Published:Updated:

``ஓ.பி.எஸ் மௌனமாக நடத்துவது தர்மயுத்தம் அல்ல… துரோக யுத்தம்" - சாடும் ஆர்.பி.உதயகுமார்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

``எப்போதெல்லாம் கட்சியில் தனக்கு பதவி கிடைக்கவில்லையோ அப்போதெல்லாம் ஒரு மௌன யுத்தத்தினை தொடங்குவார் ஓ.பன்னீர்செல்வம்” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

``ஓ.பி.எஸ் மௌனமாக நடத்துவது தர்மயுத்தம் அல்ல… துரோக யுத்தம்" - சாடும் ஆர்.பி.உதயகுமார்

``எப்போதெல்லாம் கட்சியில் தனக்கு பதவி கிடைக்கவில்லையோ அப்போதெல்லாம் ஒரு மௌன யுத்தத்தினை தொடங்குவார் ஓ.பன்னீர்செல்வம்” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

Published:Updated:
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அ.தி.மு.க 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், ``முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றயுள்ளார்.ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அவர்தான் முதல்வர் பதவி ஏற்றார். பின்னர் ராஜினாமா செய்தார், தர்மயுத்தம் தொடங்கினார். பின் தி.மு.கவுடன் இணைந்து கொண்டு சட்டமன்றத்தில் அ.தி.மு.க-விற்கு எதிராக வாக்களித்தார்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இணைக்கப்பட்டு அவருக்கு துணை முதல்வர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இருந்த போதிலும், அவரிடம் இருந்து ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும் போது ஓ.பி.எஸ் மௌனயுத்தம் நடத்தினார். இதனால், அ.தி.மு.க வின் வாக்குவங்கி 5 சதவீதம் சரிந்தது. முந்தைய சட்டமன்றத் தேர்தலின் போது தனது தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்திற்கு ஓ.பி.எஸ். செல்லவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்று கட்சிக்குள் கேள்வி எழுந்தபோது வழக்கம் போல ஓ.பி.எஸ். மௌன யுத்தத்தினை தொடங்கினார். எந்த தியாகத்தையும் செய்யாதவருக்கு தலைவர் பதவி எதற்கு என சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கின்றனர். எப்போதெல்லாம் தனக்கு பதவி கிடைக்கவில்லையோ அப்போதெல்லாம் ஒரு மௌன யுத்தத்தினை தொடங்குவார். அதற்கு பெயர் ’தர்மயுத்தம்’ என்று சொல்வார். ஓபிஎஸ் மௌனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல.. அது துரோக யுத்தம். சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அணிவகுத்து நிற்கிறார்கள்.

உதயக்குமார்
உதயக்குமார்

கட்சியில் காலாவதியானர்கள், காணமால் போனவர்களை அழைத்து வந்து ஓ.பி.எஸ் பதவிகள் வழங்கி வந்தார். நீதிமன்றத் தீர்ப்பினால் அதுவும் போய்விட்டது. எப்போது எல்லாம் தன் பதவிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் கட்சிக்கு ஆபத்து என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை அவர் உருவாக்குவார். அவருடைய யுத்தங்கள் இதுவரை தோல்வியில்தான் முடிந்துள்ளதே தவிர அவருக்கு வெற்றியைத் தராது” என்றார்.