Published:Updated:

மதுரை: "இரட்டை இலையால் வாழ்வு பெற்றவர்கள் தோற்கடிக்க வேலை செய்தனர்" - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேச்சு.

"அதிமுகவுக்கு துரோகத்தை செய்தவர்கள் அதற்குரிய பலனை அடைந்துதான் ஆகவேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணியின் ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோயில் வளாகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய ஆர்.பி. உதயகுமார், " புதிதாக ஆட்டோ வாங்கும் தொழிலாளர்களுக்கு ரூ 25,000 மானியமாக வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தோம். ஆனால், திமுக அறிக்கையில் ரூ 10,000 மானியமாக வழங்கப்படும் என்று கூறினார்கள். அதை அரசு உடனே செயல்படுத்த வேண்டும்

கொரோனா முதல் அலையின்போது அமைப்பு சாரா நலவாரிய தொழிலாளர்கள் 36 லட்சம் பேருக்கு ரூ. 2000 நிவாரண உதவி மற்றும் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

தற்போது இரண்டாம் அலையில் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஆகையால், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் நலவாரிய தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி மற்றும் உணவுப்பொருட்களை அரசு வழங்க வேண்டும்.

தமிழக மக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிதான் மீண்டும் முதல்வராக வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், இரட்டை இலை சின்னத்தால் வாழ்வு பெற்றவர்கள் இரட்டை இலையைத் தோற்கடிக்க செயல்பட்டதால் இந்த முறை ஆட்சியைப் பறிகொடுத்தோம்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவுக்கு துரோகத்தை செய்தவர்கள் அதற்குரிய பலனை அடைந்துதான் ஆகவேண்டும்.7 கோடி பேருடன் யாரும் பேசட்டும். ஆனால், இரட்டை இலை சின்னம் இபிஎஸ்- ஓபிஎஸ் கரங்களில்தான் இருக்கும். அவர்கள் பின்னால் கட்சி ஓரணியாக பயணித்துக் கொண்டிருக்கிறது" என்றார்.துரோகம் செய்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டு பேசியது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு