Published:Updated:

குஜராத்: காங்கிரஸிலிருந்து விலகிய ஹர்திக் படேல் பாஜக-வில் இணைகிறார் - பாஜக செய்தித் தொடர்பாளர் தகவல்

ஹர்திக் படேல் ( twitter )

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஹர்திக் படேல், ஜூன் 2-ம் தேதி பா.ஜ.க-வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

குஜராத்: காங்கிரஸிலிருந்து விலகிய ஹர்திக் படேல் பாஜக-வில் இணைகிறார் - பாஜக செய்தித் தொடர்பாளர் தகவல்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஹர்திக் படேல், ஜூன் 2-ம் தேதி பா.ஜ.க-வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Published:Updated:
ஹர்திக் படேல் ( twitter )

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், அங்கு அரசியல் களம் பரபரக்க ஆரம்பித்திருக்கிறது. பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இந்த நிலையில், குஜராத் மாநில காங்கிரஸின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் பட்டேல், ``காங்கிரஸ் கட்சியைச் சரியான திசையில் வழிநடத்தப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்தக் கட்சி தொடர்ந்து சமூகநலன்களுக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறது.

ஹர்திக் படேல்  - காங்கிரஸ்
ஹர்திக் படேல் - காங்கிரஸ்

காங்கிரஸ் சாதியப் பாகுபாடு நிறைந்த கட்சி. அந்தக் கட்சியில் இரண்டு ஆண்டுகளாக எனக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஆனால், நான் இன்னும் பா.ஜ.க-வில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை." எனக் கூறி கடந்த 18-ம் தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் எந்தக் கட்சிக்குச் செல்வார் எனப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹர்திக் படேல்
ஹர்திக் படேல்

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஹர்திக் படேல் ஜூன் 2-ம் தேதி பா.ஜ.க-வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் யக்னேஷ் தவே, ``குஜராத் கட்சித் தலைவர் சி.ஆர்.பாட்டீல் முன்னிலையில் ஹர்திக் பட்டேல் பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார்" எனத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் ஹர்திக் படேல் பா.ஜ.க-வில் இணைவது உறுதியாகியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism