அலசல்
அரசியல்
கார்ட்டூன்
Published:Updated:

ஐடியா அய்யனாரு!

ஐடியா அய்யனாரு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா அய்யனாரு!

விலங்குகளைப் பேசவைக்க முயற்சி

நித்தியின் கைலாசாதான் இன்றைய தேதிக்கு வைரல். கைலாசாவில் `குடிமகன் ஆவது எப்படி?’, `குடித்தனம் நடத்துவது எப்படி?’ என கூகுளில் முட்டிமோதுகிறார்கள் முரட்டு சிங்கிள்ஸ். அவர்களுக்காக ஐடியா கொடுக்கிறான் இந்த அய்யனாரு!

  • வீடியோக்களில் அதிகம் முகம் காட்டத் தொடங்கிவிட்டார் நித்தி. நவீன தொழில்நுட்பத்துடன் வீடியோ எடுக்கக் கற்றுக்கொள்ளுங்கள். `நான் ஒரு பரதேசிய்யா, புறம்போக்குய்யா...’ என மோட்டிவேஷனல் வீடியோக்களை அடித்து துவம்சம்செய்கிறார். சீக்கிரமே, ‘லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க’ என்று சொன்னாலும் ஆச்சர்யமில்லை. வீடியோகிராபர்களை கைலாசாவுக்கு நிச்சயம் அழைப்பார் நித்தி. அதேசமயம், வீடியோகிராபர்கள் தங்களுக்கு ‘ஹிட்டன் கேமரா’ தொழில்நுட்பமும் தெரியும் என வாயைக்கொடுத்து வாய்ப்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

ஐடியா அய்யனாரு!
ஐடியா அய்யனாரு!
  • கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தெரிந்தவர்கள், பழைய நித்யானந்தா வீடியோக்களை எடுத்து டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி கிராஃபிக்ஸ் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுங்கள். நித்தி பேசினால் டிராகன்போல் வாயிலிருந்து தீயைக் கக்க வேண்டும். கண்களை உருட்டி முறைத்தால், மின்னல் வெட்ட வேண்டும். சிரித்தால், இடி இடிக்க வேண்டும். பாரதிராஜா பட க்ளைமாக்ஸ் காட்சிகளில் கடல் அலைகள் அப்படியே நின்றுவிடும். வானத்தில் பறவைக்கூட்டம் உறைந்து நிற்கும். நித்தி விரல்களைச் சொடுக்கினால் இப்படி காலத்தை ஸ்தம்பிக்கவைக்கும் காட்சிகளைப் பயன்படுத்தலாம். நித்தியே அசந்துபோய் அழைப்புவிடுப்பார்.

  • “நித்தியின் வழியில் விலங்குகளைப் பேசவைக்க முயற்சி செய்து வென்றுவிட்டேன். என் வீட்டு கன்றுக்குட்டி அதன் அம்மாவை `ம்ம்மாவ்வ்வ்...’ என்று அழைக்கிறது. என் பெயர் கி.கிச்சா. என் வீட்டு கிளி என்னை சுருக்கமாக `கிகி’ என்று அழைக்கிறது” என வீடியோ பேசி பதிவிடலாம்.

  • “இன்று காலை நித்யானந்தா கண் விழித்த நேரம் 5:05. ஏனென்றால், அந்த நேரத்தில்தான் இங்கு சூரியனும் உதயமானது” என அடித்துவிட்டு, நித்தியை ஆனந்தக்கண்ணீரில் ஆழத்தலாம். ‘நெருப்பாத்துல நீந்துறவன் இல்லடா... நெருப்பாறே நான்தான்டா’ போன்ற பன்ச் வசனகர்த்தாக்களும் தன் திறமையை நித்தியிடம் நிரூபிக்கலாம்.