Published:Updated:

அதிமுக: `முரண்பாடான செயல்பாடு; இரட்டைத் தலைமையை ரத்துசெய்ய வேண்டும்' - பொதுக்குழுவில் சி.வி.சண்முகம்

பன்னீர் - எடப்பாடி

`இரட்டைத் தலைமையின் முரண்பாடான, தெளிவில்லாத, ஒருங்கிணைப்பில்லாத செயல்பாட்டால் தொண்டர்களிடையே மிகப்பெரிய சோர்வு ஏற்பட்டிருக்கிறது.' - சி.வி.சண்முகம்

அதிமுக: `முரண்பாடான செயல்பாடு; இரட்டைத் தலைமையை ரத்துசெய்ய வேண்டும்' - பொதுக்குழுவில் சி.வி.சண்முகம்

`இரட்டைத் தலைமையின் முரண்பாடான, தெளிவில்லாத, ஒருங்கிணைப்பில்லாத செயல்பாட்டால் தொண்டர்களிடையே மிகப்பெரிய சோர்வு ஏற்பட்டிருக்கிறது.' - சி.வி.சண்முகம்

Published:Updated:
பன்னீர் - எடப்பாடி

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வுக்குள், கடந்த சில ஆண்டுகளாக நிலவிவந்த உட்கட்சிப்பூசல், அண்மையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பூதாகரமாக வெடித்தது. கடந்த வாரம் நடைபெற்ற அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் நடைபெற்றது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தது அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மாறி மாறித் தங்களின் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு

இந்த நிலையில், இன்று அ.தி.மு.க-வின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் மற்றும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, அ.தி.மு.க அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.

இதைத் தொடர்ந்து பொதுக்குழு உறுப்பினர்கள் அவைத்தலைவருக்கு வழங்கிய கடிதத்தை வாசித்த சி.வி.சண்முகம், ``அ.தி.மு.க பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம். 2,190 பொதுக்குழு உறுப்பினர்களால் கையொப்பமிட்டு கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை விவாதிக்க கோரிக்கை வைக்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதிமுக
அதிமுக

இரட்டைத் தலைமையால் தி.மு.க-வை எதிர்த்து செயல்பட முடியாத நிலை உள்ளது. இரட்டைத் தலைமையின் முரண்பாடான, தெளிவில்லாத, ஒருங்கிணைப்பு இல்லாத செயல்பாட்டால் தொண்டர்களிடையே மிகப்பெரிய சோர்வு ஏற்பட்டிருக்கிறது. இரட்டைத் தலைமையை ரத்து செய்துவிட்டு ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியும் இன்றே முடிவு செய்ய வேண்டும்'' என்றார்.

பரபரப்பான சூழலில் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் சலசலப்புடன் நிறைவுபெற்றது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism