர்தலில் வரலாறு காணாத வெற்றிபெற்றார். மக்கள் மோடிமீது அன்பு வைத்திருப்பதால்தான் தொடர்ச்சியாக அவரை வெற்றிபெறச் செய்துவருகின்றனர். இதனால் காங்கிரஸ் விரக்தி அடைந்திருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism