Published:Updated:

``ரெய்டு முதல் பிரமாண்ட மருத்துவமனை கட்டடத்துக்கான நிதி வரை...” - ஆர்.காமராஜ் விளக்கம்

ஆர்.காமராஜ்

இந்திய துணைக் குடியரசுத் தலைவரைச் சந்தித்து தஞ்சை மருத்துவமனையின் திறப்புவிழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்த புகைப்படம் வெளியாக, இந்த விவகாரம் மீண்டும் சூடுப்பிடிக்கத் தொடங்கியது.

``ரெய்டு முதல் பிரமாண்ட மருத்துவமனை கட்டடத்துக்கான நிதி வரை...” - ஆர்.காமராஜ் விளக்கம்

இந்திய துணைக் குடியரசுத் தலைவரைச் சந்தித்து தஞ்சை மருத்துவமனையின் திறப்புவிழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்த புகைப்படம் வெளியாக, இந்த விவகாரம் மீண்டும் சூடுப்பிடிக்கத் தொடங்கியது.

Published:Updated:
ஆர்.காமராஜ்

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக ஆர்.காமராஜ் பதவி வகித்தபோது, தஞ்சாவூரில் மிகப் பிரமாண்டமான, உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

ஆர்.காமராஜ் கட்டியுள்ள மருத்துவமனை
ஆர்.காமராஜ் கட்டியுள்ள மருத்துவமனை

விமான ஆம்புலன்ஸ் வசதியுடன் இந்த மருத்துவமனை பிரமாண்டமாக உருவாக்கப்படுவதாகப் பேச்சுகள் அடிப்பட்டன. இப்படி ஒரு மருத்துவமனை கட்டுமளவுக்கு, காமராஜுக்கு எப்படிப் பணம் வந்தது என உள்ளூர் தி.மு.க-வினரும் அ.ம.மு.க-வினரும் கேள்வி எழுப்பிக்கொண்டேயிருந்தனர். ஆனால் இது தொடர்பாக ஆர்.காமராஜ் எந்த ஒரு விளக்கமும் அளிக்காமலேயே இருந்துவந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, ஆர்.காமராஜ், இவரின் மகன்களான மருத்துவர்கள் இனியன், இன்பன் ஆகியோர் இந்திய துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவைச் சந்தித்து தஞ்சை மருத்துவமனையின் திறப்புவிழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்த புகைப்படம் வெளியாக, இந்த விவகாரம் மீண்டும் சூடுப்பிடிக்கத் தொடங்கியது.

ஆர்.காமராஜ்
ஆர்.காமராஜ்

இச்சூழலில் தான், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர், ’கடந்த அதிமுக ஆட்சியில் 2015 முதல் 2021-ம் ஆண்டு வரை உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், அவர் பெயரிலும், குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், நெருங்கிய உறவினர்கள் பெயரிலும், நெருங்கிய நண்பர்கள் பெயரிலும் 58,44,38,752 ரூபாய் சொத்துச் சேர்த்ததாக வழக்கு பதிவுசெய்து ஆர்.காமராஜ் மற்றும் அவரின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

நேற்று தனது வீட்டில் பல மணி நேரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையின் முடிவில் பேசிய ஆர்.காமராஜ், தஞ்சையில் கட்டப்பட்டிருக்கும் பிரமாண்ட மருத்துவமனை குறித்து முதன்முறையாக பொதுவெளியில் பேசினார்... ``அனைத்து இந்திய அண்ணா திமுக என்பது மாபெரும் மக்கள் இயக்கம். இதன் வளர்ச்சியை, வேகத்தை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. என் வீட்டிலும், என்னுடன் தொடர்புடையவர்கள் வீட்டிலும் காலையிலிருந்து நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை என்பது அரசியல் உள்நோக்கம்கொண்டது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதை அரசியல்ரீதியாகவும், சட்டப்படியும் எதிர்கொண்டு வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அன்று முதல் இன்று வரை அதிமுக-வின் வீறுகொண்ட தொண்டனாகச் செயலாற்றிவருகிறேன். 39 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் பணியாற்றிவருபவன் என்ற வகையில், இந்த காமராஜையோ அல்லது இந்த இயக்கத்தின் ஒரு சாதாரணத் தொண்டனையோ தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவுடன் ஆர்.காமராஜ்
துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடுவுடன் ஆர்.காமராஜ்

இன்றைய ஆளுங்கட்சி, மாபெரும் எதிர்க்கட்சியான அண்ணா திமுக-வை முடக்கிவிடலாம் என நினைக்கிறது. ஒருநாளும் அது நடக்காது. அண்ணன் எடப்பாடியாரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு நடைபெறவிருக்கிறது. ஒற்றைத் தலைமை வந்தால் எல்லா கட்சிகளுக்கும் ஆட்டம் கண்டுவிடும். அதனால்தான் ஒற்றைத் தலைமை வராமல் தடுக்க பலரும் சேர்ந்து செயல்படுகிறார்கள். அதனால்தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இது தவறான முன்னுதாரணம். அது நிச்சயம் நடக்காது. என் வீடு உட்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியிருக்கிறார்கள். நான் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவன் என்ற முறையில் ஆளுங்கட்சியினர் என் வீட்டில் சோதனை நடத்தியிருக்கலாம், ஆனால் என் உறவினர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... இன்று நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தங்கள் கைப்படவே எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

நான் கடுமையாக உழைப்பவன். பொதுவாழ்க்கையில் எப்படிக் கடுமையாக உழைக்கிறேனோ, அதுபோல் விவசாயத்திலும் கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தவன். என் மகன்கள் இரண்டு பேருமே மருத்துவர்கள். மிகப்பெரிய இரு வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன்கள் வாங்கித்தான் தஞ்சையில் ஒரு மருத்துவமனையைக் கட்டியிருக்கிறார்கள். டாக்டர்கள் மருத்துவமனைதானே கட்டமுடியும்’’ எனத் தெரிவித்தார்.