Published:Updated:

கட்சி சின்னம் முடக்கம்: ``பணம் பெற்றுகொண்டு துரோகிகள் இதை செய்துள்ளனர்” - ஆதித்ய தாக்கரே காட்டம்

ஆதித்ய தாக்கரே

சின்னம் முடக்கப்பட்ட விவகாரத்தில் துரோகிகள் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு இதை செய்துள்ளனர் என்று ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

கட்சி சின்னம் முடக்கம்: ``பணம் பெற்றுகொண்டு துரோகிகள் இதை செய்துள்ளனர்” - ஆதித்ய தாக்கரே காட்டம்

சின்னம் முடக்கப்பட்ட விவகாரத்தில் துரோகிகள் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு இதை செய்துள்ளனர் என்று ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.

Published:Updated:
ஆதித்ய தாக்கரே

சிவசேனா யாருக்கு சொந்தம் என்ற போட்டி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே இடையே ஏற்பட்டுள்ளது. தங்களுக்குத்தான் சொந்தம் என்றும், தாங்கள்தான் உண்மையான இந்துத்துவாவை பின்பற்றுவதாக ஏக்நாத் ஷிண்டே தேர்தல் கமிஷனில் தெரிவித்திருந்தார். உத்தவ் தாக்கரேயும் தேர்தல் கமிஷன் கேட்ட தகவல்களை கொடுத்திருந்தார். இதையடுத்து தேர்தல் கமிஷன் நேற்று இரவு சிவசேனாவின் சின்னத்தை முடக்கி உத்தரவிட்டுள்ளது. கட்சியின் பெயரையும் இருவரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. தேர்தல் கமிஷனின் உத்தரவால் மும்பை சட்டமன்ற இடைத்தேர்தலில் தங்களது அணியின் செல்வாக்கை நிரூபிப்பதில் உத்தவ் தாக்கரேயிக்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் சின்னம் முடக்கப்பட்டது தொடர்பாக உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் ஷிண்டேயை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

கட்சி சின்னம் முடக்கம்: ``பணம் பெற்றுகொண்டு துரோகிகள் இதை செய்துள்ளனர்” - ஆதித்ய தாக்கரே காட்டம்

முதலில், ட்விட்டரில் ஷிண்டேயை விமர்ச்சித்து ஒரு பதிவு போட்டார். ஆனால் உடனே அதனை டெலீட் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் பதிவிட்டுள்ளார். அதில், ``கட்சியில் கலகத்தை உருவாக்கவும், பாஜகவுடன் கூட்டணி வைக்கவும் ஏக்நாத் ஷிண்டேயும், அவரது ஆதரவாளர்களும் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர். கோடிக்கணக்கில் பணம் பெற்ற துரோகிகள் சிவசேனாவின் சின்னம், பெயரை முடக்கும் கீழ்த்தரமான வெட்கக்கேடான செயலை செய்துள்ளனர். மகாராஷ்டிரா மக்கள் இதனை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். நாங்கள் போராடி வெற்றி பெறுவோம். நாங்கள் உண்மையின் பக்கம் இருக்கிறோம். உண்மை வெற்றி பெறும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அதோடு பால் தாக்கரேயின் முன்பாக உத்தவ் தாக்கரே நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் ஆதித்ய தாக்கரே பகிர்ந்துள்ளார். தேர்தல் கமிஷன் தற்காலிக தீர்ப்புதான் வழங்கி இருக்கிறது. இறுதி தீர்ப்பில்தான் யாருக்கு வில் அம்பு சின்னம் கிடைக்கும் என்பது தெரிய வரும்.