Published:Updated:

அ.தி.மு.க ராஜ்ய சபா சீட்டும்... அதிரிபுதிரி லொள்ளு சபா மீட்டும்... ஒரு சுவாரஸ்யமான கற்பனை...

அ.தி.மு.க தலைவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க தலைவர்கள்

அதுக்காக உங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கணும்... ஒவ்வொருத்தரா சொல்லுங்க... கேட்போம்...

அ.தி.மு.க ராஜ்ய சபா சீட்டும்... அதிரிபுதிரி லொள்ளு சபா மீட்டும்... ஒரு சுவாரஸ்யமான கற்பனை...

அதுக்காக உங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கணும்... ஒவ்வொருத்தரா சொல்லுங்க... கேட்போம்...

Published:Updated:
அ.தி.மு.க தலைவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க தலைவர்கள்

`சங்கம் கூடுனாலே சலசலப்புக்குப் பஞ்சமிருக்காது’ என்பது அ.தி.மு.க-வுக்கென்றே அளவெடுத்துத் தைத்த புதுமொழி. தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருவர் எடக்கு மடக்காகப் பேச, இன்னொருவர் கோபத்தில் மேஜையைத் தட்ட, மற்றொருவர் கோபித்துக்கொண்டு வெளியேற, ஒருவர் போன் பண்ணி சமாதானம் செய்ய... என அங்கே நவரச நாடகங்கள் அரங்கேறும். காங்கிரஸ்காரர்களைப்போல வேட்டியை உருவ மாட்டார்கள் என்பதுதான் ஒரே வித்தியாசம்.

ஜூன் மாதம் ராஜ்ய சபா எம்.பி-க்களுக்கான தேர்தல் வேறு வருகிறது. எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க-வுக்கு இரண்டு எம்.பி சீட்டுகள் கிடைக்கலாம். ஆனால், போட்டியிலோ முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஜே.சி.டி.பிரபாகர், வளர்மதி, கோகுல இந்திரா, செம்மலை உள்ளிட்ட ஒன்றரை டஜன் பேர் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் ராஜ்ய சபா எம்.பி-யைத் தேர்ந்தெடுக்க ஒரு கூட்டம் நடந்தால் எப்படி இருக்கும்?


வழக்கமாக அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் என்றாலே துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமிதான் முதலில் பேசுவார். வழக்கத்துக்கு மாறாக இம்முறை வைத்திலிங்கம் மைக்கைப் பிடிக்க... ஆட்சேபிக்கிறார் சி.வி.சண்முகம்.

சி.வி.சண்முகம்: இருங்க... இருங்க... நீங்க ஏங்க முந்துறீங்க... ராஜ்ய சபா-ங்குற வார்த்தையை உச்சரிக்க உங்களுக்குத் தகுதியிருக்கா... அநியாயமா ஒரு எம்.பி பதவியைக் காலி பண்ணிட்டு... ச்சீ உட்காருங்க முதல்ல!

(இதுதான் வாய்ப்பென கே.பி.முனுசாமி மைக்கை வாங்கி ஏதோ பேச வாயெடுக்கிறார். அதற்குள் மைக்கைப் பறித்து...)

அ.தி.மு.க ராஜ்ய சபா சீட்டும்... அதிரிபுதிரி லொள்ளு சபா மீட்டும்... ஒரு சுவாரஸ்யமான கற்பனை...

வைத்திலிங்கம்: யோவ் சண்முகம்... ‘நிதானமா’ப் பேசுய்யா. ஏய்யா, ஒரு வருசம் பாக்கியிருந்தப்ப எம்.பி பதவியை ராஜினாமா பண்ணின எனக்கே தகுதியில்லைன்னா, அஞ்சு வருஷத்தைக் காலி பண்ணுன கே.பி.முனுசாமி மட்டும் சீட் கேட்கலாமா... என்ன சண்முகம், சத்தத்தையே காணோம்... எல்லாம் ஒரு கணக்கோடதான்யா இருக்கீங்க... உங்களுக்கெல்லாம் ஒருநாள் இருக்கு (என்றபடி ஓங்கி மேஜையைத் தட்ட, எம்.ஜி.ஆர் மாளிகை அதிர்கிறது).

