Published:Updated:

`கனவு இல்லம்' திட்டத்தில் 6 எழுத்தாளர்களுக்கு வீடுகள்; கலைஞர் பிறந்தநாளில் வழங்கிய முதல்வர்

கனவு இல்லம் திட்டத்தில் 6 எழுத்தாளர்களுக்கு வீடுகள்

"அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கப்படும்"

`கனவு இல்லம்' திட்டத்தில் 6 எழுத்தாளர்களுக்கு வீடுகள்; கலைஞர் பிறந்தநாளில் வழங்கிய முதல்வர்

"அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கப்படும்"

Published:Updated:
கனவு இல்லம் திட்டத்தில் 6 எழுத்தாளர்களுக்கு வீடுகள்

கடந்த ஆண்டு கலைஞரின் பிறந்தநாளில் எழுத்தாளர்களுக்கு வீடு கட்டித்தரும் கனவு இல்ல திட்டத்தை அறிவித்தார் தமிழக முதல்வர். "தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் தேசிய, மாநில மற்றும் உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கப்படும்" என அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதன்படி இந்த ஆண்டு கலைஞரின் பிறந்தநாளில் ஆறு எழுத்தாளர்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளது தமிழக அரசு. இதற்கான ஒதுக்கீடு ஆணைகளை இன்றைக்கு தமிழக முதல்வர் ஆறு எழுத்தாளர்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் வழங்கியுள்ளார்.

எழுத்தாளர் இமையம், ஈரோடு தமிழன்பன், எழுத்தாளர் புவியரசு, சுந்தரமூர்த்தி, பூமணி, மோகனராசு ஆகிய ஆறு எழுத்தாளர்கள் முதற்கட்டமாக கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றுள்ளனர்.

கனவு இல்லம்
கனவு இல்லம்

எழுத்தாளர் இமையம் 'செல்லாத பணம்' நாவலுக்காக 2020-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றார். இவருக்கு சென்னையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் தெற்காசியக் கூட்டமைப்பு விளையாட்டு கிராமக் கோட்டத்தில் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டிருக்கிறது.

அதே பகுதியில் எழுத்தாளர் பூமணிக்கும் வீடு வழங்கப்பட்டிருக்கிறது. பூமணி 2014-ல் 'அஞ்ஞாடி' என்கிற நாவலுக்கு சாகித்ய அகாதமி பரிசு பெற்றார். செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் கு. மோகனராசு அவர்களுக்கு அண்ணா நகரிலும், செம்மொழித் தமிழ் விருது பெற்ற முனைவர் இ. சுந்தரமூர்த்திக்கு கோயம்பேட்டிலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

2009-ல் சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் புவியரசுக்கு கோவை கணபதியில் வீட்டுவசதி பிரிவின் அடுக்குமாடி குடியிருப்பில் இல்லம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழின் முக்கிய படைப்பாளிகளுக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கும் அறிவிப்பு வந்து பல மாதங்களாக முடங்கி கிடந்த நிலையில் இப்பொது முதற்கட்டமாக வீடுகள் வழங்கியிருப்பதை எழுத்தாளர்கள் வரவேற்றுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism