Published:Updated:

``திமுக அரசு இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும், ரூ.22,000 கொடுத்திருக்கணும்" - செல்லூர் ராஜூ

செல்லூர் கே.ராஜூ

``வரும் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும், புதிய வைரஸ் தொற்று இல்லாத ஆண்டாக மாற வேண்டும்.” - செல்லூர் ராஜூ

``திமுக அரசு இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும், ரூ.22,000 கொடுத்திருக்கணும்" - செல்லூர் ராஜூ

``வரும் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும், புதிய வைரஸ் தொற்று இல்லாத ஆண்டாக மாற வேண்டும்.” - செல்லூர் ராஜூ

Published:Updated:
செல்லூர் கே.ராஜூ

புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, "உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க மீனாட்சியம்மனை வேண்டியுள்ளேன், அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

அதிமுக ஆட்சி விரைவில் வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர். 2022-ல் திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அழிக்கமுடியாத கல்வெட்டாக உள்ளது.

அதிமுகவுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாக சந்தோஷமாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விரைவில் பெரிய மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம்.

செல்லூர் கே.ராஜூ
செல்லூர் கே.ராஜூ

தனி மனிதர், தனி குடும்பம் என்பது இல்லாமல் ஜனநாயக அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்காக சாட்சியாக அதிமுக செயல்படுகிறது. வரும் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும், புதிய வைரஸ் தொற்று இல்லாத ஆண்டாக மாற வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் சொன்னதுபோல் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், சிலிண்டருக்கு மானியம் மாதம் 100 ரூபாய் என கணக்கிட்டால் இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் திமுக அரசு 22 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கனும், ஆனால் கொடுக்கவில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இப்போது பொங்கலுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாய்க்கே தடுமாறி உள்ளார்கள். அதிமுக போராட்டத்திற்கு பயந்துதான் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு அறிவிப்பு வந்துள்ளது. 33 ரூபாய்க்கு எத்தனை அடி கரும்பு கொள்முதல் செய்து, எத்தனை அடி பொதுமக்களுக்கு வழங்குவார்கள் என தெரியவில்லை. எத்தனை அடி கரும்பு வழங்கப்படுகிறது என்பதை கடையில் எழுதி வைக்க வேண்டும்.

திமுக அரசு பல்வேறு வரி உயர்வு, விலைவாசி உயர்வுக்கு பின்னர் அறிவித்த பொங்கல் பரிசு அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறி போலதான் உள்ளது" என்று கலகலப்பாக பேசினார்.