வளர்மதி: தங்கத் தாரகை... புரட்சித்தலைவி கட்டிக்காத்த இயக்கத்தில் பெண்களுக்கு வாய்ப்பு...

ஓ.பி.எஸ்: (குறுக்கிட்டு) ஏம்மா இப்பதான் ஒரு மேஜையை டேமேஜ் ஆக்கியிருக்காரு... வன்முறையைத் தூண்டாம உட்காரும்மா. கடைசியாப் பேசலாம்.

எடப்பாடி பழனிசாமி: நீங்க இருங்கண்ணே... நானே பேசிடுறேன்.

ஓ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): நாம என்ன பேசுனாலும் டாமினேட் பண்றதே இந்த ஆளுக்கு வேலையாப்போச்சு. சின்னம்மா மட்டும் வரட்டும்...

எடப்பாடி பழனிசாமி: எதுக்காக உங்களுக்கு ராஜ்ய சபா சீட் கொடுக்கணும்... ஒவ்வொருத்தரா சொல்லுங்க... கேட்போம்...

ஜெயக்குமார்: சண்முகம்... நீங்க சொல்லுங்க?

சி.வி.சண்முகம்: ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா?

(‘கல்லூரி’ பட மாணவர் பாணியில் திரும்பத் திரும்ப இதையே பேசி வெறுப்பேற்றுகிறார்கள்)

ஜெயக்குமார்: சசிகலா ஒரு...

சி.வி.சண்முகம் : யோவ்... பழக்க தோஷத்துல உளறிக்கிட்டு இருக்காம விஷயத்துக்கு வாய்யா... மணி வேற 11 ஆச்சு... நீ பிரஸ் மீட் கொடுக்கணும்ல?

ஜெயக்குமார் : யப்பா சண்முகம்... நானாவது காலையில பதினொரு மணி.... நீ... சரி வேணாம் விடு... (எடப்பாடி - ஓ.பி.எஸ்-ஸைப் பார்த்து) இங்க பாருங்க அண்ணே, உங்க எல்லோரையும்விட தி.மு.க-வைக் கடுமையா விமர்சிக்கிறது நானும் சண்முகமும்தான். அதனால எங்க ரெண்டு பேருக்குமே அந்த சீட்டைப் பிரிச்சுக் கொடுத்துடுங்க... (என்றபடி புன்னகையுடன் சண்முகத்தைப் பார்க்கிறார்).

ஓ.பி.எஸ்: உங்களுக்கு சீட் வேணும்னா கேளுங்க. அவருக்கு அவர் கேட்க மாட்டாரா... ஏன்யா ஜோடி போடுறீங்க... ஜோடி?

ஜெயக்குமார்: ஜோடியா பதவிக்கு வர்றதைப் பத்தி நீங்க ரெண்டு பேரும் பேசினா சிரிப்புதான்ணே வருது... இதைத்தான் தலைவர் ஒரு பாட்டுல... (அவர் பாட, எல்லோரும் காதைப் பொத்திக்கொள்கிறார்கள்)

பொன்னையன் : மிகச்சிறப்பா ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை நடத்தி முடிச்ச ஆளுமைமிக்க ஆணையாளர்ங்கிற முறையில எனக்கு ஒரு எம்.பி பதவியைக் குடுத்தா...

ஜெயக்குமார்: ஐயோ அண்ணே... தயவுசெஞ்சு உட்காருங்கண்ணே... சிரிச்சு முடியலை.

வளர்மதி: கட்சிக்காக எத்தனையோ தியாகங்களைச் செஞ்சுட்டு இன்னைக்கு...

(பலத்த சிரிப்பொலி)

கோகுல இந்திரா: அக்கா... வீட்டுல சாப்பிட்டுட்டு படுத்துத் தூங்குறது எப்பக்கா தியாகத்துல சேர்ந்துச்சு... ஓ... அந்த தியாகத்தலைவியை வெச்சு சொல்றீங்களா... நான் கட்சிக்காக எத்தனை கூட்டங்கள், எத்தனை போராட்டங்கள்...

வளர்மதி: ஏம்மா பியூட்டி பார்லர் போயி விதவிதமா ஹேர் ஸ்டைல் மாத்துறதுதான் கட்சிப்பணியாம்மா?

இந்த ‘ஸ்டேண்ட்-அப்’ காமெடியில் கூட்டமே மெய்மறந்து சிரித்துக்கொண்டிருக்க, ஜே.சி.டி.பிரபாகர் மட்டும் ஏக்கத்தோடு ஓ.பி.எஸ்-ஸையே பார்க்கிறார். அவர் திரும்பிப் பார்த்தாலும், வழக்கம்போல் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் இருக்கிறார். இந்தக் காட்சியால் சமீபத்தில் வைரலான விஜய் - நெல்சன் மீம்ஸ் அனைவருக்கும் நினைவுக்கு வர... மீண்டும் சிரிப்பலை.

ஜே.சி.டி.பிரபாகர் (மைண்ட் வாய்ஸ்) : இவர் என்னைக்குப் பேசி... நாம பதவி வாங்கி... அவரோட ரெண்டாவது பையனுக்கு வேணுமுன்னா பேசுவாரு... இவரை நம்பி வந்த எம்.பி-க்களுக்கே பட்டையைப் போட்டவரு...

அ.தி.மு.க ராஜ்ய சபா சீட்டும்... அதிரிபுதிரி லொள்ளு சபா மீட்டும்... ஒரு சுவாரஸ்யமான கற்பனை...

மாஃபா பாண்டியராஜன்: இன்னைக்கு உள்ள சூழ்நிலையில நாடாளுமன்றத்துல நம்மளோட குரல் வலுவா ஒலிக்க, ஆங்கிலப் புலமையுள்ள ஆள்... (எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே...)

சி.வி.சண்முகம்: யோவ்... நீ எதுக்காக டெல்லி போக ஆசைப்படுறேன்னு எனக்குத் தெரியாதா... பழைய பாசம். பாரேன் டி.ஜே... நாம நாக்குத்தள்ள கத்திக்கிட்டு இருக்கோம். இந்த ஆளு எப்ப கட்சிக்குள்ள வந்து, எப்படி அமைச்சரானாருன்னே தெரியலை... இதுல ராஜ்ய சபா சீட்டும் வேணுமாம்ல..

எடப்பாடி பழனிசாமி: என்னைப் பொறுத்தவரையில் கட்சி தற்போதுள்ள சூழ்நிலையில் அண்ணன் செம்மலை அவர்களை ஒரு எம்.பி-யாக... (எனப் பேசிக்கொண்டிருக்கும்போதே கூச்சல், குழப்பம் எழுகிறது)

ஓ.பி.எஸ்: என்னுடைய அணியில் இருந்தார் என்கிற ஒரே காரணத்துக்காக அவரை ஓரங்கட்டி, இன்று உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்பதற்காக சீட்டா... பரவாயில்லை இந்த அவமானம் எனக்குப் புதுசா... அண்ணன் செம்மலைக்கே கொடுத்துடலாம். என்னோட பங்கா ஒரு சீட்டைக் கொடுத்துட்டீங்கண்ணா... (ஜே.சி.டி.பிரபாகர் முகம் மலர்கிறது). அதை மாஃபாவுக்கு கொடுத்துடுவேன்.

ஏமாந்துபோன ஜே.சி.டி.பிரபாகர் கோபமாக வெளியேற... “இருய்யா... எனக்குன்னு இருக்குற ஒரே ஆதரவாளர் நீதான்... நீயும் போயிட்டா எப்படி... இத்தனை வருஷம் என்கூட இருந்தும் உனக்கு மட்டும் எப்படிய்யா ரோஷம்லாம் வருது?!” என்று பின்தொடர்கிறார்.

சி.வி.சண்முகம்: யோவ் டி.ஜே... நீ எங்கேய்யா போற... இருய்யா...

ஜெயக்குமார், ``இரு சண்முகம்... பிரஸ் மீட் கொடுத்துட்டு வந்துடுறேன்...’’ என அவரும் கிளம்ப, வழக்கம்போல எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் கலைகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism